கடந்த ஆண்டு பல இளையர்கள் தொண்டூழியம் புரிய எங்களுடன் இணைந்தது எங்களைப் பெரிதளவில் ஊக்குவித்தது. இணைய நடவடிக்கைகள் வழங்கும் வசதியான, சுலபமான அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, நேரடியாகவும் இணையம் வழியாகவும் அமைப்புகள் நிகழ்ச்சிகளை நடத்தவேண்டி வரலாம். இவ்வாண்டு, உதவி தேவைப்படும் இந்திய, தமிழ் சமூகப் பிரிவினரைக் கண்டறிந்து அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் முக்கிய நோக்கமாக இருக்கும்.
ஷெரீன் பேகம், தமிழர் பேர்வையின் இளையர் பிரிவு தலைவர்

