இளம் பிள்ளைகளுடைய குறைந்த வருமானத் தம்பதியர் குடும்பங்களுக்குப் பேராதரவு

இளம் பிள்ளைகளுடைய குறைந்த வருமானத் தம்பதியர் குடும்பங்களுக்குப் பேராதரவு

3 mins read
a92aa679-a2bb-4abd-8dd8-0a9b13ce4d2b
கண­வர், மூன்று பிள்­ளை­கள், அத்தை என மொத்­தம் ரேணுகா அறி­வ­ழ­க­னின் குடும்­பத்­தில் அறு­வர் உள்­ள­னர். படம்: ரேணுகா -

உலகம் முழுவதுமே பணவீக்கம் அதாவது விலைவாசி கன்னாபின்னாவென்று எகிறிநிற்கிறது. சிங்கப்பூரில் அண்மைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பணவீக்கம் கூடிவிட்டது. சென்ற ஆண்­டு எல்லா பொருள்களுக்கு­மான பணவீக்கம் 6.1% கூடியது. 2021ஆம் ஆண்­டில் இது 2.3% ஆக நில­வி­யது. இந்த ஆண்டிலும் பணவீக்கம் தொடரும் என்றே பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த ஆண்டு முழு­மைக்­கும் பண­வீக்கம் 4.5% முதல் 5.5% வரை இருக்­கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொருள் சேவை வரியும் 8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனால் எல்லாக் குடும்பங்களுக்குமே சுமை கூடிவிட்டது.

மக்களின் சுமையைக் கொஞ்சம் குறைத்து, அவர்கள் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில் இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கான உதவிகளை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். குடும்பங்களின் வருமானம், உறுப்பினர் எண்ணிக்கை, பிள்ளைகளின் வயது, படிக்கும் பிள்ளைகளா, என்ன படிக்கிறார்கள், வீட்டில் வசிக்கும் முதியோர், அவர்களின் நிலை, வசிக்கும் வீட்டின் அளவு என்பதையெல்லாம் பொறுத்து குடும்பத்துக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.

மூன்று மாறுபட்ட குடும்பங்கள் பெறும் உதவிகளை இங்கே காணலாம்.

நான்கறை வீடு $4,000 மாத வருமானம்

கணவர் (42 வயது, செயல்முறை தொழில்நுட்பர்)

மனைவி (42 வயது, சுகாதார சேவை பணியாளர்)

கண­வர், மூன்று பிள்­ளை­கள், அத்தை என மொத்­தம் ரேணுகா அறி­வ­ழ­க­னின் குடும்­பத்­தில் அறு­வர் உள்­ள­னர்.

சுகா­தார சேவைத் துறை­யில் பணி­பு­ரி­யும் ரேணுகா, செயல்­முறைத் தொழில்­நு­ட்பராகப் பணிபுரியும் தம்­மு­டைய கண­வர் பிர­கா­ஷு­டன் இணைந்து ஒவ்­வொரு மாத­மும் ஏறத்­தாழ 4,000 வெள்ளி வரு­மா­னம் ஈட்­டு­கிறார்.

ஒவ்­வொரு மாத­மும் அத்­தி­யா­வ­சிய செல­வுக்கு 2,500 வெள்ளி வரை ஆகிறது.

இச்­சூ­ழ­லில் 12 வயது மகன், 10 வயது மகள், ஒன்­பது வயது மகன் ஆகி­யோ­ரின் இதர தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வது மிகச் சிர­ம­மாக உள்­ளது என்று கூறி­னார் ரேணுகா.

அத்­து­டன் தம்­மு­டைய இரு மகன்­களும் 'ஏடி­எச்டி' எனப்­படும் கவ­னக்­குறைவு மிகைச்­சு­றுதி குறை­பாட்­டால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் மருத்­துவச் செல­வும் கூடு­தல் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­து­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

தற்­ச­ம­யம் தோ பாயோ பகு­தி­யில் நான்­கறை வீட்­டில் வசித்து வரும் இந்­தக் குடும்­பத்­துக்கு, சிண்­டா­வின் ஆத­ரவு மிகுந்த துணை­ய­ளிக்­கிறது.

மேலும் ரேணுகாவின் அத்தை குழந்­தை­க­ளைப் பார்த்­துக்கொள்­வ­தால், பிள்­ளை­களை குழந்தைப் பரா­ம­ரிப்­பில் சேர்ப்­பது அல்­லது பணிப்­பெண் அமர்த்து வது போன்ற செல­வு­கள் குறை­கின்றன.

எனி­னும், உண­வுப் பொருள், போக்­கு­வ­ரத்து, அத்­தி­ய­வா­சி­யப் பொருள்­கள் என எல்­லாமே விலை­கூடி விட்­ட­தால் சமா­ளிப்­பது இந்­தக் குடும்­பத்­துக்கு சிர­ம­மாக உள்­ளது.

செல­வு­கள் கூடிய அள­வுக்கு வரு­மா­னம் உய­ராத நிலை­யில், அர­சாங்­கம் அளிக்­கும் உத­வித் தொகை­கள் கைகொ­டுக்­கும்.

நிரப்­புத்­தொகை­, வழங்­கு­தொ­கை­க­ளு­டன் பிள்ளை மேம்­பாட்­டுக் கணக்கு நிரப்­புத்­தொகை, சமூக மேம்­பாட்டு மன்­றப் பற்­றுச்­சீட்­டு­கள் உள்­ளிட்ட வெவ்­வேறு ஆத­ர­வுத் திட்­டங்­கள் இந்தக்­கு­டும்­பத்­திற்­குப் பேரு­த­வி­யாக அமை­யும்.

பொருள், சேவை வரி பற்றுச்­சீட்­டு­க­ளின் மதிப்பு இவ்­வாண்டு உயர்த்­தப்­ப­டு­கிறது.

மேம்படுத்தப்பட்ட உத்­த­ர­வா­தத் தொகுப்­புத் திட்­டத்­தின்­கீழ் ரொக்கத் தொகை கிடைக்கும். தகு­தி­பெ­றும் சிங்­கப்­பூ­ரர்களுக்கு உத்தர­வா­த­த் திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும் ரொக்­கம் $300லிருந்து $650ஆக அதி­க­ரிக்­கப்­ப­டு­கிறது.

இதன்­மூ­லம் 21 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்ட ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ருக்­கும் ஐந்து ஆண்­டு­களில் மொத்­தம் $700லிருந்து $2,250 வழங்­கப்­படும்.

படிக்­கும் மூன்று பிள்­ளை­க­ளின் எடு­சேவ் கணக்­கில் அல்­லது உயர்க்­கல்வி கணக்­கில் $300 நிரப்­பப்­படும். இவை தவிர்த்து, கல்வி உதவி உள்­ளிட்ட ஏனைய சமூக உத­வித் திட்­டங்­களும் இவர்­களுக்கு உத­வும்.