இசைக்கலவையாக இனிமை சேர்த்த 'வேணு நாதம்'

இசைக்கலவையாக இனிமை சேர்த்த 'வேணு நாதம்'

2 mins read
860ae714-0f6e-487c-b310-d4f7650f15fa
-

புல்­லாங்­கு­ழல் இசை­யின் தொடக்­கத்­தை­யும் வர­லாற்­றை­யும் எடுத்­துக்­கூ­றும் முயற்­சி­யா­கப் படைக்­கப்­பட்­டது 'வேணு நாதம்' இசை நிகழ்ச்சி. மூங்­கில் புல்­லாங்­கு­ழல்­க­ளின் தனித்­து­வ­மான இந்­திய இசை பாணி­களை இதில் மேடை­யேற்­றி­யது பிரம்­மாஸ்­திரா இசைக்­குழு.

ஸ்டாம்­ஃபர்ட் கலை நிலை­யத்­தில் இம்­மா­தம் 8ஆம் தேதி, தேசிய கலை மன்­றத்­தின் ஆத­ர­வு­டன் இக்­கச்­சேரி நடை­பெற்­றது.

'த வம்­ஷிகா குயின்­டெட்' எனும் பெய­ரின்­கீழ் இணைந்­துள்ள இளம் புல்­லாங்­கு­ழல் கலை­ஞர்­கள் ஐவ­ரும் இதில் தங்­கள் தனித்­தி­றன்­களை வெளிக்­காட்­டி­னர்.

இவர்­க­ளு­டன், ரிட் சூ, ஜேக்கி எங் போன்ற உள்­ளூர்க் கலை­ஞர்­களும் கச்­சே­ரிக்­குக் களை கூட்­டி­னர். மொத்­தம் ஒன்­பது கலை­ஞர்­கள் பங்­கேற்ற நிகழ்ச்­சியை, டாக்­டர் கான­வி­நோ­தன் ரத்­னம் வழி­ந­டத்­தி­னார். ஐந்து பாகங்­க­ளாக படைக்­கப்­பட்ட 'வேணு நாதம்', இசைப் பண்­பாடு­க­ளைப் பின்­பற்­றி­ய­து­டன் நவீன இசை­யின் தாக்­கங்­க­ளை­யும் கொண்­டி­ருந்­தது.

ஏறக்­கு­றைய ஆறு மாத முதற்­கட்ட பணி­க­ளுக்­குப் பின்­னர், இரண்டு மாத காலம் பயிற்­சி­யும் ஒத்­தி­கை­யும் மேற்­கொண்­டி­ருந்­த­னர் இசைக் கலை­ஞர்­கள்.

"புல்­லாங்­கு­ழல் வாசிக்­கும் நாங்­கள் ஐவ­ரும் வெவ்­வேறு பாணி கொண்­ட­வர்­கள். ஆகை­யால், இப்­ப­டைப்­புக்­காக ஒன்­றி­ணைந்­தது வேறு­பட்ட அனு­ப­வ­மாக இருந்­தது. குறு­கிய காலத்­தில் பயிற்சி மேற்­கொண்டு இப்­ப­டைப்பை வெற்­றி­க­ர­மாக மேடை­யேற்­றி­ய­தில் மகிழ்ச்சி அடை­கி­றோம்," என்­றார், வேணு நாதம் கச்­சே­ரி­யின் தயா­ரிப்­பா­ள­ரும் புல்­லாங்­கு­ழல் கலை­ஞ­ரு­மான 29 வயது நிரஞ்­சன் பாண்­டி­யன்.

இதற்கு முன்­னர் 2016ல் முதல்­மு­றை­யாக படைக்­கப்­பட்­டது 'வேணு நாதம்'. அந்­தக் கச்­சே­ரி­யைக் காட்­டி­லும் இரண்­டா­வது முறை நடை­பெற்ற இக்­கச்­சே­ரி­யில் மேற்­கத்­திய இசை பாணி­யின் அம்­சங்­கள் அதி­க­மாக இடம்­பெற்­றி­ருந்­தன.

கர்­நா­டக சங்­கீ­தக் கட்­ட­மைப்­பில் கலவை பாணி­யி­லான இசை­யைப் படைக்க முயற்சி செய்­த­தா­கக் கூறி­னார் நிரஞ்­சன்.

பார்­வை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து அமோக வர­வேற்பு கிடைத்­த­தா­கக் கூறி­னார் இவர்.

அத­னால் வரும் ஆண்­டு­களில் வேணு நாதத்­தின் மூன்­றா­வது நிகழ்ச்சியை ஏற்­பாடு செய்­யும் திட்­டம் இருப்­ப­தா­க­வும் நிரஞ்சன் குறிப்பிட்டார்.

செய்தி: ஆ. விஷ்ணு வர்­தினி