தொழிலில் கைகொடுக்கும் கனிவான குடும்பம்

தொழிலில் கைகொடுக்கும் கனிவான குடும்பம்

2 mins read
18f5df37-40d3-4160-90df-be2bcf055f44
-

பல­ரும் விரும்­பிக் குடிக்­கும் பான­மாக விளங்­கு­கிறது 'பபுள் டீ'. தைவா­னில் அறி­மு­கம்­கண்ட இது, சிங்­கப்­பூ­ரில் பல இடங்­களில் விற்­ப­னை­யா­கிறது.

கத்­தார் தலை­ந­கர் தோஹாவில் 'பபுள் டீ' வர்த்­த­கம் தொடங்­கிய சிங்­கப்­பூ­ரர்­க­ளான பார்த்­தி­பன்-பாரதி தம்­பதி, இப்­போது குடும்­பத்­தி­னர் ஆத­ர­வு­டன் ஜூரோங்­கில் கிளை தொடங்­கி­உள்­ள­னர்.

இவர்­க­ளின் 'டீசோ­ஷி­யல் கஃபே' உண­வ­கத்­தில் 'பபுள் டீ' மட்­டு­மன்றி தைவான் இனிப்­பு­வகை­களும் கிடைக்­கின்­றன.

கத்­தா­ரில் 2017ஆம் ஆண்டு குடி­யே­றிய பார்த்­தி­பன் கருணா நிதி, கத்­தார் ஏர்­வேஸ் விமா­னி­யா­கப் பணி­பு­ரிந்து வந்­தார்.

கொவிட்-19 சூழ­லில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை முடங்­கி­ய­போது, வேலைப் பாது­காப்பு குறித்து ஆலோ­சித்த அவர், மனை­வி­யு­டன் சேர்ந்து உண­வ­கத்­தைத் தொடங்­கி­னார்.

"அப்­பா­வும் தம்பி ஜீவ­னும் சுய­தொ­ழி­லில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். வேலை குறித்த கவ­லை­யில் நான் இருந்­த­போது தொழில் தொடங்க அறி­வு­றுத்­தி­னர். சொந்­த­மாக உண­வ­கம் திறப்­பது எனது நீண்­ட­நாள் ஆசை. நோய்ப்­ப­ர­வல் காலத்­தில் அது கைகூ­டி­யது," என்­றார் தற்­போது ஸ்கூட் விமா­னி­யாக உள்ள 37 வயது பார்த்­தி­பன்.

குறைந்த முத­லீட்­டில் அதிக லாபம் ஈட்­டக்­கூ­டி­யது 'பபுள் டீ' வர்த்­த­கம் எனக் கூறிய பார்த்­தி­பன், "தைவா­னிய விநி­யோ­கஸ்­தர் ஒரு­வ­ரு­டன் தொடர்­பு­கொண்டு 'பபுள் டீ' தயா­ரிக்க நானும் என் மனை­வி­யும் முறை­யான பயிற்சி மேற்­கொண்­டோம். பிறகே கடை­யைத் தொடங்­கி­னோம்," என்­றார்.

நோய்ப்­ப­ர­வ­லால் எல்­லை­கள் மூடப்­பட்ட சூழ­லில், சிங்­கப்­பூ­ரில் பார­தி­யின் பாட்டி கால­மா­கி­விட்­டார். அவ­ரது இறு­திச்சடங்­கில் நேர­டி­யா­கக் கலந்­து­கொள்­ளா­தது இரு­வ­ரை­யும் பாதித்­தது.

"தாய­கத்­தில் வசிக்­கும் குடும்­பத்­தைப் பிரிந்து எவ்­வ­ள­வு­தான் சம்­பா­தித்­தா­லும் மன­நி­றைவு கிடைப்­ப­தில்லை. எனவே சென்ற ஆண்டு நிரந்­த­ர­மாக சிங்­கப்­பூர் திரும்­பி­னோம்," என்­றார் பாரதி.

இல்­லப் புதுப்­பிப்­புத் துறை­யில் பணி­பு­ரி­யும் பார்த்­தி­ப­னின் தம்பி ஜீவன் உள்­ளிட்ட குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் உத­வி­யு­டன் சிங்­கப்­பூ­ரில் 'டீசோ­ஷி­யல் கஃபே' உண­வ­கத்­தைத் தொடங்­கி­னர்.

தொழி­லுக்­குத் துணை­பு­ரிய, குடும்ப உறுப்­பி­னர்­கள் சிலர் உணவு சுகா­தா­ரப் பயிற்சி மேற்­கொண்டு சான்­றி­தழ் பெற்­ற­னர்.

ஆனால் சிர­மங்­கள் இருக்­கவே செய்­தன. சிங்­கப்­பூ­ரின் சூழல் தோஹா­வி­லி­ருந்து முற்­றி­லும் மாறு­பட்­டது என்­பதை உணர்ந்­த­னர்.

சிங்­கப்­பூ­ரர்­கள் ஆரோக்­கி­யத்­துக்­குக் கூடு­தல் முக்­கி­யத்­து­வம் கொடுக்­கின்­ற­னர். இனிப்பு குறை­வாக இருப்­ப­தையே பல­ரும் விரும்­பு­கின்­ற­னர். சிங்­கப்­பூ­ரின் உணவு, பானத் துறை ஊழி­யர்­கள் தோஹா­வில் இருந்­தோ­ரை­விட இளை­ய­வர்­கள். இவற்­றைச் சமா­ளிப்­ப­தில் பார்த்­தி­ப­னும் பார­தி­யும் பல்வேறு சிர­மங்­களை எதிர்­நோக்­கி­னர்.

சிங்­கப்­பூர் வாடிக்­கை­யா­ளர்­கள் சிலர் குறிப்­பிட்ட கல­வை­யி­லான தேநீர் வகை­க­ளைக் கேட்­ப­துண்டு. அதற்­கேற்ப தங்­க­ளது உண­வுப் பட்­டி­யலை மாற்­றி­ய­தா­க­அ­வர்­கள் தெரி­வித்­த­னர்.

தோஹா­வி­லுள்ள கடையை இங்­கி­ருந்தே கவ­னித்து வரும் பார்த்­தி­ப­னுக்­கும் பார­திக்­கும் சிங்­கப்­பூ­ரில் மேலும் ஒரு கிளை­யைத் திறக்­கும் எண்­ண­மும் உண்டு.

செய்தி, படம்:

ஆ. விஷ்ணு வர்­தினி