வச­தி­ கு­றைந்­தோ­ருக்கு தீபா­வளி உணவு வழங்கிய இந்து அறக்­கட்­டளை வாரி­யம்

ஆ. விஷ்ணு வர்­தினி

வசதி குறைந்த சுமார் 1,000 குடும்­பங்­களுக்கு இம்­மா­தம் 6ஆம் தேதி­ தீபா­வளிப் பல­கா­ரங்­கள், மதிய உணவு, முகக்­க­வ­சங்­கள் அடங்­கிய பொட்­ட­லங்­களை இந்து அறக்­கட்­டளை வாரி­யம் வழங்­கி­யது.

தீபா­வ­ளியை முன்­னிட்டு பல்­வேறு பிரி­வி­ன­ருக்கு உணவு விநி­யோ­கம் செய்து வரும் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் தீபா­வளி நன்­கொடை முயற்­சியை இது நிறைவு செய்து வைத்­தது.

மக்­கள் கழக நற்­ப­ணிப் பேர­வை­யு­டன் இணைந்து உணவு விநி­யோ­கம் செய்த இந்து அறக்­கட்­டளை வாரி­யம், கடந்த ஆண்­டி­லி­ருந்து தொடர்ந்து மாதந்­தோ­றும் ஏறக்­கு­றைய 2,500 பேருக்கு உணவு வழங்கி வரு­கிறது.

இம்­முறை, தொண்­டூ­ழி­யர்­க­ளின் உத­வி­யு­டன் வாரி­யம் நேரில் சென்று உணவு விநி­யோ­கித்­தது.

விழாக்­கா­லத்­தில், 'சன்­லவ் இல்­லம்', 'செரி­பி­ரல் பால்சி அல்­லா­யன்ஸ் சிங்­கப்­பூர்', 'புளு கிராஸ் தொங் கெங் மதி­யி­றுக்க நிலை­யம்' ஆகி­ய­வற்­றில் உள்ள மொத்­தம் 1,050 பேருக்­கும் இந்து அறக்­கட்­டளை வாரி­யம் உணவு அளித்­தது.

முனீஸ்­வ­ரன் சமூக சேவை­களு­டன் இணைந்­த­தன் மூலம் 100 குடும்­பங்­கள் பல­ன­டைந்­தன. அத்­து­டன் மனி­த­வள அமைச்சு, 'ஏஸ்' குழு­வு­டன் இணைந்­த­தன் மூலம் 10 தங்­கு­வி­டு­தி­களில் உள்ள 5,000 வெளி­நாட்டு ஊழி­யர்­களும் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் இம்­மு­யற்­சி­யால் பய­ன­டைந்­த­னர்.

இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் சமூக சேவைக் குழு­வின் தலை­வர் சுசிலா கணே­சன், இது பற்றி தமிழ் முர­சி­டம் கூறு­கை­யில், "இந்­துக்­க­ளின் வாழ்­வி­ய­லில் முக்­கி­யப் பங்கு வகிக்­கும் சனா­தன தர்­மத்தை வலி­யு­றுத்­து­வ­தற்கு நாங்­கள் முன்­னெ­டுக்­கும் பல முயற்­சி­களில் இது­வும் ஒன்று.

"தனி­யாக இந்த உத­வி­களை செய்­வ­தை­விட, பற்­பல இயக்­கங்­களு­டன் இணைந்து செயல்­ப­டும்­போது அதன் தாக்­கம் அதி­க­மாக உள்­ளது," என்­றார்.

கொவிட்-19 பெருந்­தொற்று 2020ஆம் ஆண்­டில் தொடங்­கி­யது முதல் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் உணவு விநி­யோக முயற்­சி­யும் தொடங்­கி­யது.

பல விதி­மு­றை­க­ளால் கட்­டுப்­பட்­டி­ருந்த அந்த இக்­கட்­டான சூழ்­நி­லை­யி­லும் சுகா­தா­ர­மான முறை­யில் உணவு விநி­யோ­கிக்க உத­விய தொண்­டூ­ழி­யர்­க­ளின் அரும்­ப­ணி­யைக் குறிப்­பிட்­டார் திரு­மதி சுசிலா.

விழாக்­கா­லத்­தைத் தவிர்த்து, மாதந்­தோ­றும் வீட்­டில் தனியே வாழும் முதி­ய­வர்­க­ளுக்கு உண­வ­ளிப்­ப­தை­யும் இந்து அறக்­கட்­டளை வாரி­யம் தொட­ர­வி­ருக்­கிறது.

இத்­திட்­டங்­க­ளு­டன் எதிர்­கா­லத்­தில் வெவ்­வேறு சமூக தேவை­களுக்­கேற்ப திட்­டங்­களை வகுக்­கும் எண்­ணம் கொண்­டுள்­ள­தாக திரு­மதி சுசிலா குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!