இந்தியத் தாய்மாரின் இன்னல் துடைக்கும் சிண்டாவுக்கு விருது

இந்தியத் தாய்மாரின் இன்னல் துடைக்கும் சிண்டாவுக்கு விருது

2 mins read

தலை­சி­றந்த நிர்­வா­கத்­துக்கு வழங்­கப்­படும் ஆக உய­ரிய 'அற­நி­று­வன வெளிப்­ப­டைத்­தன்மை விருதை' சிண்டா எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்டு சங்­கம் பெற்­றுள்­ளது. இவ்­வி­ரு­தினை அற­நி­று­வன மன்­றம் வழங்­கி­யுள்­ளது. அத்­து­டன் சிங்­கப்­பூர் சிறைத் துறை வழங்­கும் மஞ்­சள் நாடா விரு­தை­யும் சிண்டா பெற்­றுள்­ளது. இரண்டு விரு­து­

க­ளை­யும் சிண்டா முதல்­மு­றை­யாக இவ்­வாண்டு பெற்றுள்­ளது.

சிண்­டா­வின் தெளி­வான செயல்­பா­டு­கள், சிறை­பி­டிக்­கப்­பட்­டோ­ரின் குடும்­பங்­க­ளுக்­காக முன்­னெ­டுக்­கும் பணி ஆகி­ய­வற்றை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் இவ்­விரு விரு­து­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

'அற­நி­று­வன வெளிப்­ப­டைத்­தன்மை விருது'க்கு கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்சு ஆத­ர­வ­ளிக்­கிறது. வெளிப்­ப­டைத்­தன்­மை­யைக் கடைப்­பி­டிக்­கும் அற­நி­று­வ­னங்­க­ளுக்கு ஆண்­டு­தோ­றும் இவ்­வி­ருது வழங்­கப்­பட்டு வரு­கிறது.

விருதுபெற்றது பற்றி சிண்­டா­தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் கூறுகை யில், "குடும்­பங்­கள், தனிந­பர்­க­ளின் நிலையை உயர்த்த இந்­திய சமூ­கத்­தினர் சிண்­டா­வுக்­கு வழங்கும் நிதி ஆத­ர­வைக் கையாள முறை­யான நிர்­வா­கம் அவசியம்.

"சிண்­டா­ மீது மக்­கள் கொண்­டுள்ள நம்­பிக்­கை­யைத் தக்­க­வைத்­துக்­கொள்­ள­வும் சமூ­கத்­துக்கு நற்­சேவை வழங்­க­வும் சிண்டா தொடர்ந்து தனது செயல்பாடுகளை மேம்­ப­டுத்­திக்­கொள்­ளும்," என்­றார்.

புதன்­கி­ழ­மை­ நடந்­தே­றிய 'அற­நி­று­வன வெளிப்­ப­டைத்­தன்மை, நிர்­வாக விரு­து­கள்' நிகழ்­வில் கலந்து­கொண்டு பேசிய கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் திரு எட்­வின் டோங், விரு­து­பெற்ற 85 வெற்­றி­யா­ளர்­க­ளை­யும் வாழ்த்­தி­னார்.

அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அற­நி­று­வ­ன அமைப்புகளில் ஒன்­றான ஸ்ரீநாரா­யண மிஷன், மூன்­றா­வது முறை­யாக அற­நி­று­வன வெளிப்­

ப­டைத்­தன்மை விரு­துபெற்­றது. அமைப்­பின் தலை­வர் திரு ஜெய­தேவ் உன்­னி­தன் இவ்­வி­ரு­தி­னைப் பெற்­றுக்­கொண்­டார். முன்­ன­தாக 2018, 2019ஆம் ஆண்­டு­க­ளி­லும் ஸ்ரீநாரா­யண மிஷன் இவ்­வி­ரு­தைப் பெற்­றி­ருந்­தது.

இந்­திய சமூ­கத்­தின் பலதரப்­

பினரின் வாழ்க்­கைச் சிக்­கல்­களை களை­ய முயற்­சி­ எடுத்துவரும் சிண்டா, 2020ஆம் ஆண்­டி­லி­ருந்து சிங்­கப்­பூர் சிறைத் துறை­யின் சிறை மறு­ஒ­ருங்­கி­ணைப்­புத் திட்­டத்­தில் இணைந்து பணி­யாற்றி வரு­கிறது.

பெண்­க­ளின் சிறைச்­சா­லை­யான 'A4 இன்ஸ்­டிட்­டி­யூ­ஷன்'ல் இருக்­கும் இந்­திய தாய்­மார்­க­ளுக்­குக் கைகொ­டுக்­கும் வண்­ணம், பிள்­ளை­க­ளு­டன் நல்­லு­றவை வளர்த்­துக்­கொள்­வ­தற்­குத் தேவை­யான உதவிகளை அளிக்க சிண்டா முற்­பட்­டுள்­ளது.

சிறை­யி­லி­ருந்து வெளி­வந்த பின்­ன­ரும் அவர்­க­ளுக்­கும் அவர்­

க­ளின் குடும்­பங்­க­ளுக்­கும் தொடர் ஆத­ரவு வழங்க சிண்டா முயற்சி எடுத்­துள்­ளது. அதன் முயற்­சி­

க­ளுக்­காக, மஞ்­சள் நாடா­வின் 'இரண்­டா­வது வாய்ப்­பின் பிர­தி­நிதி' விரு­தி­னைப் பெற்ற சிண்டா, சிறை­பி­டிக்­கப்­பட்­டோ­ரின் தேவை­களை, தொடர்ந்து ஆராய்ந்து அறிந்­து­கொள்­ளும் எண்­ணம் கொண்­டுள்­ளது. சிறைத் துறை­யின் துணை­யு­டன், உதவி தேவைப்­படும் இந்­தி­யர்­க­ளைக் கண்­ட­றிந்து ஆரம்­பக்­கட்­டத்­தி­லி­ருந்தே உத­வ­வும் அது திட்­ட­மிட்­டுள்­ளது.

குழந்­தைகளைப் பெரி­த­ள­வில் பாதிக்­கும் கார­ணி­க­ளுள் போதைப்­பொ­ருள் புழக்­கம், வன்­முறை முத­லி­ய­வற்­றில் பெற்­றோர் சிறை­பி­டிக்­கப்­ப­டு­வ­தும் அடங்­கும். குற்­றச்­செ­யல் குடும்­பங்­களில் தொடர்வதை தடுக்க, சிறை­பி­டிக்­கப்­பட்­டோ­ரின் மனதை மாற்­ற தனது ஆத­ரவை நீட்டி வரு­வ­தாக சிண்டா கூறியது.