சாதிக்கும் கரம் சமூகம் போட்ட உரம்

சாதிக்கும் கரம் சமூகம் போட்ட உரம்

1 mins read
b0376fb9-f171-4f8f-9fbc-041478e544e9
திறன்களை வெளிப்படுத்திய சிறப்புப் பிள்ளைகள். -

மதி­யி­றுக்­கப் பாதிப்பு, 'ஏடி­எச்டி' குறை­பாடு ஆகி­ய­வற்­றால் சிறு­வ­ய­தி­லி­ருந்து அவ­தி­யுற்­றா­லும் முஹம்­மது அர்­ஷத் பாவாஸ், 25, இளை­யர் சமு­தா­யத்­திற்கு ஒரு முன்­னு­தா­ர­ண­மா­கத் திகழ்ந்து வரு­கி­றார்.

கொவிட்-19 நோய்த்­தொற்று காலத்­தில் அனைத்­து­லக அள­வில் ஒளி­ப­ரப்­பப்­பட்ட 'ஒன் வோர்ல்டு: டுகெ­தர் அட் ஹோம்' எனும் நிதித் திரட்டு நிகழ்ச்­சியை அர்­ஷத் தம் தாயா­ரு­டன் பார்த்து வந்­தார். தாம் பார்த்த நிகழ்ச்­சி­யின் மூலம், அர்­ஷத்­துக்கு புதிய உத்­வே­கம் பிறந்­தது. தாமும் இது­போன்ற ஒரு நிகழ்ச்­சியை இணை­யத்­தில் நடத்­த­வேண்­டு­மென்ற முனைப்­பில், தம்­மைப் போன்ற சிறப்­புத் தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்கு இணை­யத்­தில் ஒரு தளத்தை உரு­வாக்­கி­னார்.

சிறப்­புத் தேவை­யு­டை­வர்­கள் தங்­க­ளின் குறை­பா­டு­க­ளால் மற்­ற­வர்­க­ளைப் போல தங்­கள் திறன்­களை வெளிப்­ப­டுத்த முடி­யாது என்ற தாழ்வு மனப்­பான்­மையை முறி­ய­டிக்க இது­போன்ற தளம் வழி­வ­குக்­கும் என்­பதே அவ­ரது எண்­ண­மாக இருந்­தது.

ஈராண்­டு­க­ளுக்கு முன் இவர் துவங்­கிய 'இன்­கு­ளு­சி­விட்டி 4 ஆல்' (Inclusivity 4 All) இணைய நிகழ்ச்­சி­யில், சிறப்­புத் தேவை­யுடை­ யோர் தங்­க­ளு­டைய ஆற்­றலை வெளிப்­ப­டுத்­தத் தொடங்­கி­னர். சிறப்­புத் தேவை­யு­டை­யோர் தங்­க­ளின் குறை­பா­டு­க­ளால் துவண்­டு­போ­கா­மல் தங்­க­ளி­டம் உள்ள நிறை­ களில் கவ­னம் செலுத்த வேண்­டும்.

இதற்கான சூழலை உருவாக்கி அவர்களுக்கு அரணாக நிற்கிறது நம் சமூகம் என்பது இங்கு குறிப் பிடத்தக்கது.