நளபாகத்தில் நற்பெயர் ஈட்டும் சமையல் கலைஞர்

துணிச்சலுடன் பணியிடை மாற்றம் செய்து தன்னம்பிக்கையுடன் புதிய தொழிலில் தனிமுத்திரை பதித்துவரும் முன்மாதிரி இளையர்

திவ்யா தாக்‌ஷாய்னி

சிறு வய­தில் சமை­யல் அறையை எட்­டிக்­கூடப் பார்த்­தி­ராத ஜெய் கணேஷ், 33, தற்­போது எண் 56, டிராஸ் ஸ்தி­ரீட்­டில் அமைந்­துள்ள ரிவால்­வர் நவீன இந்­திய உண­வ­கத்­தில் சமை­யல் கலை­ஞ­ரா­கப் பணி­பு­ரி­கி­றார்.

ராணு­வத்­தில் கிட்­டத்­தட்ட எட்டு ஆண்­டு­கள் பணி­பு­ரிந்த இவ­ருக்கு சமை­யல் கலை­மீ­தான அலாதி விருப்­ப­மும் ஆர்­வ­மும் பணி­யிடை மாற்­றத்­துக்கு உந்­து­தல்­க­ளாய் இருந்­தன. கடந்த ஈராண்­டு­க­ளாக கணேஷ் இந்­தத் துறை­யில் ஈடு­பட்­டுள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் பட்­டக்­கல்வி படிக்­கச் சென்­ற­போது, தின­மும் கடை­யில் சாப்­பி­டு­வது கட்­டுப்­ப­டி­யா­காது என்­ப­தால் சமைத்­துச் சாப்­பிட முடி­வெ­டுத்­தார் கணேஷ்.

'மேகி' போன்ற உடனடியாகத் தயாரிக்கக்கூடிய உண­வு­வ­கை­களை மட்­டுமே சமைக்­கத் தெரிந்­தி­ருந்த கணே­ஷிற்கு இணை­யம் உத­வி­யது. தாயா­ரு­டன் இணையக் காணொளி அழைப்பில் தொடர்­பு­கொண்டு உணவு செய்­மு­றை­களைக் கற்­றுக்­கொண்­டார்.

முதல்­மு­றை­யாக சமைத்த இறைச்­சிக் கறி ருசி­யாக இல்­லா­விட்­டா­லும் அது கணே­ஷிற்கு சமை­யல்மேல் உள்ள ஆர்­வத்­தைத் தூண்டி­விட்­டது. சமையல் திறன்­களை வளர்த்­துக்­கொண்டு உற­வி­னர்­கள் நண்­பர்­கள் என்று பலருக்­கும் சமைத்­துத் தந்­தார்.

நிலை­யான ராணுவ வேலை, நல்ல ஊதி­யம் ஆகியவற்றைக் கைவிட்டு சமை­யல் துறை­யில் சேர கணேஷ் தன் விருப்­பத்தைத் தெரி­வித்­த­போது பெற்­றோர்­ சற்று தயக்­கம் காட்­டி­னர்.

எனி­னும், யோசிக்­கா­மல் கணேஷ் இந்த முடிவை எடுத்­தி­ருக்­க­மாட்­டார் என்­ப­தால் அவ­ருக்கு ஆத­ர­வாக இருந்­த­னர்.

ஒரு நாளில் கிட்­டத்­தட்ட 12 மணி நேரத்­திற்குமேல் வேலை செய்­யும் கணேஷ் பெரும்­பா­லான நேரம் வீட்­டில் இருப்­ப­தில்லை.

இருந்­தா­லும் இவரின் மனைவி இந்தத் துறை­யில் தன் கண­வர் சிறந்து விளங்கவேண்­டு­ம் என்ற விருப்­பத்­தில் ஊக்­கம் கொடுத்து பெரும் ஆத­ர­வாக இருக்­கி­றார்.

நல்ல தலை­மைத்­து­வம் முக்­கி­யம் என்று நம்­பும் கணேஷ், சமை­யல் கலை­ஞர்­கள் ராபின் விங், சௌரப் உடி­னியா, ஃபரிஸ் ராம்லி ஆகி­யோ­ரைத் தனது முன்­மாதிரிகளாகக் கரு­து­கி­றார்.

எளி­மை­யான குடும்­பத்­தி­ல் வளர்ந்த காற்பந்தாட்ட வீரர் கிறி ஸ்­டி­யானோ ரொனால்­டோ­வின் மனப்­பான்மை, இலக்­கு­களை நோக்கிய கடின உழைப்பு­, விடா­மு­யற்­சி ஆகிய பண்புகளை ரசிக்­கும் கணேஷ் தானும் அவ­ரைப்­போல் உழைத்து இலக்கை எட்ட வேண்­டும் என்று ஒவ்­வொரு வார­மும் ஒரு புதிய உணவை சமைத்துப் பார்க்­கி­றார்.

இன்­னும் ஐந்து ஆண்­டு­களில் ஒரு நவீன, மேற்­கத்­திய இந்­திய உண­வ­கத்­தின் உரி­மை­யா­ள­ராக வேண்­டும் என்­பது இவ­ரின் கனவு.

இந்­திய உண­வைச் சமைப்­ப­தில் கைதேர்ந்த பிறகு பிரெஞ்சு உணவு வகை­க­ளை­யும் கடந்த ஓராண்­டாக சமைத்­து­வ­ரு­கி­றார் கணேஷ். தான் சமைத்த உணவை மற்­ற­வர்­கள் மகிழ்ச்­சி­யாக ருசித்­துச் சாப்­பி­டு­வது மன நிறை­வைத் தரு­வ­தா­கக் கூறி­னார் கணேஷ்.

மாஸ்­டர் செஃப் போட்டி அனு­ப­வம்

மாஸ்­டர் செஃப் சமை­யல் போட்­டிக்கு விண்­ணப்­பிக்க அழைப்பு விடுக்­கப்­பட்­ட­போது கணே­ஷின் பெற்­றோர், நண்­பர்­கள் எனப் பல­ரும் அவரை பங்­கேற்­கச் சொல்லி வலி­யு­றுத்­தி­னர்.

முத­லில் தயங்­கிய கணேஷ் விண்­ணப்­பிக்க வேண்­டிய இறுதி நாளில் இறுதி நிமி­டத்­தில் போட்டிக்குப் பெய­ரைப் பதிந்­து­கொண்­ட­தா­கக் கூறி­னார்.

இந்­தப் போட்­டி­யில் இரண்டு தரு­ணங்­கள் மறக்­க­மு­டி­யா­தவை என்­றார் அவர். ஃபுல்லர்ட்­டன் ஹோட்­ட­லில் நடை­பெற்ற குழுப் போட்­டி­யில், ஒரு குழு மேற்­கத்­திய உணவு வகை­க­ளை­யும் இன்­னொரு குழு ஆசிய உணவு வகை­க­ளை­யும் கொடுக்­கப்­பட குறு­கிய நேரத்­தில் தயா­ரிக்க வேண்­டும்.

ஆசிய உணவு வகை­யைத் தயா­ரித்த கணே­ஷின் குழு, எதி­ர­ணியை வீழ்த்த முடி­யாது என்று நினைத்­துக்­கொண்­டி­ருந்த நேரத்­தில், அதிக வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற்­றது தன்­னால் மறக்­க­மு­டி­யாத தரு­ணம் என்­றார் கணேஷ்.

மற்­றொரு தரு­ணத்­தில், இனிப்­புப் பண்­டங்­கள் செய்­வ­தில் அதி­கம் அனு­ப­வம் இல்­லாத நிலை­யில், தான் செய்த இனிப்­புப் பண்­டத்தை ருசித்த போட்டி நடு­வர் மிக­வும் பாராட்­டி­ய­தைப் பகிர்ந்­து­கொண்­டார் கணேஷ்.

வாழ்க்­கை­யைப் புரட்­டிப் போட்ட அனு­ப­வ­மாக மாஸ்­டர் செஃப் போட்டி கணே­ஷுக்கு அமைந்­தது.

பல புதிய நண்­பர்­க­ளை­யும் வாய்ப்­பு­க­ளை­யும் அங்­கீ­கா­ரத்­தை­யும் அவ­ருக்­குப் பெற்­றுத் தந்­தது.

உணவு 'பாப் ஆப்' நிகழ்ச்சி

தங்­கள் சமை­யல் திறன்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு சமை­யல் வல்­லு­நர்­கள் பல­ரும் 'பாப் ஆப்' நிகழ்ச்சி நடத்­து­வர்.

அந்த வகை­யில், கடந்த ஜன­வரி 17 முதல் 19ஆம் தேதி வரை, கணே­ஷும் ராபின் விங்­கும் இணைந்து 16 வகை­யான இந்­திய உணவு வகை­களை நவீன பாணி­யில் படைத்­தி­ருந்­த­னர்.

செட்­டி­நாடு இறால் தோசை டாக்கோ, நண்டு பிரி­யாணி, 'லோப்ஸ்­டெர்' எனப்­படும் இறால் ரசம் என கண்­க­ளுக்­கும் வயிற்­றுக்­கும் விருந்­த­ளிக்­கும் விதத்­தில் இருந்­தது இவர்­க­ளது உண­வுப் பட்­டி­யல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!