அன்புக்கும் பண்புக்கும் அங்கீகாரம்

அன்புக்கும் பண்புக்கும் அங்கீகாரம்

3 mins read
cfd9d6d8-7521-4f93-86d6-9a0ed6c7ae8f
-
multi-img1 of 2

ஆ. விஷ்ணு வர்­தினி

வாழ்­வின் இன்­ப­துன்­பங்­களை நாம் ஒரே குடும்­ப­மா­கக் கடந்­து­வ­ரு­வது வழக்­கம். ஆனால் திரு­வாட்டி லீலா கோர், கடந்த 25 ஆண்­டு­க­ளாக அவ­ரின் குடும்­பப் பணி­யா­ள­ராக இருந்­து­வ­ரும் திரு­வாட்டி ஆனந்­தி­யு­டன் பல இழப்­பு­க­ளைச் சந்­தித்து வந்­துள்­ளார். ஒரு­வ­ருக்கு ஒரு­வர் தோள்­கொ­டுத்து ஒரே குடும்­ப­மாக அவர்­கள் பழ­கி­வ­ரு­கின்­ற­னர்.

நான்­கா­வது முறை­யா­கச் செயற்­கைக் கருத்­த­ரிப்பு செய்­த­தன் மூலம் திரு­மதி லீலா­வின் இரண்­டா­வது குழந்தை பிறந்­தது. குழந்­தை­யைத் திரு­வாட்டி ஆனந்தி பரா­ம­ரித்து வந்­தார். ஆனால் ஆறு மாதத்­தில் எதிர்­பா­ராத வித­மாக குழந்தை இறந்­ததை அடுத்து மீளாத் துய­ரில் அக்­கு­டும்­பம் ஆழ்ந்­தது. அந்­நே­ரத்­தில் திரு­வாட்டி லீலா­வுக்­கும் பள்­ளி­யில் கவ­னம் செலுத்த முடி­யா­மல் தவித்த அவ­ரின் ஒரே மகள் கெல்­லிக்­கும் பக்­க­ப­ல­மாக இருந்­தார் திரு­வாட்டி ஆனந்தி.

இவ்­வா­றி­ருக்க 2020ல் சாலை விபத்­தொன்­றில் இட­து தோள் எலும்­பில் பிரச்­சினை ஏற்­பட்­ட­தால் திரு­வாட்டி ஆனந்தி மூன்று மாதங்­க­ளுக்கு முடங்­கிப் போனார். ஏறக்­கு­றைய இரண்­டா­யி­ரம் வெள்­ளி­யி­லான அவ­ரது மருத்­து­வச் செல­வு­க­ளைத் திரு­வாட்டி லீலா ஏற்­றுக்­கொண்­ட­து­டன் அவரை வீட்­டில் வைத்துப் பர­மா­ரித்­தும் வந்­தார்.

திரு­வாட்டி ஆனந்­தி­யின் குடும்ப விவ­கா­ரங்­களில் தோழி­யா­கக் கைகொ­டுத்­துள்ள திரு­வாட்டி லீலாவை, வேலை­வாய்ப்பு நிறு­வ­னங்­கள் சங்­கத்­தின் சிறந்த முத­லாளி விரு­துக்­காக அவர் நிய­ம­னம் செய்­தி­ருந்­தார். இம்­மா­தம் 1ஆம் தேதி­யன்று நடந்­தே­றிய விரு­த­ளிப்பு நிகழ்­வில் மூன்­றா­வது நிலை­யில் திரு­வாட்டி லீலா அங்­கீ­ரிக்­கப்­பட்­டார்.

திரு­வாட்டி லீலா­வின் நான்­கறை வீவக வீட்­டில் திரு­வாட்டி லீலா, அவ­ரின் கண­வர், கண­வ­ரின் மன­ந­லம் பாதிக்­கப்­பட்ட தங்கை, அவர்­க­ளின் நாய்க்­குட்டி ஆகி­யோ­ரைத் தின­மும் பர­மா­ரித்து வரு­கி­றார் திரு­வாட்டி ஆனந்தி. இவர் 27 வய­தாக இருந்­த­போது வீட்டு வேலை­கள் பற்றி அதி­கம் அறிந்­தி­ராத நிலை­யில் திரு­வாட்டி லீலா­வின் வீட்­டுக்கு வந்­தார்.

"இஸ்­திரி பெட்­டி­யைப் பயன்­ப­டுத்­தி­ய­போது பல­முறை துணி­களை நான் தவ­று­த­லா­கப் பொசுக்­கி­ய­துண்டு. எனக்கு இந்­திய சமை­ய­லும் தெரி­யாது. திரு­வாட்டி லீலா­வும் அவ­ரின் அம்­மா­வும் பொறு­மை­யாக எனக்கு வழி­காட்­டி­னர்," என்­றார் திரு­வாட்டி ஆனந்தி, 52.

இன்று சீன, மலாய், உணவு வகை­களை­யும் பதார்த்­தங்­க­ளை­யும் சமைப்­பது அவ­ருக்கு அத்­து­படி. அவ­ருக்கு ஆங்­கில மொழி­யு­டன் கணி­னிப் பயன்­பாட்­டை­யும் கற்­பித்­தார் கெல்லி கோர்.

"இப்­போது ஆங்­கி­லச் செய்­தித்­தாள்­க­ளைக்­கூட அவர் வாசிக்­கி­றார். சொந்­தக் காலில் நிற்­கி­றார்," என்று கூறிப் புன்­ன­கைத்­தார் திரு­வாட்டி லீலா.

திரு­வாட்டி லீலா­வின் தாயார் திரு­வாட்டி கம­லாஷி, 2010ல் மறைந்­து­விட்­டார். அது­வரை அவர் பல பணி­யா­ளர்­களை வீட்­டுக்கு அழைத்து விருந்­து­ப­ச­ரிப்­ப­துண்டு. இவ்­வ­ழக்­கத்தை ஒவ்­வொரு ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யும் தொடர்­கி­றார் திரு­வாட்டி லீலா. லீலா-ஆனந்தி இரு­வ­ரும் கொண்­டுள்ள நல்­லு­ற­வைக் கண்டு வீட்­டுக்கு வரு­வோர் வியப்­ப­துண்டு.

இத்­த­கைய அழ­கான குடும்­பச் சூழல், திரு­வாட்டி லிண்டா பிரே­மின் வீட்­டி­லும் நில­வு­கிறது. கடந்த பத்­தாண்­டு­க­ளாக திரு­வாட்டி லிண்­டா­வின் இல்­லப் பணி­யா­ள­ராக இருந்து வரு­கி­றார், 47 வயது திரு­வாட்டி ஐயப்­பன் கலா­வதி. இவர், சிறந்த வெளி­நாட்டு பணி­யா­ள­ருக்­கான பாராட்டு விரு­தைப் பெற்­றார்.

ஆறு மாதக் குழந்­தை­யாக இருந்த திரு­வாட்டி லிண்­டா­வின் ஒரே மக­னைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக முதன்­மு­த­லில் வேலை­யில் சேர்ந்­தார் திரு­வாட்டி கலா. பொரு­ளா­தா­ரச் சூழல் கார­ண­மாக இரு இளம்­வ­யது மகள்­களை விட்டு சிங்­கப்­பூர் வந்த அவர், இங்­கும் ஒரு குடும்­பம் தமக்­குக் கிடைத்­த­தா­கக் கூறி­னார்.

திரு­வாட்டி லிண்­டா­வின் கண­வ­ருக்கு உள்ள மருத்­து­வச் சிக்­கல்­க­ளைச் சமா­ளிப்­ப­தற்கு திரு­வாட்டி கலா உத­வி­னார். மக­னின் வள­ரும் பரு­வத்­தில் தமது பட்­ட­யப்­ப­டிப்பு, இளங்­கலை, முது­க­லைப் படிப்­பு­களை மேற்­கொண்ட திரு­வாட்டி லிண்டா, வீட்­டில் செல­விட்ட நேரம் குறைவு. அச்­ச­ம­யங்­களில் தம் மக­னின் பரா­ம­ரிப்­பில் கண்­ணும் கருத்­து­மாக திரு­வாட்டி கலா இருந்­ததை நினை­வு­கூர்ந்­தார் திரு­வாட்டி லிண்டா.

ஏழு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சிறு­நீ­ர­கக் கோளா­றால் கண­வர் உயி­ரி­ழந்த பின்­னர் இரு மகள்­க­ளுக்­கும் சிங்­கப்­பூ­ரில் இருந்­த­வாறே திரு­மண ஏற்­பா­டு­களைச் செய்­தார் திரு­வாட்டி கலா.

"அவ­ரது தாய்­மைப் பய­ணத்­தில் சிக்­கல்­கள் ஏரா­ளம். இரு மகள்­க­ளைத் தனியே விட்டு வந்த அவர், எப்­போ­துமே மன­தைத் திடப்­ப­டுத்­திக் கொண்டு செயல்­படும் விதம் எனக்கு ஒரு படிப்­பினை," என்­றார் திரு­வாட்டி கலா.