மனநலிவு நோய் (Down Syndrome) உள்ளவர்களுக்குத் தங்களின் வாழ்க்கைத் திறன்களை மேம்
படுத்துவதற்கும் பிறர் உதவியின்றி வாழ்வதற்கும் பரதநாட்டியம் உதவி வருகிறது.
இதற்குச் சான்றாக கடந்த நான்கு ஆண்டுகளாக 'மாயா நடன அரங்கம்' நடத்தி வரும் 'டைவெர்ஸ் எபிலிட்டிஸ் டான்ஸ் கலெக்ட்டிவ்' (Diverse Abilities Dance Collective) எனும் அமைப்பு திகழ்கிறது. ஒரு சமூக முயற்சியாகத் தொடங்கிய இந்த அமைப்பில் பரதநாட்டியம், சமகால நடனம் ஆகியவற்றின் நுட்பங்களை அறிவுசார் குறை
பாடு உடையோர் கற்று, பின்னர் நடனத் தயாரிப்புகளைப் படைத்து வருகிறார்கள்.
மாயா நடன அரங்கின் கலை இயக்குநரும் இணை நிறுவனருமான திருமதி கவிதா கிருஷ்ணன், 51, (படம்) நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடனத் துறையில் இருக்கிறார்.
சிங்கப்பூரின் மனநலிவு நோய்த் தடுப்பு சங்கத்தில் நடனப் பயிற்று விப்பாளராகவும் இருந்த அவர், "குறைபாடுடையோரை வேறுபடுத்திப் பார்க்காமல், சாதாரண மனி
தரைப்போல அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ பரதம் வழிவகுக்கிறது," என்றார்.

