சிறப்புத் தேவையுடையவர் என அடையாளம் காணப்படும் ஒருவர் சிகிச்சை அமர்வுகளில் அல்லது சிறப்புத் தேவை பள்ளிகளில் சேர்க்கப் படுவதுண்டு. இருப்பினும், சிறப்புத் தேவையுடை யோருக்கு மாற்று சிகிச்சை முறைகளும் உண்டு. இத்தகைய சிகிச்சைவழி அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது என்பதையும் அவர்களும் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழலாம் என்பதையும் அறிந்து வந்தது தமிழ் முரசு
'ஆட்டிசம்' எனப்படும் மதியிறுக்கம், அறிவுசார் குறைபாடுகள், உடல்ரீதியான குறைபாடுகள், பேச்சு அல்லது மொழி ஆற்றலில் குறைபாடு, கண்பார்வையை அல்லது செவித்திறனை இழத்தல் - இவையெல்லாம் 'சிறப்புத் தேவையுடையவர்' என ஒருவரைக் குறிப்பிடச் செய்பவை. மிதமான சிறப்புக் கல்வித் தேவைகளுடைய 27,000 மாணவர்கள் கல்வி அமைச்சின் பள்ளிகளில் படிக்கின்றனர் என்றும் சிறப்புக் கல்விக்கான பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 7,000 என்றும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
பாலர் பள்ளி மாணவர்கள் இடையே வளர்ச்சி தடைபடுவது குறித்து 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையும் தேசிய பல்கலைக்கழக மருத்துவ
மனையும் கிட்டத்தட்ட 5,000 பாலர்
களை அடையாளம் கண்டன. இது ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையே, நேர நிர்வாகம், பொறுப்புகளுக்கு முன்னுரிமை அளித்தல் போன்ற அம்சங்களில் சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் இதனால் உயர்கல்விச் சூழல் அவர்களுக்குச் சவாலாக அமைகிறது என்றும் நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.
சிறப்புத் தேவையுடையோர் சாதாரணமானவர்களைப்போல வாழ இயலாது என்பது அவர்
களது பலரின் எண்ணம். அதேநேரம் சிறப்புத் தேவையுடையோர் சமுதாயத்தில் ஒன்றுகலந்து, பிறரைப்போல வாழ முடியும் என்போரும் உண்டு. மருத்துவரீதியான உதவி நாடுவதற்கும் மேலாக மாற்று சிகிச்சைமுறைகள் அவர்களுக்குக் கை கொடுக்கும் என்கின்றனர் சிலர்.

