கலந்து களம் கண்டதில் மலர்ந்ததொரு வெற்றி

கலந்து களம் கண்டதில் மலர்ந்ததொரு வெற்றி

3 mins read
66b20c09-d44d-44b1-8b88-db3bd7385456
-

இந்­தி­யா­வி­லி­ருந்து கடல் கடந்து சிங்­கப்­பூ­ருக்­குப் பணி­பு­ரிய வந்த வெளி­நாட்டு ஊழி­யர்­களை ஒன்­றி­ணைக்­கும் வகை­யில் அண்­மை­யில்

கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தப் பட்டது. 'தப்லா!' வார­இ­தழ், 'ஸீ எண்டர்­டெ­யின்­மென்ட்', 'வெஸ்ட்­லைட்' தங்­கு­வி­டுதி ஆகியன இணைந்து 'வெஸ்ட்­லைட் ஒருங்­கி­ணைப்­புக் கிண்­ண கிரிக்­கெட் போட்டி'யை கடந்த 18ஆம் தேதி (ஞாயிறு) நடத்தின.

அனைத்­து­லகப் புலம்­பெ­யர்ந்­தோர் தினத்தை முன்­னிட்டு நடத் தப்பட்ட போட்டியில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள், தொழில்­து­றைத் தலை­வர்­கள், தேசிய விளை­யாட்டு வீரர்­கள், 19 வய­துக்­குக் குறை­வான இளை­யர்­கள் ஆகி­யோர் அணி­க­ளா­கப் பிரிந்து விளை­யா­டினர். சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கம், சிலோன் விளை­யாட்டு மன்­றம் ஆகிய திடல்­களில் போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

"இந்­தி­யா­வி­லி­ருந்து வந்த எங்­களை கிரிக்­கெட் விளையாட்டு ஒன்­றி­ணைக்­கிறது. இந்த விளை­யாட்டு எங்­கள் வாழ்­வில் பின்­னிப் பிணைந்­து­விட்­டது," என்றார் திரு ஜெகன்­னாத் இளங்­கோ­வன், 35.

'சிஎஸ்சி ட்ரூப்ர்ஸ்' அணி­யின் தலை­வ­ராக இருக்­கும் இவர், 12 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் இருக்­கி­றார். தற்­போது சிங்­டெல் நிறு­வ­னத்­தில் தக­வல் தொழில்­நுட்ப ஆலோ­ச­க­ராக இருக்­கும் திரு ஜெகன்­னாத், சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­தி­லி­ருந்து ஒவ்­வொரு வார­யி­றுதி தவ­றா­மல் சிலோன் விளை­யாட்டு மன்­றத்­தில் நண்­பர்­க­ளு­டன் கிரிக்­கெட் விளை­யாடி வரு­கி­றார்.

தமி­ழ­கத்­தின் மயி­லா­டு­துறை மாவட்­டத்தைச் சேர்ந்த திரு அந்­தோணி ராஜ், 25, பத்து வய­தி­லி­ருந்து கிரிக்­கெட் விளை­யாடி வரு­வதாகக் கூறினார். கிரிக்­கெட் போட்­டி­யில் பங்­கேற்க வேண்டும் என்பது தமது நீண்டநாள் ஆசை என்றும் அது­ சிங்­கப்­பூ­ரில் நிறை­வே­றி­யது தமக்கு பெருமகிழ்ச்­சி என்றும் அவர் கூறினார்.

எம்ஆர்டி ரயி­லில் சென்றபோது, சிங்­கப்­பூர் கிரிக்­கெட்­டுக்கு அறிமு­க­ மா­னார் திரு ரமேஷ் சுந்­த­ரம், 44. 13 ஆண்­டு­க­ளாக இங்கு வசித்து வரும் இவர், ரயி­லில் கிரிக்­கெட் மட்­டையை ஒரு­வர் வைத்திருப்பதைக் கவ­னித்­தார். அவரை அணுகிய திரு ரமேஷ் அவ­ருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார்.

சிங்­கப்­பூ­ரில் கிரிக்­கெட் விளை­யாட நண்­பர் ஒரு­வர் கிடைத்­து­விட்­டார் என்ற அந்த மகிழ்ச்­சி­யான தரு­ணத்தை நினை­வு­கூர்ந்த திரு ரமேஷ், கிரிக்­கெட் தன்­னு­டைய உடம்­பில் ஓடும் ரத்­தம்போல என்­றார். தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் பணி­பு­ரி­யும் இவர், 'பாலஸ்­டி­யர் சூப்­பர் கிங்ஸ்' அணி­யின் மேலா­ள­ராக இருக்­கி­றார்.

இலங்­கை­யின் கொழும்­பு­ நகரி லிருந்து சிங்­கப்­பூ­ர் வந்த டெனுலா சாத்­மோல் பால­சூ­ரி­யா­வின் வயது 18. சிங்­கப்­பூ­ரில் 11 மாதங்­க­ளா­க இருக்கும் இவர், இங்கு வந்­த­தி­லி­ருந்து 25 போட்­டி­களில் கலந்து­ கொண்­டுள்­ளார். ஆக இளைய விளையாட்­டா­ள­ரா­கப் பங்கேற்ற இவர், 6 வய­தி­லி­ருந்து கிரிக்­கெட் விளை­யாடி வந்துள்ளார். தற்­போது சிங்­கப்­பூ­ரில் பட்­ட­யக் கல்வி பயிலும் டெனுலா, வாரம் மூன்று முறை கிரிக்­கெட் விளை­யா­டு­கிறார். "கிரிக்­ கெட்­டில் வெற்றி, தோல்வி என எது­ வும் இல்லை. இந்த விளை­யாட்­டில் அனை­வ­ரும் சமம்," என கூறி­னார் அவர்.

சிலோன் விளை­யாட்டு மன்­றத்­தி­லும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கிரிக்­கெட் போட்டி நடை­பெற்­றது.

வெஸ்ட்­லைட் தங்­கு­வி­டு­தி­ மேலா­ ளர் திரு பாகுர்­டீன் அ. மஜித், "இந்தப் போட்டி, வெளி­நாட்டு ஊழி­யர்­கள் உள்­ளூர் சமூகத்துடன் ஒன்­றி­ணைய உத­வு­கிறது. கிரிக்­கெட்டை விளையாட ஏற்­பாடு செய்­தது ஊழி­யர்­க­ளின் மன இறுக்­கத்­தைத் தளர்த்­தும் என நம்­பு­கி­றேன்," என்­றார்.

இந்த வி­டு­தி­யி­லி­ருந்து வந்­தி­ருந்த ராஜாங்­கம் பர­ணி­த­ரன், 25, சிங்­கப்­பூ­ரில் கிரிக்­கெட் விளை­யா­டு­வ­தற்­கான வச­தி­க­ளைக் கண்டு வியந்தார். "ஒவ்­வொரு வார­மும் இப்­படி ஒரு போட்டி நடந்­தால் நான் கலந்­து­கொள்­வேன்," என்­றார் அவர்.

அனுஷா செல்வமணி