சிறந்த இசைக் கலைஞர் விருதை வென்ற ஷபீர்

உள்­ளூர் இசைக்­க­லை­ஞர்­கள், பாட­கர்­கள், பாட­லா­சி­ரி­யர்­கள், இசை­ய­மைப்­பா­ளர்­கள் முத­லி­யோ­ரின் சாத­னை­களை ஊக்­கு­விக்­கும் வண்­ணம் கடந்த 25 ஆண்­டு­க­ளாக காம்­பஸ் விருது நிகழ்ச்சி நடத்­தப்­படுகிறது. இதில் இம்­முறை விருதை வென்­றுள்­ளார் முன்­னணி உள்­ளூர் இசைக்­க­லை­ஞ­ரான ஷபீர் தபாரே ஆலம் (படம்).

தனது 17 ஆண்­டு­கால கலைத்­து­றைப் பய­ணத்­திற்கு கிடைத்த அங்­கீ­கா­ர­ம் இது எனக் கூறிய ஷபீர், சிங்­கப்­பூ­ரில் இந்­திய, தமிழ் இசைப் படைப்­பு­களும் படைப்­பாளர்களும் அதி­க­ரிக்­க­வேண்­டும் என்­றார்.

விரு­த­ளிப்பு நிகழ்ச்­சி­யில் கலா­சார, சமூக, இளை­யர் மற்­றும் வர்த்­தக, தொழில் அமைச்­சு­க­ளின் துணை அமைச்­சர் லொ யென் லிங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து­கொண்­டார்.

இசைத்துறையில் தான் கற்க வேண்டி­யது ஏரா­ளம் என்ற ஷபீர், தன் இசை­யில் புதிய தொழில்­நுட்ப உத்­தி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தோடு வாழ்க்­கை­யின் சாரத்­தைப் பிர­தி­ப­லிக்­கும் பாடல் வரி­களை உரு­வாக்­க­வும் முயல்­வ­தா­க சொன்னார்.

'யாயும் யாயும்' எனும் திரைப் பாடல் மூலம் தமிழ் இலக்­கி­யத்தை உயர்த்­திப் பிடித்த இவர், 'சிங்கை நாடு' எனும் தேசிய தின தமிழ்ப் பாடலை உரு­வாக்­கி­னார். தமி­ழில் ஏழு திரைப்­ப­டங்­க­ளுக்­கு­மேல் இசை­ய­மைத்­துள்ள முதல் சிங்­கப்­பூ­ர­ரான இவர், புதிய சிங்­கப்­பூர்ப் பாட­கர்­களை தமிழ்த் திரை­யி­சை­யில் அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தா­கக் கூறி­னார். சென்­னை­யில் எடி­சன் விருது நிகழ்ச்­சி­யில் இவ்­வாண்­டின் சிறந்த அனைத்­து­லக இசைக் கலை­ஞர் விருது, 'கோன்னா ரைஸ் அப்' எனும் ஆங்­கி­லப் பாட­லுக்கு கன்­டென்ட் ஆசியா 2022 விருது ஆகி­ய­வற்­றை­யும் பெற்­றுள்­ளார்.

செய்தி: மோனலிசா

monolisa@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!