'ஆரோக்கியம் பேணுவதற்கு குறுக்கு வழி ஏதுமில்லை'

'ஆரோக்கியம் பேணுவதற்கு குறுக்கு வழி ஏதுமில்லை'

3 mins read
58e63bc4-daea-4e7f-a9a6-a7abaa0c3ce5
படம்: ஆல்ஃபா பீஸ்ட் ஃபிட்னஸ் -

திரு இ.ஜே. ஃபிலிப் ஜோஷு­வா­விற்கு (படம்) வயது 42. நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் ஒரு நாள் மூச்­சுத் திண­ற­லு­டன் கண்­வி­ழித்த இவர், உட­லில் அதி­க­ளவு கொழுப்பு, உயர் ரத்த அழுத்­தம், மித­மான நீரி­ழிவு நோய், மித­மான மனச்­சோர்வு ஆகிய பாதிப்­பு­கள் இருப்­பதை மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் தெரிந்­து­கொண்­டார். அப்­போது இவ­ரது உடல் எடை 90 கிலோ­கி­ரா­முக்­கு­மேல் இருந்தது.

சிறு­வ­ய­தில் கட்­டுக்­கோப்­பாக உடலை வைத்­தி­ருந்த இவர், தேசிய சேவை­யின்­போது மின்­னற்­படை வீர­ரா­கச் சேவை­யாற்­றி­ய­வர். ஆனால் 20 வய­துக்­குப் பின்­னர் இவ­ரது உடல்­நிலை வலு­வி­ழக்­கத் தொடங்­கி­யது. அவ்வயதில், இர­வு­நே­ரக் கேளிக்­கைத் துறை­யில் ஊழி­ய­ரா­கச் சேர்ந்து, படிப்­படி­யாக உயர்ந்து மதுக்­கூட உரிமை­யா­ள­ரா­னார் ஜோஷுவா.

அதி­க­ளவு மது­பா­னம் அருந்­து­தல், மன­உ­ளைச்­சல், தூக்­க­மின்மை, உண­வுக் கட்­டுப்­பாடின்மை முத­லிய பழக்­கங்­கள் இவ­ரது உடல்­ந­ல­னை­யும் மன­ந­ல­னை­யும் பெரி­தும் பாதித்தன.

"இன்­னும் இரண்டு ஆண்­டு­களில் என் உடல்­ந­லம் வெகு­வாக மோச­ம­டை­யும் என அன்று மருத்­து­வர் கூறி­யது என்னை அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யது. அந்த நேரத்­தில் என் வாழ்க்­கையை உட­ன­டி­யாக மாற்­ற வேண்­டும் என்று எண்­ணி­னேன்," என்று மருத்­து­வ­ரைப் பார்த்த சம்­ப­வத்தை நினை­வு­கூர்ந்­தார் ஜோஷுவா.

எனவே, உட­லு­று­திப் பய­ணத்­தைத் தொடங்­கி­னார். இவ­ரது பய­ணம் மேடு­பள்­ளங்­கள் நிறைந்­த­தாக இருந்­தது.

முத­லில், உடல் எடையை விரை­வா­கக் குறைக்க உறு­தி­ அளிக்­கும் பல்­வேறு வழி­மு­றை­களை முயற்சி செய்து களைத்­துப் போனார். மாத்­தி­ரை­கள், உண­வு­முறை மாற்­றங்­கள் எனப் பல­வற்­றை­யும் ஓரிரு மாதங்­கள் முயன்று பார்த்த இவர், இழந்த உடல் எடை மீண்­டும் அதி­க­ரிப்­பதை உணர்ந்து விரக்­தி­ய­டைந்­தார்.

ஆரோக்­கி­யம் பேணு­வ­தில் குறுக்­கு­வ­ழி­கள் எது­வும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, மீண்­டும் முதலில் இருந்து தொடங்க எண்ணி, உடற்­ப­யிற்­சிக்­கூ­டத்­துக்­குச் செல்­லத் தொடங்­கி­னார்.

"களைப்­பா­க­வும் சிர­ம­மா­க­வும் இருந்­தா­லும்­கூட உடற்­பயிற்சி முடித்த பின்­னர் கிட்­டும் மனத்­தெ­ளிவு ஊக்­க­ம­ளித்­தது. காலப்­போக்­கில், உடல் எடை­யைக் குறைப்­பது என் நோக்­க­மாக இல்லை. உடற்­ப­யிற்­சியை வாழ்க்­கை­மு­றை­யா­கக் கொண்டு அதை வழக்­க­மாக்­கிக்­கொள்­வதே என் இலக்­கா­னது," என்­கி­றார் ஜோஷுவா.

"2020ல் மீண்­டும் மருத்­து­வ­ரி­டம் சென்­ற­போது அனைத்­தும் சீராக இருப்­ப­தா­கக் கூறி அவரே வியந்­தது எனக்கு மன­நி­றைவு அளித்தது," என்­கி­றார் இவர்.

தற்­போது இவ­ரது உடல் எடை 71 கிலோ­கி­ராம்.

தாம் உணர்ந்­த­வற்­றைப் பகிர்ந்­து­கொள்­ள­வும் தனிப்­பட்ட உடற்­ப­யிற்சி சேவையை வழங்­க­வும் எண்ணி, உடற்­ப­யிற்­சிப் பயிற்­று­விப்­பா­ளர் படிப்பை மேற்­கொண்டு 'ஆல்ஃபா பீஸ்ட் ஃபிட்னஸ்' எனும் உடற்­ப­யிற்­சிக்­கூ­டத்தை 2021ல் நிறு­வி­னார் ஜோஷுவா. 16 வயது முதல் 65 வயது வரை­யி­லா­னோர் 'ஆல்ஃபா பீஸ்ட்' உடற்­ப­யிற்­சிக் கூடத்­தில் பயிற்சி பெற்று வரு­கின்­ற­னர். தற்­காப்­புக் கலை­கள், குத்­துச்­சண்டை முத­லி­ய­வற்­றை­ஒருங்­கி­ணைக்­கும் உடற்­ப­யிற்­சித் திட்­டங்­களை 'ஆல்ஃபா பீஸ்ட்' வழங்கி வரு­கிறது.

ஆரம்­ப­நிலை, நடு­நிலை, மேம்­பட்ட நிலை என மூன்று நிலை­களில் ஒன்று முதல் மூன்று மாதம் வரை நீடிக்­கும் உடற்­ப­யிற்­சித் திட்­டங்­களை ஜோஷு­வா­வும் அவ­ரு­டன் பணி­பு­ரி­யும் ஆறு பயிற்­று­விப்­பா­ளர்­களும் வகுத்­துள்­ள­னர்.

"உடல் ஆரோக்­கி­யப் பய­ணம் என்­பது ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வேறு­பட்ட அனு­ப­வ­மாக இருக்­கும். சமூக வாழ்க்கை பாதிக்­கப்­ப­டு­வது போலத் தோன்றலாம். ஆனால், இந்­தச் சிறு தியா­கங்­கள் பெரிய பலன்­களை ஈட்­டித் தரும்," என்று கூறி­னார் ஜோஷுவா.

இவரைக் கேலி செய்த இரவுநேரக் கேளிக்­கைத் துறை நண்­பர்­களே அவ­ர­வர்­க்கு ஏற்­பட்ட மருத்­து­வச் சிக்­கல்­க­ளுக்­குப் பின்­னர் ஆரோக்­கி­யத்­தின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து தனது பாதை­யில் இணைந்­து­கொண்­ட­தா­க­வும் இவர் குறிப்­பிட்­டார்.