உடற்குறையுள்ள மாணவர்கள் வாழ்வில் சிறந்தோங்க ஆதரவு

மோன­லிசா

உடற்­கு­றை­யுள்ள மாண­வர்­

க­ளுக்­கான சிறப்பு கல்­வித் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யும் நோக்­கில் ‘தி கில்ட்’ எனும்

சிறப்­புப் பள்ளி, தங்­ளின் சாலை­யில் உள்ள ஃபினிக்ஸ் பார்க்­கில் இயங்கி வரு­கிறது.

கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்­கிய இப்­பள்­ளி­யில் 12 வயது முதல் 25 வயது வரை­யி­லான சிறப்­புத் தேவை மாண­வர்­கள் பயி­ல­லாம்.

தற்­ச­ம­யம் சிங்­கப்­பூர் உட்­பட பல்­வேறு வெளி­நாட்டு மாண­வர்­களும் இப்­பள்­ளி­யில் பயில்­கின்­ற­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பல ஆண்­டு­

க­ளாக ஆசி­ரி­யராகப் பணி­பு­ரிந்த திரு­வாட்டி ஜெய்ன் நட­ராஜு, உடற்குறையுள்ள மா­ண­வர்

­க­ளுக்­கென அனைத்து வச­தி­

க­ளு­டன் கூடிய ஒரு பள்­ளியைத் திறக்க வேண்­டும் என்ற தன்­னு­டைய நீண்­ட­நாள் கன­வைத் தன்­னு­டைய கண­வர் திரு கணேஷ்

கண­ப­தி­யின் துணை­யு­டன்

நன­வாக்­கி­யுள்­ளார்.

இங்கு பயி­லும் மாண­வர்­கள் எதிர்­கா­லத்­தில் சமூக ரீதி­யா­க­வும் உணர்வு ரீதி­யா­க­வும் தனித்­தி­றமை மற்­றும் கல்­வி­சார் ரீதி­யா­க­வும் வாழ்­வில் ஏற்­படும் சவால்­களை எதிர்­கொள்­ளத் தயார்ப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னர்.

இம்­மா­ண­வர்­க­ளுக்கு உணவு, பானத்­துறை, கலைத்­துறை, சில்­லறை வர்த்­த­கத் துறை, நிர்­வாக வேலை உள்­ளிட்ட பல்­வேறு துறை­களில் கால்­ப­திக்க பயிற்­சி­ய­ளிக்­கப்­

ப­டு­கிறது. மாண­வர்­க­ளுக்கு அவர்­க­ளு­டைய தனித்­தி­றமை சார்ந்த முழு­மை­யான கல்வி அனு­ப­வம் வழங்க இப்­பள்ளி வளா­கத்­தில் கலை மற்­றும் வடி­வ­மைப்பு அறை, தச்சு வேலை அறை, பன்­னோக்கு மண்­ட­பம், புகைப்­பட அறை, இசை அறை, உடற்­ப­யிற்­சிக் கூடம், வாழ்க்­கைத்­தி­றன்­கள் அறை உள்­ளிட்ட பல்­வேறு வச­தி­கள் உள்­ளன.

“ஒவ்­வொரு மாண­வ­ரும் எவ்­விதப் பேத­மு­மின்றி சிறந்த கல்வி பெற வேண்­டும். சமூ­கத்­தில் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கும் சரி­ச­ம­மான பங்கு உண்டு. அவ்­வ­கை­யில் அனை­வர் போல­வும் தனித்து வாழ அவர்­களைத் தயார்ப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­யம். எங்­கள் பள்ளி மூலமாக அத­னைச் செயல்­ப­டுத்­து­வ­தில் மகிழ்ச்சி கொள்­கி­றேன்,” என்று 53 வய­து ­தி­ரு­வாட்டி ஜெய்ன் நட­ராஜு தெரி­வித்­தார்.

உடற்­கு­றை­யுள்ள மாண­வர்­க­ளுக்­கா­கப் பல்­வேறு ஒரு­நாள் நிகழ்­வு­க­ளை­யும் பயி­ல­ரங்­கு­

க­ளை­யும் இப்­பள்ளி நடத்­து­கிறது. தி கில்ட் பள்ளி குறித்து கூடு­தல் தக­வல்­க­ளைப் பெற https://www.theguild.edu.sg/ இணை­யத்­தளத்தை நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!