கடல் தாண்டி பொங்கும் தைத் திருநாள்

கடல் தாண்டி பொங்கும் தைத் திருநாள்

3 mins read
f9ad0ada-1ffd-409f-b5cb-e2d04e3115af
-
multi-img1 of 2

அனுஷா செல்­வ­மணி

புதிய மண­வாழ்க்­கை­யில் அடி­யெ­டுத்து வைத்­தி­ருக்­கும் அமு­தினி சிவம், 25, இன்று மன­ம­கிழ்ச்சி யுடன் கண­வ­ரு­டன் சேர்ந்து சிங்­கப்­பூ­ரில் பொங்­கல் பொங்கு கிறார். கடந்த நவம்­பர் மாதம் இவ­ருக்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் திருமணம் நடந்­தது.

கிரு­மித்­தொற்று கட்­டுப்­பாடு களால் இவ­ரால் தாய்­நாட்டுக்குத் திரும்பவர முடி­ய­வில்லை. நான்­காண்­டுப் பிரி­வுக்­குப் பிறகு பொங்­கல் கொண்­டா­டு­வ­தற்­காக இப்­போது சிங்­கப்­பூர் வந்து சேர்ந்­தி­ருக்­கி­றார் அமு­தினி.

ஆஸ்­தி­ரே­லி­யத் தலை­ந­க­ரான கேன்­ப­ரா­வைச் சேர்ந்த ஒரு­வரை மணம் முடித்த இவர், சிங்­கப்­பூ­ரில் குடும்­பத்­து­டன் தலைப் பொங்­க­லைக் கொண்­டாட மிக ஆவ­லு­டன் இருந்­தார்.

வெளி­நாட்­டில் இருந்­த­போது தம் குடும்­பத்­தா­ரைக் காண­வும் சிங்­கப்­பூர் உண­வு­வ­கை­க­ளைச் சுவைக்­க­வும் அவர் பெரி­தும் ஏங்­கி­னார்.

25 வய­தா­கும் அவ­ரது கண­வர் தாமஸ் பிரெண்­டேன் கடல் தாண்டி பய­ணிப்­பது இதுவே முதல் முறை. விமா­னத்­தில் முதல்­மு­றை­யாக தொலை­தூ­ரப் பய­ணம் மேற்­கொண்­ட­தில் தாமஸ் மிக உற்­சா­க­மாக இருந்­த­தாக பகிர்ந்­தார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இந்­தி­யர்­கள் பொங்­கல் வைத்து பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டா­டி­ய­ போதும் சிங்­கப்­பூர் வீடு­க­ளி­லும் லிட்­டில் இந்­தி­யா­வி­லும் இடம்­பெ­றும் சிறப்­பு­மிக்க தைத்­தி­ரு­நாள் கொண்­டாட்­டங்­கள் தனி ஆனந்­தம் தரு­பவை என்­றார் அமு­தினி.

மகப்­பேற்­றுத் தாதி­யாக பணி­பு­ரி­யும் அமு­தினி, 'ஓ' நிலைத் தேர்­வு­கள் முடிந்­த­வு­டன் 2014ல் கேன்­ப­ரா­விற்­குப் படிக்­கச் சென்­றார். அங்கு தம்­மு­டன் சேர்ந்து பகு­தி­நேர வேலை பார்த்­துக்­கொண்­டி­ருந்த ஒரு­வ­ரின் உயிர்த் தோழர்­தான் தாமஸ்.

சக ஊழி­ய­ரின் நண்­ப­ரோடு துளிர்விட்ட நட்பு, காத­லாக மலர்ந்­தது. மூன்­றரை ஆண்டு காத­லுக்­குப் பின்­னர் திரு­ம­ணம் நடந்­தே­றி­யது. கிறிஸ்­துவ சம­யத்­தைச் சேர்ந்த தாமஸ், இந்­திய கலா­சா­ரத்­தைப் பெரி­தும் விரும்­பு­கி­றார் என்­றார் அமு­தினி.

கோவில்­க­ளுக்கு செல்­வது மன அமைதி தரு­வ­தா­க­வும் இந்­திய கலா­சா­ரம் வண்­ண­ம­ய­மா­னது என்­றும் தமிழ் முர­சி­டம் கூறி­னார் தாமஸ்.

சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வொரு பொங்­க­லும் குடும்­பத்­தி­ன­ரோடு கொண்­டா­டி­யதை நினை­வு­கூர்ந்த அமு­தினி, இம்­முறை கண­வ­ரு­டன் கொண்­டா­டு­வது புதிய அனு­ப­வம் என்று கரு­து­கி­றார். கண­வ­ருக்­குத் தமி­ழ­ரின் பண்பு நெறி­களை எடுத்­து­ரைக்க பொங்­கல் போன்ற ஒரு திரு­நாள் ஏற்­றது என்­றார் அமு­தினி. தமிழ் உணவு வகை­களில் பாய­சத்­தை­யும் தோசை­யை­யும் விரும்பி உண்­ணும் தாமஸ், ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மின்­னி­யல் பொறி­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­கி­றார்.

மூன்று மூத்த சகோ­த­ரி­கள் கொண்ட அமு­தி­னிக்கு, தமது அக்­கா­வின் புதிய வீட்­டில் முதல்­மு­றை­யாக பொங்­கல் கொண்­டா­டு­வ­தால் கூடு­தல் மகிழ்ச்சி.

இம்­மாத இறு­தி­யில் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு புறப்­ப­ட­வி­ருக்­கும் இந்­தத் தம்­ப­தி­யி­னர், ஆஸ்­தி­ரே­லி­யா­வில் அடுத்த பொங்­கலை தமி­ழர் பண்­பாடு நிறைந்த திரு­நா­ளாக விம­ரி­சை­யா­கக் கொண்­டா­டத் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

வருங்­கா­லத்­தில் தங்­க­ளு­டைய குழந்­தை­க­ளி­ட­மும் இந்­திய பாரம்­ப­ரி­யத்­தின் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்த வேண்­டும் என்­றும் தங்­க­ளின் குடும்­பத்­தில் இந்­திய கலா­சா­ர­மும் நிரம்பி இருக்க வேண்­டு­மென்­றும் விரும்பு­கின்­ற­னர்.

"மரு­ம­கன் தமிழ் சொற்­க­ளைக் கற்­றுக்­கொள்­வ­தும் அவற்றை உச்­ச­ரிக்க முயற்சி செய்­வ­தை­யும் பார்க்­கும்­போது எனக்கு மிக­வும் பெரு­மை­யாக உள்­ளது. தமி­ழர்­க­ளுக்கு முக்­கி­ய­மான பொங்­கல் திரு­நாளை இங்கு எங்­க­ளோடு கொண்­டா­டு­வ­தும் பிற்­கா­லத்­தில் அவர்­கள் அந்த மரபை வெளி­நாட்­டில் தொடர நினைப்­ப­தும் மகிழ்ச்­சி­யைத் தரு­கிறது," என்று கூறி­னார் தாயார் சரஸ்­வதி இளங்­கோ­வன், 58.

"என்­னு­டைய புதிய வீட்­டில் தங்கை பொங்­கல் கொண்­டா­டு­வது மகிழ்ச்­சி­யாக உள்­ளது. தாமஸ் பொங்­க­லும் பாய­ச­மும் சமைப்­ப­தற்கு காட்­டும் ஆர்­வம் பாராட்­டப்­பட வேண்­டி­யது," என்­கி­றார் அமு­தி­னி­யின் சகோ­தரி சிவ­காமி சிவம், 35.