ஏங்கிக்கிடந்த செவிகளுக்கு இனிப்பூட்டிய பாடகர்

ஈராண்­டு­க­ளாக ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த பிர­பல பாட­கர் சித்ஸ்ரீரா­மின் 'ஆல் லவ் நோ ஹேட்' இசை நிகழ்ச்சி, சிங்­கப்­பூர் ரசி­கர்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளை­ நிறைவுசெய்­துள்ளது. புகழ்­பெற்ற பாடல்­க­ளான 'கண்­ணான கண்ணே', 'கன்­னத்­தில் முத்­த­மிட்­டால்', 'புது வெள்ளை மழை', 'மறு­வார்த்தை' முத­லிய பாடல்­க­ளை சிங்கப்பூர் மேடையில் பாடி, நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரின் மன­தைக் கவர்ந்­தார் சித்ஸ்ரீராம்.

'மேஸ்ட்ரோ புரொ­டக்­‌ஷன்ஸ்', 'இஷ்­தாரா ஜுவெல்­லரி' இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சிக்கு 5,000 நுழை­வுச்­சீட்­டு­கள் விற்­கப்­பட்ட நிலை­யில் 'தி விஸ்தா தியேட்­டர்' அரங்­கம் நிரம்பி வழிந்தது.

சித்ஸ்ரீரா­மு­டன் இசைக் கலை­ஞர்­க­ளான கெபா ஜெர­மையா, ராம்­கு­மார், தபாஸ் நரேஷ், சஞ்­சீவ் டி., லியோன் ஜேம்ஸ் ஆகி­யோ­ரும் இணைந்­தி­ருந்­த­னர்.

ஸ்ரீரா­மின் தனித்­து­வ­ பாணி­யைப் பெரி­தும் ரசித்­த­தாக பகிர்ந்து­ கொண்­டார் நிகழ்ச்சிக்கு வந்து நிறைவடைந்த ஆத்மிகா லட்சுமி.

மற்­றொருவரான மூலா வெங்­க­டேஷ் அஷ்­வினி , மன­துக்கு நெருங்கிய சிறு­வ­யதுப் பாடல்­களை மீண்­டும் கேட்­டது மகிழ்ச்சி அளித்­ த­தா­க­க் கூறி­னார். நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து சித் ஸ்ரீரா­மின் பாடல்­களை நேர­டி­யா­கக் கேட்­ட­து மெய்­சி­லிர்க்க வைத்­த தாகக் கூறினார் இளை­யர் வைசாலி செந்­தில் குமார்.

கடந்த ஈராண்­டு­களில் உல­க­ள­வில் இசை நிகழ்­வு­க­ளின் தரம் கூடியுள்ளது. அதற்­கேற்ப, ஒலி அமைப்­பு­களில் கூடு­த­லாக முத­லீடு செய்து, நிகழ்வை பிரம்­மாண்­ட­மா­ன­தாக படைத்­துள்­ளோம்," என்­றார் இஷ்­தாரா ஜுவெல்லரி, மேஸ்ட்ரோ புரொ­டக்­‌ஷன்ஸ் நிறு­வ­னங்­க­ளின் தலைமை நிர்­வா­கி­யான திரு பார்த்­தி­பன், 50.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!