400 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு

400 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு

2 mins read
bf88069d-4e1a-4a09-9446-2fdacdc4fb21
மார்சிலிங் குடியிருப்பாளர் ஒருவருக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கிய மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது (இடமிருந்து 2வது). உடன் நற்பணிப் பேரவைத் தலைவர் கே.ராமமூர்த்தி. படம்: மார்சிலிங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு -

மூன்று மாத ஏற்­பா­டு­க­ளுக்­குப் பிறகு, மார்­சி­லிங் சமூக மன்­றத்­தின் இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு, நற்­ப­ணிப் பேர­வை­யின் தொண்­டூ­ழி­யர்­கள், மக்­கள் கழக மலாய் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வின் 30 தொண்­டூ­ழி­யர்­கள் ஆகி­யோர் ஒன்­றி­ணைந்து ஏறத்­தாழ 400 குடும்­பங்­க­ளுக்கு நேற்று தீபா­வளி அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்­கினர்.

புளோக் 185A உட்­லண்ட்ஸ் ஸ்தி­ரீட் 13ல் வசிக்­கும் குடும்­பங்­களுக்­குத் தீபா­வ­ளிப் பல­கா­ரங்­கள், உண­வுப் பொட்­ட­லங்­கள் முத­லி­யவை வழங்­கப்­பட்­டன.

இத்­தொண்­டூ­ழிய நிகழ்ச்­சி­யில் தற்­காப்பு, மனி­த­வள அமைச்­சு­களுக்­கான மூத்த துணை அமைச்­ச­ரான ஸாக்கி முகம்­மது சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு, சில குடும்­பங்­க­ளு­டன் உரை­யா­டி­ய­தோடு அவர்­க­ளுக்கு தீபா­வளி வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்து, தீபா­வளி அன்­ப­ளிப்­புகளை­யும் வழங்­கி­னார்.

இம்­மா­தம் 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதி­வரை நற்­ப­ணிப் பேர­வை­யும் மக்­கள் கழக மலாய் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வும் சேர்ந்து சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு வட்­டா­ரங்­களில் வசிக்­கும் மொத்­தம் 3,500 வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு தீபா­வளி அன்­ப­ளிப்­பு­க­ளைத் தரும் நோக்­கத்­து­டன் பணி­யாற்றி வரு­கின்­றன.

இவ்­வாண்டு தீபா­வளி அன்­பளிப்­பு­களை வழங்­கு­வ­தோடு மட்­டும் நின்­று­வி­டா­மல், மார்­சி­லிங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு, மார்­சி­லிங் வர்த்­த­கர் சங்­கத்­து­டன் இணைந்து அவ்­வட்­டா­ரத்­தில் தீபா­வளி ஒளி­யூட்டு விழா­வை­யும் நடத்­தின.

ஒளி­யூட்டு விழாவை முன்­னிட்டு பாரம்­ப­ரிய இந்­திய விளை­யாட்­டு­களை விளை­யா­டு­வது, மரு­தா­ணி­யி­டு­வது, இந்­திய இசைக்­க­ரு­வி­கள் வாசிப்­பது என பல இந்­தி­யக் கலா­சார அம்­சங்­களை பொது­மக்­க­ளி­டம் கொண்டு­சேர்க்கும் நோக்கில் மார்­சி­லிங் சமூக மன்­றம் சிறிய பந்­தலை அமைத்திருந்தது.

"குடி­யி­ருப்­பா­ளர்­களை நேர­டி­யா­கச் சந்­தித்து, அவர்­க­ளு­டன் பழ­கு­வ­தில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர்­க­ளு­டன் பேசி­ய­போது, பல­ரும் நவம்­பர் மாதத்­தில் நாம் நடத்­தும் தீபா­வ­ளிக் கலை­நி­கழ்ச்­சி­யைக் காண ஆவ­லு­டன் காத்­தி­ருப்­பது தெரி­ய­வந்­தது,"என்­றார் மார்­சி­லிங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வின் தலை­வர் சு. நந்­தினி.

செய்தி: மாதங்கி இளங்கோவன்