இரண்டு தலைமுறையினரை இணைத்த தைத் திருநாள்

இரண்டு தலைமுறையினரை இணைத்த தைத் திருநாள்

2 mins read
713fe057-ad4e-4206-b99e-5f61768fe4da
-
Google News Preferred Icon

பொன்­மணி உத­ய­கு­மார்

இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­து­டன் இணைந்து சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம் (சிண்டா) ஏற்­பாடு செய்த பொங்­கல் வைக்­கும் பயி­ல­ரங்கு நேற்று இந்­திய மர­பு­டைமை நிலைய வளா­கத்­தில் நடை­பெற்­றது. பொங்­கல் கொண்­டாட்­டங்­க­ளின் ஓர் அங்­க­மான இந்­நி­கழ்ச்­சி­யில் ஏறக்­கு­றைய 50 பேர் கலந்­து­கொண்­ட­னர். பொங்­கல் கொண்­டாட்­டங்­களில் சமூ­கத்­தின் இரு முக்­கிய தரப்­பி­ன­ரான இளை­யர்­க­ளுக்­கும் முதி­ய­வர்­க­ளுக்­கும் இடையே பிணைப்பை ஏற்­ப­டுத்த முதல் முறை­யாக இந்த நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

"மொழி, கலா­சா­ரம், பண்­பாடு போன்­றவை நமது சமூ­கத்­தில் வேரூன்­று­வ­தற்கு முக்­கிய தூண்­க­ளாக இருந்த மூத்­தோர், இன்று வெவ்­வேறு கார­ணங்­க­ளால் தங்­க­ளது முதுமை காலத்­தில் தனி­யாக வசித்து வரு­கின்­ற­னர்.

"பிற­ரைப் போல் இவர்­களும் பொங்­கலை விழா­வா­கக் கொண்­டாட வேண்­டும் என்ற எண்­ணத்­தி­லும் இளை­யர்­க­ளி­டம் பொங்­கல் குறித்த புரி­தலை விரி­வு­ப­டுத்­தும் நோக்­கத்­தி­லும் நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது," என்று சிண்­டா­வின் தலைமை நிர்­வாகி அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் கூறி­னார்.

இது­போன்ற நிகழ்ச்­சி­கள் தமிழ் பண்­பாடு, மரபு போன்­ற­வற்றை வளர்க்க இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­துக்கு நல்ல வாய்ப்­பாய் அமை­வ­தாக இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தின் பொது மேலா­ளர் மரியா பவானி தாஸ் குறிப்­பிட்­டார்.

வீட்­டில் எளி­மை­யான பொங்­க­லுக்­குப் பழ­கிப் போயி­ருந்த அ. பர்­வதா தாரணி, 19, கூட்­டா­கப் பொங்­கல் வைத்­துக் கொண்­டா­டி­யது புதிய அனு­ப­வ­மாக இருந்­தது என்­றார். மூத்­தோ­ரின் சுறு­சு­றுப்­பைப் பார்த்­த­வு­டன் அவர் களி­டம் பல­வற்­றைக் கேட்­ட­றிந்து அவர்­க­ளின் சுறு­சு­றுப்­பைத் தாமும் அடை­ய­வேண்­டும் என்ற ஆவல் பிறந்­த­தாக அவர் பகிர்ந்து கொண்­டார்.

இந்­நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொள்ள ஆவ­லு­டன் காத்­தி­ருந்­த­தா­கக் கூறி­னார் இளை­யர் தஸ்­வின் விஜய்­கு­மார், 23, இது­போல தொடர்ந்து சமூ­கத்­து­டன் இணைந்து கொண்­டாட்­டங்­களில் கலந்­து­கொள்­ளப் போவ­தா­க­வும் அவர் சொன்­னார்.

தைத் திரு­நா­ளின் முக்­கி­யத்­து­வம் பற்றி இளை­ய­ருக்கு எடுத்­து­ரைக்க நிகழ்ச்சி நல்ல வாய்ப்­பாக அமைந்­தது என்­றார் தேவி இந்­திரா பாபு, 68. முன்பு வெளி­யில் விறகு கொண்டு பொங்­கல் வைத்த நினை­வு­களை இளை­யர்­க­ளு­டன் அவர் பகிர்ந்­து­கொண்­ட­ார். இளை­யர்­கள் ஆர்­வத்­து­டன் மூத்­தோ­ரி­டம் பல கேள்­வி­கள் கேட்­ட­தும் அவர்­க­ளு­டன் இணைந்து உற்­சா­க­மாக பொங்­கல் கொண்­டாடி­ய­தும் மகிழ்ச்சி தந்ததாக திருவாட்டி தேவி இந்திரா சொன்­னார்.

நேற்று நடை­பெற்ற மதிய உணவு உப­ச­ரிப்­பில் இளை­யர்­களும் மூத்­தோ­ரும் உரை­யாடி உணவு உண்டு மகிழ்ந்­த­னர். அந்நிகழ்­வின் நினை­வு­கள் இளை­யர்­களின் மன­தில் நீங்கா இடம் பிடிக்­கும் என்று நம்­பு­வ­தாக திரு அன்­ப­ரசு தெரி­வித்­தார்.