மும்மொழிப் புலமை பெற்ற முன்மாதிரி இளையர்

மும்மொழிப் புலமை பெற்ற முன்மாதிரி இளையர்

2 mins read
28c90f0f-bb28-4b67-b4fb-be3da601853a
-
multi-img1 of 2

கரு­ணா­நிதி துர்கா

சண்­முக சுந்­த­ரம் ஸ்ரீஜன் (படம்), 16, தனது பள்­ளிப் பரு­வம் முழு­வ­தும் சீன மொழியைத் தாய்­மொழிப் பாட­மாக எடுத்­துப் படித்­தார். சீன மொழி­மீது கொண்ட ஆர்­வத்­தால் இவர் தற்­போது சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்­சின் சீன ஊட­கக் குழும மாண­வர் செய்­தித்­தா­ளான 'ஸிபி­கமா'வில் பணி­யாற்­று­கி­றார்.

"நீண்­ட­நா­ளாக ஸ்ரீஜ­னுக்­குப் பேச்சு வர­வில்லை. அவன் முத­லில் பேசி­யது சீன மொழி­யில்­தான்," என்­கி­றார் தாயார் சிவ­சாமி கயல்­விழி.

பாலர் பள்ளி ஒன்­றாம் வகுப்­பில் பயி­லும்­போது ஸ்ரீஜன் ஆசி­ரி­ய­ரு­டன் சீன மொழி­யில் உரை­யா­டத் தொடங்­கி­னார். எளி­தா­கப் பேச முடிந்­த­தால் தொடக்­கப்­பள்­ளி­யில் சீன மொழியைத் தாய்­மொ­ழிப் பாட­மாகப் பயில முடி­வெ­டுத்­தார்.

"தொடக்­க­நிலை நான்கு வரை சீன மொழி­யில் நன்­றாகத் தேர்ச்சி பெற்­றேன். தொடக்­க­நிலை ஐந்­தில்தான் இம்­மொழியைக் கற்­ப­தில் உள்ள சிர­மங்­களைப் புரிந்­து­கொண்­டேன்," என்கிறார் ஸ்ரீஜன்.

வீட்­டில் தாயா­ரு­டன் தமி­ழி­லும் குடும்­பத்­தி­ல் மற்றவர்களுடன் ஆங்­கி­லத்­தி­லும் உரை­யா­டு­வ­தால் இவர் சீன மொழியைப் பயன்­படுத்­து­வது குறை­வு. சீன மொழி­யைத் தாய்­மொ­ழிப் பாட­மாக எடுத்த முடிவு தவ­றா­னதோ என்ற உணர்வு ஏற்­பட்­ட­தாக ஸ்ரீஜ­னும் அவ­ரது தாயா­ரும் கூறி­னர்.

இருப்­பி­னும், ஆசி­ரி­யர்­க­ளின் அறி­வு­ரைப்­படி சீன செய்­தித்­தாள்­களை வாசித்து, சீனத் திரைப்­படங்­கள், தொலைக்­காட்­சித் தொடர்­க­ளைப் பார்த்து சீன மொழி­ய­றிவை சிறி­து­சி­றி­தாக வளர்த்­துக்­கொண்­டார் ஸ்ரீஜன்.

தொடக்­கப்­பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்­வில் சீன மொழி­யில் 'ஏ' தர­நி­லை­யு­ட­னும் 'ஜிசிஇ' சாதா­ரண நிலைத் தேர்­வில் 'ஏ2' தர­நி­லை­யு­ட­னும் தேர்ச்சி பெற்­றார்.

"எதிர்­கா­லத்­தில் சீன மொழி சார்ந்த வேலை­யைச் செய்ய விரும்­பு­கி­றேன். சீன மொழி ஆசி­ரி­ய­ராக அல்­லது பத்­தி­ரி­கை­யா­ள­ராக வேண்­டும் என்­பது என் கனவு," என்று கூறும் இவ­ரது தம்பி ஸ்ரீஜெய்­யும் சீன மொழியைத் தாய்­மொ­ழிப் பாட­மா­கப் பயில்­கிறார்.

ஸ்ரீஜ­னால் ஆங்­கி­லம், தமிழ், மாண்டரின் என மூன்­றி­லும் பேச முடி­யும். சமூக மன்­றங்­களில் நடைபெறும் இந்­திய நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொண்டு பிற இனத்­த­வர்­க­ளுக்கு இந்­தி­யப் பண்­டி­கை­கள், கலா­சா­ரம் ஆகி­யவை பற்றி எடுத்­து­ரைப்­பது இவ­ரது வழக்­கம்.