பண்டிகைக் கால உணர்வை ஊட்டிய ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம்

பண்டிகைக் கால உணர்வை ஊட்டிய ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம்

1 mins read
f2f721eb-244c-4501-b31d-2dcf7e09d9dd
-

ஸ்ரீ நாரா­யண மிஷன் தாதிமை இல்­லம் கிறிஸ்­து­மஸ் குதூ­கலத்­தில் மூழ்­கி­யுள்­ளது. அங்கு வசிக்கும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­காக கிறிஸ்­து­மஸ் பண்­டி­கையை முன்­னிட்டு, புது­வி­த­மான நட­வ­டிக்கை ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

கிறிஸ்­து­மஸ் உணர்வை இல்­ல­வா­சி­க­ளுக்­குக் கொண்டு சேர்க்­கும் வகை­யில், அங்கு பணிபுரி­ப­வர்­கள் இல்லவாசிகளுடன் ஒன்றிணைந்து காலு­றைகளில்­ கிறிஸ்­து­மஸ் அலங்­கா­ரங்­களை செய்­த­னர்.

கண்கவ­ரும் விதத்­தில் அலங்­க­ரிக்­கப்­பட்ட அந்தக் காலு­றை­கள், குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் படுக்­கை­களில் இம்­மா­தம் 12ஆம் தேதி­யி­லி­ருந்து தொங்­க­வி­டப்­பட்­டன.

காலு­றை­களை அலங்­க­ரித்­தது மட்­டு­மின்றி, குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஒன்­று­கூடி சிறிய பனி­மனி­தன் பொம்­மை­க­ளை­யும் இல்­லத்­தைச் சுற்றி பண்­டி­கைக் கால பொலிவை உரு­வாக்க அலங்­கா­ரங்­க­ளை­யும் செய்­த­னர்.

இல்லவாசிகளின் கைவினை, படைப்புத் திறன்­களை வெளிக்­காட்­டும் வித­மாக இந்த நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்­றன.

81 வய­தா­கும் குடி­யி­ருப்­பா­ளர் திரு­வாட்டி பூங்­கா­வ­னம், பிற குடி­யி­ருப்­பா­ளர்­க­ளு­டன் ஒன்­றி­ணைந்து பனி­ம­னி­தன் பொம்­மை­க­ளைச் செய்­தது தமக்கு இன்­பத்தை அளித்­த­தா­கக் கூறி­னார்.

அவர்­க­ளு­டன் இணைந்து ஈடு­பட்ட இந்த நட­வ­டிக்­கை­யின் மூலம் தாங்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ஊக்­க­ம­ளித்­துக்­கொண்­ட­தை­யும் அவர் பகிர்ந்­து­கொண்­டார்.