படிப்பிலும் தொழிலிலும் சிறந்து விளங்கும் பல்கலைக்கழக மாணவர்

படிப்பிலும் தொழிலிலும் சிறந்து விளங்கும் பல்கலைக்கழக மாணவர்

1 mins read
6a1e6dbc-0d3e-4ed0-a29a-726185e445da
-

தேசிய சேவை­யின்­போது வார இறுதி நாள்­க­ளைப் பய­னுள்ள முறை­யில் செல­விட எண்ணி, தொடக்­கக்­கல்­லூரி நண்­பர்­க­ளோடு சேர்ந்து வணி­கத்­தில் இறங்­கி­னார் இளை­யர் பிர­ணவ் கிருஷ்ண பிர­சாத் (படம்).

சென்ற ஆண்டு மத்­தி­யில் 'பைலெ­ஃப்ட்' எனும் அலு­வ­லக வச­திச் சேவையைத் தொடங்­கி­னார். சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் அவற்­றின் அலு­வ­லக இடத்­தை­யும் வளங்­க­ளை­யும் பயன்­ப­டுத்­தாத நேரங்­களில், தேவைப்­படும் நிறு­வ­னங்­கள் அவற்­றைக் குறைந்த செல­வில் பயன்­ப­டுத்த உத­வு­கிறது இச்­சேவை. இத­னால் இரு­த­ரப்­பி­ன­ரும் செல­வைக் குறைத்து பயன்­பெற முடி­கிறது.

சேவை­யைப் பயன்­ப­டுத்த தள­வா­டக் கட்­ட­ணம் விதிப்­ப­தன் மூலம், பிர­ண­வும் குழு­வி­ன­ரும் லாபம் ஈட்­டு­கி­றார்­கள்.

மேலும், சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்­கும் பணி­களில் ஈடு­பட்டு வரும் நண்­ப­னின் வணி­கத்­துக்­கும் உத­வு­கி­றார் பிர­ணவ்.

இவ­ரது 'பைலெஃப்ட்' நிறு­வனத்­திற்கு மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை ஒரு சவா­லாக இருக்­கின்­றது. வர்த்­தக ஆலோ­ச­க­ரா­கப் பணி­யாற்­றும் பிர­ண­வின் தந்தை, இவ­ருக்­குத் தொழில் சார்ந்த ஐயங்­க­ளைத் தீர்த்து வைக்­கி­றார்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இரண்­டாம் ஆண்டு வணி­கம் பயி­லும் பிர­ணவ், படிப்­போடு தொழி­லி­லும் கவ­னம் செலுத்­தும் இளை­யர்­க­ளுக்கு ஒரு முன்­மா­திரி என்­றால் மிகை­யில்லை.

'பைலெ­ஃப்ட்' சேவையை, அடுத்த ஆண்­டுக்­குள் தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளுக்­கும் ஆறு ஆண்­டு­க­ளுக்­குள் உல­கம் முழு­வ­தும் விரி­வு­ப­டுத்­து­வது இவ­ரது இலக்கு.

செய்தி: அனுஷா செல்வமணி