தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எலிசபெத் அரசியாருடன் கடிதத் தொடர்பில் சிங்கப்பூரர்

1 mins read
4cc0f466-a177-4c25-9612-9d05fda86bcb
அரசியார் வாழ்த்துடன் வந்த கடிதங்கள். படம்: கண்ணன் -

ஆ. விஷ்ணு வர்­தினி

எலி­ச­பெத் அர­சி­யா­ரு­டன் கிட்­டத்­தட்ட ஐந்து ஆண்­டு­க­ளுக்கு கடி­தத் தொடர்­பில் இருந்­துள்­ளார் திரு அ. கண்­ணன். கடி­தம் எழு­தத் தொடங்­கி­ய­போது பதில் வரும் என அவர் எதிர்­பார்க்­க­வில்லை. அர­சி­யா­ரு­டன் தொடர்­பு­கொண்­டதை அணுக்­க­மான அனு­ப­வ­மா­கக் கருது­கி­றார் பொதுப்­ப­ணித்­துறை ஊழி­ய­ரான இவர்.

உயர்­நி­லைப் பள்­ளிக் காலத்­தில் இருந்தே இங்­கி­லாந்­தின் அரச குடும்­பத்­தி­ன­ரைப் பற்­றிய செய்­தி­களை வாசித்­து­ வந்­தார் கண்­ணன். 2017ல் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சில் வெளி­வந்த ஒரு செய்தி மூலம், கடி­தம் எழு­து­வோ­ருக்கு அரச குடும்­பத்­தி­னர் பதி­ல­ளித்­த­தைத் தெரிந்­து­கொண்­டார்.

சோதனை முயற்­சி­யாக கடி­தம் எழு­திய அவ­ருக்கு, இன்ப அதிர்ச்­சி­யாக ஓரிரு மாதம் கழித்து பதில் வந்­தது. தனிப்­பட்ட உத­வி­யா­ளர், அர­சி­யா­ரின் வாழ்த்­து­களை அதில் தெரி­வித்­தி­ருந்­தார். ஒவ்­வோர் ஆண்­டும் அர­சி­யா­ருக்கு கிறிஸ்­து­மஸ் வாழ்த்­தட்­டை­ அ­னுப்­பு­வது அப்­போ­தி­லி­ருந்து கண்­ண­னின் வழக்­க­மா­னது. அர­சி­யா­ரின் மாளி­கை­யி­லி­ருந்து வரும் பதில்­கள் ஒவ்­வொன்­றும் தனிப்­பட்­ட­தாக இருந்­த­தைக் கண்டு அவர் மகிழ்ச்­சி­ய­டைந்­தார். முத­லில் கண்­ணனை நம்­பாத அவ­ரது நண்­பர்­கள், பின்­னர் தாங்­களே கடி­தம் எழுதி பதில்­கள் பெற்­ற­போது வியந்­து­போ­யி­னர்.

"அர­சி­யா­ரின் மறைவு அதிர்ச்­சி­யா­க­வும் சோக­மா­க­வும் உள்­ளது. இனி அவ­ருக்­குக் கடி­தம் எழுத முடி­யாது என்­ப­தில் வருத்­தமே. ஆயி­னும், தொடர்ந்து அரச குடும்­பத்­தி­ன­ருக்கு கிறிஸ்­து­மஸ் வாழ்த்து அனுப்­பு­வேன்," என்­றார் 57 வயது கண்­ணன். முன்­ன­ரும் இள­வ­ர­சர்­க­ளுக்கு அவர் கடி­தம் எழுதி பதில் பெற்றது உண்டு.