‘ஆச்சார்ய ரத்னா’ விருதுபெற்ற முதல் சிங்கப்பூரர்

மோன­லிசா

முது­பெ­ரும் இந்­திய இசைக்­க­லை­ஞர் டி.வி.கோபா­ல­கி­ருஷ்­ணன், 1984ஆம் ஆண்டு தோற்­று­வித்த இந்­திய இசை, கலைக்­க­ழ­கம் இசைத்­து­றை­யில் சிறந்த தொண்­டாற்­றும் கலை­ஞர்­க­ளுக்கு ஆச்­சார்ய ரத்னா எனும் விருதை வழங்கி கௌர­வித்து வரு­கிறது.

இந்­திய இசைத்­து­றை­யில் உய­ரிய விரு­து­களில் ஒன்­றா­கக் கரு­தப்­படும் இவ்­வி­ருது அண்­மை­யில் சிங்­கப்­பூர் இசைக்­க­லை­ஞ­ரான லலிதா வைத்­தி­ய­நா­த­னுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இசைத்­து­றை­யில் 40 ஆண்­டு­களுக்­கு­மேல் ஈடு­பட்­டுள்ள இவர் இவ்­வி­ரு­தைப் பெற்ற முதல் சிங்­கப்­பூ­ரர் ஆவார். அண்­மை­யில் இந்­தி­யா­வில் நடை­பெற்ற விழா­வில், திரு. டி.வி. கோபா­ல­கி­ருஷ்­ணன் இவ்­வி­ருதை திரு­வாட்டி லலி­தா­விற்கு வழங்­கி­னார்.

இசையை மக்­க­ளி­டம் எடுத்­துச்­செல்­லும் கரு­வி­யாக 'ஆர்­கெஸ்ட்ரா' எனும் பல்­லி­சைக் குழு­வைக் கரு­தும் திரு­வாட்டி லலிதா, மக்­கள் கழ­கத்­தின் சிங்­கப்­பூர் இந்­திய பல்­லிசை, பாட­கர் குழுவை 1985ஆம் ஆண்­டில் அது நிறு­வப்­பட்­டது முதல் வழி­ந­டத்தி வரு­கி­றார்.

இக்­கு­ழு­வின் மூலம், இந்­திய இசை­யைப் பிர­தி­நி­தித்­தும் கர்­நாடக இசை­யை­யும் பிற இந்­திய இசை­க­ளை­யும் இணைத்து 'ஃபியூஷன்' முறை­யி­லும் பல்­வேறு இசைக் கச்­சே­ரி­க­ளை­யும் நிகழ்ச்­சி­க­ளை­யும் இவர் அரங்­கேற்­றி­னார்.

மேலும் 1991ஆம் ஆண்டு சென்­னை­யில் நடை­பெற்ற இசைத் திரு­வி­ழா­வில் பங்­கு­கொண்டு நிகழ்ச்சி படைத்த முதல் சிங்­கப்­பூர் பல்­லி­சைக்­குழு என்­னும் பெருமை இக்­கு­ழு­வைச் சாரும்.

திரு­வாட்டி லலிதா, சிங்­கப்­பூ­ரின் பல இன, பல சமய நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தும் வித­மாக இந்­திய இசை­யு­டன் சீன மலாய் இசைக்­க­ரு­வி­களை இணைத்து நிகழ்ச்­சி­கள் நடத்­தி­யுள்­ளார். பிற­நாட்டு இசைக் கலை­ஞர்­க­ளு­டன் இணைந்து கலையை வளர்க்­கும் நோக்­கில் 'லலி­தாஞ்­சலி' என்­னும் கலைப்­பி­ரிவை 2015ஆம் ஆண்­டில் தோற்­று­வித்­தார்.

கல்வி அமைச்­சின் 'மியூ­சிக் லூப்ஸ் புரொ­ஜெக்ட்' திட்­டத்­தில் இந்­திய இசைக்கு மேற்­பார்­வை­யா­ள­ரா­கச் செயல்­பட்ட இவர், "இந்த விருது எனக்கு மிகுந்த ஊக்­கம் அளிக்­கிறது. தொடர்ந்து இசைக்­குத் தொண்­டாற்ற வேண்­டும் என்ற உந்­து­த­லும் இந்­திய இசை­யின் ஆளு­மையை அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு உணர்த்தி, கற்றுத்தர வேண்­டும் என்ற ஆர்­வ­மும் மேலோங்­கு­கிறது," என்று கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!