லிஷாவின் புத்தாக்கமிக்க தீபாவளிக் கொண்டாட்டம்

அனுஷா செல்­வ­மணி

லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­துக்கு நேற்று சென்­றி­ருந்த பலர் புரா­ணக் கதா­பாத்­தி­ரங்­க­ளான ராதை, கிருஷ்­ணன், நர­கா­சு­ரன் ஆகி­யோ­ரைப்­போல வேட­ம­ணிந்­தோ­ரு­டன் படம் எடுத்­துக்­கொண்­டார்­கள்.

கிளைவ் ஸ்தி­ரீட்­டில் இருக்கும் 'பொலி' திறந்­த­வெ­ளி­யில், குடும்­பங்­கள் ஈடு­ப­டக்­கூ­டிய வகை­யில் விளை­யாட்டு நிகழ்ச்­சி­கள் நடை­பெற்­றன.

தீபா­வ­ளிக் கொண்­டாட்­டத்தை முன்­னிட்டு இந்த ஆண்டு புத்­தாக்க முறை­யி­லான நிகழ்ச்­சி­களுக்கு லிஷா எனப்­படும் இந்­திய வர்த்­த­கர்­கள் மர­பு­டை­மைச் சங்­கம் நேற்று ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

புரா­ணக் கதா­பாத்­தி­ரங்­க­ளைப் போல் ஆடை­ய­ணிந்த மூவர், கேம்­பெல் லேனி­லும், சிராங்­கூன் சாலை­யி­லும் நேற்­றுப் பிற்­ப­கல் ஒரு மணி முதல் இரவு எட்டு மணி வரை வரு­கை­யா­ளர்­களை மகிழ்­விக்க வலம்­வந்­த­னர்.

பொது­மக்­கள் பல­ரும் இவர்­களோடு சேர்ந்து புகைப்­ப­டம் எடுத்­துக்­கொள்ள ஆர்­வத்­து­டன் திர­ளா­கச் சூழ்ந்­து­கொண்­டார்­கள்.

நேற்று பிற்­ப­க­லில் பொழிந்த கனத்த மழை­யை­யும் பொருட்­படுத்தா­மல், 'பொலி' திறந்­த­வெளி­யில் அமைக்­கப்­பட்ட கூடா­ரத்­தில் பலர் குடும்­பத்­தோடு விளை­யாட்டு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

காலை பத்து மணிக்­குத் தொடங்­கிய விளை­யாட்­டு­க­ளோடு ஆடல், பாடல் எனப் பல கலை நிகழ்ச்சி­களும் நடந்­தே­றின.

"என் சகோ­த­ரி­யின் மக­ளு­டன் இந்த விளை­யாட்­டு­களில் கலந்து­கொண்­டது மிக­வும் உற்­சா­க­மாக இருந்­தது. இது­போன்ற குடும்ப விளை­யாட்­டு­கள் எங்­க­ளுக்கு இடை­யி­லான பிணைப்பை மேம்­படுத்­தி­யுள்­ளது. கலை­நி­கழ்ச்சி படைத்­த­வர் மிக­வும் நகைச்­சு­வை­யா­கப் பேசி­யது எங்­க­ளைச் சிரிப்­பில் ஆழ்த்­தி­யது," என்­றார் 24 வய­தா­கும் செல்வி ஈஸ்­வரி.

"கொவிட்-19 நோய்த்­தொற்­று கார­ண­மாக கடந்த ஈராண்­டு­க­ளாக தீபா­வ­ளியை வீட்­டிற்­குள்­ளேயே கொண்­டா­டி­னோம். இவ்­வாண்டு திறந்­த­வெ­ளி­யில் இத்­த­கைய நிகழ்ச்சி நடை­பெ­று­வதை அறிந்து, நானும் என் பிள்­ளை­களும் காலை­நே­ரத்­தி­லேயே 'பொலி' திறந்­த­வெளிக்கு வந்­து­விட்­டோம்.

"சமூக உணர்­வோடு ஏற்­பாடு செய்­யப்­பட்­டிருக்கும் இந்­த நி­கழ்ச்சி எனக்கு மிக­வும் மகிழ்ச்சி அளிக்­கிறது," என்று கூறி­னார் 34 வய­தா­கும் திரு­மதி லட்­சுமி முரு­கப்­பன்.

sanush@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!