சிறப்புத் தேவையுடைய சிறாருக்கான கல்விசார் தேவைகளை ஆரம்பகால இடையீட்டுத் திட்டங்கள் மூலம் நிறைவு செய்து வருகிறது, 'ஜூனியர் ஸ்பெஷல் ரிசோர்சஸ்'.
சிறாரின் வீட்டுக்கே சென்று அவர்களின் வசதிக்கேற்ப சேவைகளை வழங்கி வருகிறது இந்
நிறுவனம். பேச்சு சிகிச்சை, செயல்பாடு சார்ந்த சிகிச்சை, தசை ஒருங் கிணைப்பு, வாசிப்புத்திறன், எழுத்துத்திறன், ஒலிப்புத்திறன், சமூகத் திறன், 'டிஸ்லெக்சியா' நிவாரணம் போன்ற சேவைகளை இது வழங்கி வருகிறது. ஒவ்வொரு பிள்ளையின் தேவையையும் அறிந்து அவரவருக்கான கல்வித் திட்டத்தை இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. நிறுவனத்தின் இயக்குநர் திருமதி ஜெய்ஸ்ரீ, 31, தம்மிடம் வரும் சிறாரின் தேவை அறிந்திட அவர்களின் பள்ளிகளோடு சேர்ந்து செயல்படுவதாகக் கூறினார்.
சிறார்கள் அவர்களின் கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற ஓர் உகந்த சூழலையும் திடமான மனநிலையையும் வழங்குவதில் தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். (படம்: ஜெய்ஸ்ரீ)

