பொன்விழா கண்ட நாதன்-கிருஷ்ணம்மா தம்பதி: அன்பால் ஆன வாழ்வே இனிமையானது

பொன்விழா கண்ட நாதன்-கிருஷ்ணம்மா தம்பதி: அன்பால் ஆன வாழ்வே இனிமையானது

3 mins read
eb477572-92e9-4f3d-80ab-bb1ac12952af
-
multi-img1 of 2

மோன­லிசா

"பார்த்த தரு­ணத்­தி­லேயே இவள் தான் என்­ன­வள் என்று தோன்­றி­யது. அக்­கா­லத்­தில் நாங்­கள் காத­லை­யும் திரு­ம­ணத்­தை­யும் வெவ்­வே­றாக கரு­தி­யது இல்லை. வாழ்க்­கைப் பய­ணத்­தில் இணை­வ­தற்­கான நுழை­வுச்­சீட்­டா­கக் காத­லைப் பார்த்­தோம்," என்று கூறி­ய­படி இனி­மை­யான நினை­வு­களில் மூழ்­கி­னார் ஆர். நாதன்.

ஓய்­வு­பெற்ற மேஜ­ரான திரு நாதன், தேசிய சேவையை முடித்து பணி­யில் சேர்ந்த காலம் அது. இவர் வசித்த அதே பகு­திக்­குக் குடி­வந்­தார் கிருஷ்­ணம்மா ராமச்­சந்­தி­ரன் என்ற இளம்­பெண். முதல் சந்­திப்­பி­லேயே காதல் வயப்­பட்ட நாதன், துணிச்­ச­லு­டன் கிருஷ்­ணம்­மா­வி­ட­மும் குடும்­பத்­தி­ன­ரி­ட­மும் தம் விருப்­பத்­தைத் தெரி­வித்­தார்.

திரு நாதன், பத்து பிள்ளை களுள் நான்­கா­வது பிள்ளை, மகன்­களில் மூத்­த­வர். அத­னால் இளம் வய­தி­லேயே பெற்­றோ­ருக்கு உத­வி­யா­கக் குடும்­பப் பொறுப்பை ஏற்­றி­ருந்­தார்.

தமக்­கும் தம் குடும்­பத்­தி­ன­ருக்­கும் நாதன் மீது நல்ல எண்­ண­மும் மரி­யா­தை­யும் இருந்­த­போ­தும், ஆறு மாதத்துக்குப் பின்­னரே தமது சம்­ம­தத்­தைத் தெரி­வித்­தார் கிருஷ்­ணம்மா. இரு குடும்­பங்­க­ளின் ஆசியு­டன் 1972ஆம் ஆண்டு ஜன­வரி 28ஆம் தேதி இரு­வ­ரும் திரு­மண உற­வில் இணைந்­த­னர்.

காதல் சுவை­கூ­டிய தங்­கள் ஐம்­ப­தாண்டு திரு­மண பந்­தத்­தின் அச்­சா­ணியே புரி­த­லும் சகிப்­புத்­தன்­மை­யும்­தான் என்று கூறி­னர் பொன்­விழா கண்ட இத்­தம்­ப­தி­யர்.

தற்­போது 72 வய­தா­கும் இவர்­கள், அண்­மை­யில் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற திரு­மண பொன்­விழா கொண்­டாட்ட நிகழ்­வில் அங்கீகரிக்கப்பட்டனர்.

திரு­ம­ண­மாகி பத்து ஆண்டு களாக அவர்­கள் கூட்­டுக் குடும்­பத்­தில் வாழ்ந்­த­னர். தம்­மை­விட தம் பெற்­றோர் மீதும் சகோ­தர சகோ­த­ரி­கள் மீதும் கிருஷ்­ணம்மா அதிக அன்­பு­ட­னும் பாசத்­து­ட­னும் இருந்­ததை நினை­வு­கூர்ந்­தார் நாதன். பெரிய குடும்­பம், பொறுப்பு­கள், பொரு­ளா­தார நெருக்­கடி எனப் பல்­வேறு இக்­கட்­டு­க­ளுக்கு இடை­யே­யும் தனியே இருந்­திட அதி­கம் நேரம் கிடைக்­காத சூழ­லி­லும் குறை களைப் பாரா­மல் நிறை­களை மெச்சி மகிழ்­வு­டன் வாழ்ந்­த­னர்.

பணி­நி­மித்­த­மாக நாதன் அடிக்­கடி மாதக்­க­ணக்­கில் பய­ணங்­கள் மேற்­கொள்ள வேண்­டி­யி­ருந்­த­போ­தும் தனி­யா­ளாக குடும்­பத்­தைக் கவ­னித்­துக்­கொண்­டார் கிருஷ்­ணம்மா.

"எவ்­வ­ளவு தூரத்­தில் இருந்­தா­லும் அவர் மனம் என்­னை­யும் எங்­கள் இரு பிள்­ளை­க­ளை­யும் தான் நினைத்­துக்­கொண்­டி­ருந்­தது," என்ற கிருஷ்­ணம்மா, தம் கண­வ­ரின் தோளில் பாசத்­து­டன் சாய்ந்­து­கொண்­டார்.

ஒரு­முறை நாதன் வெளி­நாடு சென்­றி­ருந்­த­போது கிருஷ்­ணம்­மா­வின் தாயா­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். தற்­செ­ய­லாக தொலை­பே­சி­யில் அழைத்த நாத­னி­டம் வாய்த்­த­வறி கிருஷ்­ணம்மா நடந்­த­வற்­றைக் கூற, உடனே அடுத்த விமா­னத்­தைப் பிடித்து சிங்­கப்­பூர் வந்து மருத்­து­வ­ம­னைக்கு விரைந்­தார் நாதன்.

தம் குரலை வைத்தே மன ஓட்­டத்­தைப் புரிந்­து­கொண்ட அவ­ரின் செயல்­பாடு தம்மை நெகிழ வைத்­த­தாக குறிப்­பிட்ட கிருஷ்­ணம்மா, "காதல் என்­பது சொற்­க­ளால் வரு­ணிக்­கப்­ப­டு­வதோ அன்­ப­ளிப்­பு­கள் வாங்­கித் தரு­வதோ மட்­டும் அல்ல. அன்­றாட செயல்­களில் வெளிப்­படும் புரி­தல், பொறுப்­பு­ணர்வு, பாது­காப்பு, நம்­பிக்கை ஆகி­ய­வற்­றின் கூட்­டா­கும்," என்­றார்.

இளம் தம்­ப­தி­யி­னர் சிலர் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் விட்­டுக்­கொ­டுப்­ப­தைத் தோல்­வி­யா­கக் கரு­து­ வ­தை­யும் ஆரோக்­கி­ய­மற்ற போட்­டி­யில் திரு­மண வாழ்­வை­ அ­ணுகு ­வ­தை­வும் தாங்­கள் கவ­னித்­துள்­ள­தாக வருத்­தத்­து­டன் கூறி­னர் இத்­தம்­ப­தி­யி­னர். இதுவே பெரும்­பா­லான மண­வி­லக்­கு­களுக்­குக் கார­ணம் என்­றும் அவர்­கள் கூறி­னர்.

திரு­ம­ண­மான புதி­தில் எத்­த­கைய சூழ­லி­லும் 'விவா­க­ரத்து' என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என எடுத்­துக்­கொண்ட உறுதி இன்­று­வரை அவர்­கள் இரு­வ­ரி­ட­மும் உள்­ளது.

"நம்மை மன­தார நேசிக்­கும் வாழ்க்­கைத் துணையை நம்­மால் நிச்­ச­யம் காயப்­ப­டுத்த முடி­யாது, அப்­படி இருக்­கும்­போது அவ­ரு­டன் ஏன் சண்­டை­ வரவேண்டும்?

"இரு வேறு மனி­தர்­கள் ஒரே கூரை­யின்கீழ் வாழும்­போது நிச்­ச­யம் கருத்­து­வே­று­பா­டு­கள் நில­வும். ஆனால் அது நிரந்­தர மனக்­க­சப்­பாக மாறு­கிறது என்­றால் அங்கே உண்­மை­யான நேசம் மறை­கிறது என்றே பொருள்," என்­றார் திரு­வாட்டி கிருஷ்­ணம்மா.

குடும்­பப் பொறுப்­பு­க­ளை­யும் கட­மை­க­ளை­யும் முடித்து ஓய்வு பெற்ற பின்­னர்­தான், முதல்­மு­றை­யாக இரு­வ­ரும் நண்­பர்­க­ளு­டன் வெளி­நாட்­டுச் சுற்­றுப்­ப­ய­ணங்­களை மேற்­கொண்­ட­னர். இன்று தங்­க­ளு­டைய மகள், மரு­ம­கன், பேத்தி, பேரன் என ஆனந்­த­மாக வாழ்ந்துவரும் இவர்­க­ளுக்குப் பேரப்­பிள்­ளை­களே உயிர்­நாடி.

அன்பை மையப்­ப­டுத்­திய வாழ்க்கை என்­றென்­றும் இனி­மை­யா­னது என்று 50 ஆண்­டு ­க­ளுக்­கும் மேலாக வாழ்ந்து காட்டிய இந்­தத் தம்­ப­தி­யர் உற்­சா­க­மாய் தங்­க­ளின் காதல் பய­ணத்­தைத் தொடர்­கின்­ற­னர்.