'எஃப்1' பந்தயத்தில் தொண்டூழிய அனுபவம்

2 mins read
6807082d-8e0a-4472-a83e-58dc362f4051
'எஃப்1' கார் பந்தய தொண்டூழிய அனுபவம், நிகழ்ச்சி மேலாண்மை குறித்த அம்சங்களைக் கற்றுத் ்தந்ததாகக் கூறுகிறார் சிரஞ்சீவி இளஞ்சேரன்.படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம் -

மாதங்கி இளங்­கோ­வன்

'ஐடிஇ காலேஜ் சென்ட்­ர­லில்' நிகழ்ச்சி மேலாண்­மைத் துறை­யில் பயில்­கி­றார் 18 வயது சிரஞ்­சீவி இளஞ்­சே­ரன். 'எஃப்1' இர­வு­நேர கார் பந்­த­யத்­தில் தொண்­டூ­ழி­யம் செய்­யும் 900க்கும் மேற்­பட்ட தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழக மாண­வர்­களில் இவ­ரும் ஒரு­வர்.

இரண்டு மாதங்­க­ளாக சக மாண­வர்­க­ளோடு இவ்­வாண்­டின் 'எஃப்1' பந்­தய ஏற்­பா­டு­களில் பங்­கெ­டுக்­கும் இவர், பார்­வை­யா­ளர் பகு­தி­யில் வழி­காட்­டி­யா­கத் தொண்­டூ­ழி­யம் செய்­கி­றார். 'எஃப்1' ரசி­கர்­க­ளின் நுழை­வுச்­சீட்­டு­க­ளைச் சரி­பார்ப்­ப­தும் அவர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட இருக்­கை­களில் அமர வழி­காட்­டு­வ­தும் இவ­ரு­டைய பணி­களில் சில.

சக மாண­வர்­க­ளோடு சேர்ந்து தொண்­டூ­ழி­யம் செய்­வது உற்­சா­கம் தரு­வ­தா­க­வும் இத­னால் தங்­கள் நட்பு வலு­வ­டைந்­தி­ருப்­ப­தா­க­வும் கூறி­னார் சிரஞ்­சீவி.

கூட்­டத்தை எவ்­வாறு சமா­ளிப்­பது, தடங்­கல் ஏற்­பட்­டா­லும் பெரிய அள­வி­லான நிகழ்ச்­சி­க­ளைத் தொடர்ந்து நடத்த எம்­மா­தி­ரி­யான முயற்­சி­களை மேற்­கொள்­ள­வேண்­டும் என்­பன போன்ற அத்­தி­யா­வ­சிய அம்­சங்­களை இத்­தொண்­டூ­ழிய அனு­ப­வம் கற்­றுக்­கொ­டுத்­த­தாக இவர் கூறி­னார்.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கங்­க­ளின் நிகழ்ச்சி மேலாண்­மைத் துறை, சுற்­று­லாப் பய­ணத்­துறை, வர்த்­த­கத் துறை, கட்­ட­டக்­கலை தொழில்­நுட்­பத் துறை, 'புரொ­டக்ட்' வடி­வ­மைப்­புத் துறை ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த மாண­வர்­கள் இவ்­வாண்­டின் 'எஃப்1' பந்­த­யத்­தில் தொண்­டூ­ழி­யர்­க­ளாக உத­வு­கி­றார்­கள். இவர்­களில் 50 பேர் கொடி­களை ஏந்­து­வார்­கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

மாண­வர்­க­ளுக்கு தர­மிக்க வேலை அனு­ப­வத்தை வழங்­கும் நோக்­கில் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­க­மும் சிங்­கப்­பூர் 'ஜிபி'யும் 2009ஆம் ஆண்டு முதல் இணைந்து பணி­யாற்றி வரு­கின்­றன.

இந்­தக் கூட்­டு­மு­யற்சி இன்­னும் ஏழு ஆண்டு நீடிக்­கும்.

இது­வரை 10,000 மாண­வர்­கள் இத்­திட்­டத்­தின் மூலம் தொண்­டூ­ழி­யம் செய்­துள்­ள­னர்.

mathangielan@sph.com.sg