தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நண்பர்களை மகிழ்வித்த கிறிஸ்துமஸ்

2 mins read
04a69df9-e5fa-4693-95ac-29c955f2f925
-

கிறிஸ்­து­மஸ் உணர்­வைத் தங்­கள் நெருங்­கிய நட்பு வட்­டா­ரத்­திற்­குப் பரப்­பும் வித­மாக திரு­மதி லீனா குமா­ர­வேலு, 26, அவ­ரின் கண­வர் திரு விவேக் ஆனந்த் ஸ்வா­மி­நா­தன், 29, கிறிஸ்­து­மஸ் பண்டி கையை ஒரு வாரத்­திற்கு முன் வீட்­டில் கொண்­டா­டி­னார்­கள்.

இந்­திய பாரம்­ப­ரிய உணவு வகை­களையும் சமைத்து, 'ஸ்ப்­பைஸ்ட் ஹாட் கோகோ' குளிர்­பா­னத்­தை­யும், 'ஸ்பி­யர்­மின்ட் கேர­மல்' தேநீ­ரை­யும் நெருங்­கிய நண்­பர்­கள் சுவைத்து உண்­ணும் வகை­யில் அமைந்­தது இவர்­க­ளின் கிறிஸ்­து­மஸ் விருந்து.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன் திரு­ம­ண­மான இந்­தத் தம்­ப­தி­யி­னர், திரு­ம­ணத்­திற்­குப் பிறகு, இரண்­டா­வது முறை­யாக கிறிஸ்­து­மஸ் கொண்­டா­டு­கி­றார்­கள். கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டதால் இவ்வாண்டு பண்­டி­கையை இன்­ப­மா­கக் கொண்­டாட முடிந்­தது.

இந்து மதத்தை சேர்ந்த இவ்­வி­ரு­வ­ரின் வீட்­டில், கிறிஸ்­து­மஸ் உணர்வு பரவி இருக்­கும் வித­மாக, கண்­க­ளைக் கவ­ரும் அலங்­கார விளக்­கு­களும் 1.8 மீட்­டர் உய­ரம் கொண்ட கிறிஸ்­து­மஸ் மர­மும் பிர­கா­ச­மாய் காட்­சி­ய­ளித்­தன.

இந்­தி­யா­வில் பிறந்த திரு­மதி லீனா­விற்கு, கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டம் புதி­தல்ல.

இவ­ரின் தாத்தா கிறிஸ்­து­மஸ் அன்­று­தான் பிறந்­தார். அதோடு, விடு­மு­றைக்கு இந்­தியா செல்­லும் போதெல்­லாம், இவர் குடும்­பத்­தி­னர் திராட்­சைக் குளிர்­பா­னம், பழ கேக் ஆகி­ய­வற்றை சுவைத்து இயே­சு­வின் பிறந்­த­நாளைக் கொண்­டா­டி­ய­துண்டு.

கிறிஸ்­து­மஸ் தனக்கு ஓர் அபூர்வ விழாக்­கால அனு­ப­வத்தை தரு­வ­தா­கக் கூறும் திரு­மதி லீனா, கிறிஸ்­து­மஸ் தினத்­தன்று, 'ஹாரி பாட்­டர்' கதையை மைய­மாக வைத்து பண்­டி­கை­யைக் கொண்டாடி னார்.

கண­வ­ரின் உத­வி­யோடு கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்ட ஏற்­பா­டு­களைச் செய்த திரு­மதி லீனா, நண்­பர்­கள் மகி­ழும் வண்­ண­மாக பல விளை­யாட்­டு­களை விளை­யாடி, படங்­கள் பார்த்து, அவர்­க­ளுக்­காக கிறிஸ்­து­மஸ் பரி­சு­க­ளை­யும் தயா­ரித்­தார்.

"என்­ன­தான் நோய்த்­தொற்று காலம் முடி­வ­டைந்­தா­லும், ஆடம்­ப­ர­மாக பண்­டி­கை­யைக் கொண்­டா­டு­வ­தற்­குப் பதி­லாக, எங்­கள் வாழ்­வில் முக்­கி­யப் பங்­காற்­றும் நெருங்­கிய நண்­பர்­களை மட்­டுமே இவ்­வாண்டு கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டத்­துக்கு அழைத்­தி­ருந்­தோம்," என்­றார் திரு­மதி லீனா.

கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொண்ட தக­வல் தொழில்­நுட்­பத் துறைத் தொழில் பகுப்­பாய்­வா­ளர் ஐஸ்­வர்யா, 26, "எனக்­குப் பிடித்­த­மான நகச்­சா­யம் எனக்­குப் பரி­சாக கிடைத்­தது. என் தோழி­யின் கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டம் என் மன­திற்கு நிறை­வாக அமைந்தது," என்­றார்.