நம்பிக்கையும் புத்துணர்வும் ஊட்டும் ஆண்டாக...

நம்பிக்கையும் புத்துணர்வும் ஊட்டும் ஆண்டாக...

1 mins read
26677218-696d-47a1-ab76-d8433e987678
-

2022ல் சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறை கொவிட்-19 தொற்றிலிருந்து வலுவாகவும் பாதுகாப்பாகவும் மீண்டது. நம் எல்லைகளைத் திறந்து நாம் உலகத்துடன் மீண்டும் இணைந்தோம். பயணிகளுக்குக் கூடுதலான இணைப்புகளை அளித்தோம். உறுதியான நமது முத்தரப்பு கூட்டாண்மைகளுக்குச் சான்றாக, சிங்கப்பூர் துறைமுகம் 24 மணி நேரமும் தொடர்ந்து சுமூகமாக இயங்கி வந்தது. இனி 2023ஐ நம்பிக்கையுடனும் புத்துணர்வுடனும் எதிர்நோக்குவோம்.

எஸ். ஈஸ்வரன், போக்குவரத்து அமைச்சர், வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்