மாயமான எம்எச்370: ஒரு தந்தையின் தவிப்பு

மோன­லிசா

ஒன்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்பு 239 பேரு­டன் காணா­மற்­போன எம்­எச்370 மலே­சிய விமா­னத்­தின் தேடு­தல் வேட்­டைக்கு இன்­று­வரை விடை கிட்­ட­வில்லை.

“இப்­படி ஒரு துய­ரச்­சம்­ப­வம் யாருக்­குமே நடக்­கக்­கூ­டாது. உயிர்ப்­பின்றி நாங்­கள் வாழும் இந்த வாழ்க்­கை­யை­விட உல­கில் கொடி­யது வேறே­தும் உண்டா என எனக்­குத் தெரி­ய­வில்லை,” என்று கண்­ணீர் மல்­கக் கூறி­னார் ஒரே மகனை அந்த விமா­னத்­தில் வழி­ய­னுப்­பிய திரு சுப்­பி­ர­ம­ணி­யன் குரு­சாமி, 68.

2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் இருந்து சீனத் தலை­ந­கர் பெய்­ஜிங்கை நோக்­கிப் புறப்­பட்ட அவ்­வி­மா­னத்­தில் பய­ணம் செய்­தோ­ரில் மலே­சி­யா­வின் பூச்­சோங் பகு­தி­யைச் சேர்ந்த 33 வயது புஷ்­ப­நா­த­னும் ஒரு­வர்.

பெய்­ஜிங் சென்­ற­டைந்­த­தும் மகன் தொலை­பே­சி­யில் அழைப்­பார் என்று எதிர்­பார்த்­தி­ருந்த புஷ்­ப­நா­த­னின் தந்­தைக்கு, விமா­னம் காணா­மற்­போன செய்­தி­தான் கிடைத்­தது. விமான நிலை­யம், விசா­ரணை, காவல்­துறை என அல்­லா­டி­னா­லும் அசைக்க முடி­யாத நம்­பிக்­கை­யு­டனே நாள்­களை நகர்த்­தி­னர் புஷ்­ப­நா­த­னின் பெற்­றோர்.

பெற்­றோரை மற­வாத மகன்...

பணி நிமித்­த­மாக அடிக்­கடி வெளி­நாடு செல்­லும் புஷ்­ப­நா­தன், ஒவ்­வொரு பய­ணத்­திற்கு முன்­பும் பந்­திங்­கில் வசிக்­கும் தன் பெற்­றோரை நேரில் சந்­தித்து ஆசி­பெற்று விடை­பெ­று­வது வழக்­கம். இவ­ருக்கு இளைய சகோ­தரி ஒரு­வ­ரும் உண்டு.

அன்­றும் அப்­ப­டித்­தான் சென்­றி­ருந்­தார். ஆனால் அது­தான் மக­னைக் கண்­கு­ளி­ரக் கண்டு, உள­மார தொட்­டுத் தழுவி அர­வ­ணைக்க, தங்­க­ளுக்­கான கடைசி வாய்ப்பு என்று அப்­போது தெரி­யா­மல் போனது என்று சொல்லும்­போதே பெரி­ய­வ­ருக்கு நாத் தழு­த­ழுத்­தது.

மனைவி, இரு மகன்­க­ளு­டன் கோலா­லம்­பூ­ரில் வசித்து வந்த புஷ்­ப­நா­தன், விரை­வில் கோலா­லம்­பூ­ரி­லேயே புது வீடு கட்­டிக் குடி­யே­றும் திட்­டத்­தில் இருந்­தார். அதன்­பின் பெற்­றோ­ரும் தன்­னோடு வந்து தங்க வேண்­டும் என்று அவர் வற்­பு­றுத்­தி­ய­தை­யும் நினை­வு­கூர்ந்­தார் திரு சுப்­பி­ர­மணி­யன்.

‘வருமுன் உணர்த்தியதோ!’

“எப்­போது வீட்­டிற்கு வந்­தா­லும் சாமிப்­ப­டத்­தின் அருகே செல­வுக்­கா­கப் பணம் வைத்­துச் செல்­வது அவ­ரது வழக்­கம். அன்று வீட்­டி­லி­ருந்து விடை­பெறும் முன்பு வாடகை வாக­னத்­தின் சன்­ன­ல் கண்ணாடியைக் கீழி­றக்கி என்னை அழைத்­தார்.

“என்­ன­வாக இருக்­கும் என்று அரு­கில் சென்ற என் சட்­டைப்­பைக்­குள் 2,000 ரிங்­கிட்­டைத் திணித்து செல­வுக்கு வைத்­துக்­கொள்­ளுங்­கள் அப்பா என்று கூறி விடை­பெற்­றார்.

“பொது­வாக இப்­ப­டிச் சட்­டைப்­பைக்­குள் வைக்­க­மாட்­டாரே என்று நினைத்­துக்­கொண்டே அவரை வழி­ய­னுப்­பி­ய­பிறகு வீட்­டிற்­குள் வந்து பார்த்­த­போது சாமிப்­ப­ட மேடை­யி­லும் 2,000 ரிங்கிட் வைக்­கப்­பட்­டி­ருந்­த­தைக் கண்­டேன்.

“மீண்­டும் என்­னைச் சந்­திக்­கும் வாய்ப்­பி­ருக்­காது என்­ப­தற்­காக அன்று கூடு­த­லா­கப் பணம் கொடுத்­தாரோ என்று பின்­னர் எனக்­குத் தோன்­றி­யது,” என்று கூறி­னார் பெரி­ய­வர்.

பெற்­றோ­ரி­ட­மி­ருந்து விடை­பெற்ற புஷ்­ப­நா­தன், விமான நிலை­யத்­திற்­குச் செல்­லும்­முன் தன் மனைவி, அப்­போது 3 வய­தான மூத்த மகன், 8 மாதக் குழந்­தை­யான இளைய மகன் ஆகி­யோ­ரைக் காணச் சென்­றார்.

எப்­போ­தும் மகிழ்ச்­சி­யாக வழி­ய­னுப்­பும் மூத்த மகன், அன்று ஏனோ விமா­னக் கடப்­பி­தழ் இருந்த பையை ஒளித்­து­வைத்­துப் போக வேண்­டாம் என்று அழு­தது பின்­னர் தெரி­ய­வந்­தது.

விவ­ர­ம­றி­யாக் குழந்­தை­யான இளைய மக­னும் தவழ்ந்து சென்று அப்­பா­வின் காலைப் பிடித்­துக்­கொண்டு தன்­னைத் தூக்­கிக்­கொள்­ளு­மாறு சைகை காட்­டி­னான்.

மனம் நெகிழ்ந்த புஷ்­ப­நா­தன் தமது இரண்டு வாரப் பய­ணத்­தைச் சுருக்கி ஒரே வாரத்­தில் திரும்­பு­வ­தா­கக் கூறிப் பிரிய மன­மின்றி விடை­பெற்­றார்.

இவை எல்­லாம் ஒரு­வ­கை­யில் போக வேண்­டாம் என்று உணர்த்­திய அறி­கு­றி­களோ என்று கரு­து­கி­றார் திரு சுப்­பி­ர­ம­ணி­யன். இருந்­தும் மகன் அந்த விமா­னத்­தில் கால்­வைத்­து­விட்­டார் என்று கூறி­ய­போதே குர­லு­டைந்து விம்­மி­னார் மக­னைத் தொலைத்­துத் தவிக்­கும் இந்­தத் தந்தை.

விமா­னம் காணா­மற்­போய் நான்கு நாள்­கள் கழித்து, 2014ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி நள்­ளி­ர­வுக்­குப்­பின் 2.30 மணி­ய­ள­வில் திடுக்­கிட்­டுத் தூக்­கத்­தில் இருந்து விழித்­தார் சுப்­பி­ர­ம­ணி­யன்.

தான் கண்ட கனவு மீண்­டும் ஒரு­முறை அவ­ரின் மனக்­கண் முன் நிழ­லா­டி­யது.

“அம்­மா­வைப் பத்­தி­ரமா பாத்­துக்­கோங்­கப்பா,” என்று தன் கையைப் பிடித்­துக் கூறிய மகனை யாரோ இரு­வர் இழுத்­துப் போவ­தும் “அப்பா! அப்பா!” என்று அழைத்­த­ப­டியே மகன் இரு­ளில் மறை­வ­து­மாக அமைந்த அந்­தக் கனவு, ஆழ்­ம­ன­தின் நம்­பிக்­கை­யைச் சற்று ஆட்­டம் காண­வைத்­த­தா­கக் கூறி­னார் சுப்­பி­ர­ம­ணி­யன்.

தவித்­துக் கலங்­கும் தாயுள்­ளம்...

தாயார் அமிர்­தத்­து­டன் மிக­வும் நெருக்­க­மாக இருந்த புஷ்­ப­நா­தன், அடிக்­கடி தாயாரை அர­வ­ணைத்து, “கவ­லைப்­ப­டா­தீங்க. எதைப் பற்­றி­யும் யோசிக்­கா­தீங்க. எல்­லாம் நல்­ல­தாக நடக்­கும். நான் பார்த்­துக்­கொள்­கி­றேன்,” என்று சொல்­வது வழக்­கம்.

புஷ்­ப­நா­தன் வார­யி­று­தி­யில் நேரம் கிடைக்­கும்­போ­தெல்­லாம் குடும்­பத்­தி­ன­ருக்­காக சமைத்­துப் பரி­மா­று­வார். அத்­த­கைய மகனை நினைத்து ஒவ்­வொரு நாளும் தன் மனைவி அழு­த­வாறே தூங்­கு­வ­தா­கக் கூறி­னார் சுப்­பி­ர­ம­ணி­யன். தன்­னை­வி­டத் தன் மனை­வியே மனத்­த­ள­வில் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டார் அவர்.

விமா­னச் சத்­தம் கேட்­கை­யிலே..

விமா­னம் மாய­மான சம்­ப­வத்­திற்­குப் பிறகு இந்த மூத்த தம்­பதி ஒரு­மு­றை­கூட விமா­னத்­தில் பய­ணம் செய்­ய­வில்லை.

வானில் விமா­னம் பறக்­கும் சத்­தம் கேட்­கும்­போ­தெல்­லாம் காலம் சற்­றுப் பின்­னோக்­கிச் சென்று மகன் பய­ணம் செய்த விமா­னம் நல்­ல­படி தரை­யி­றங்கி அவர் வீடு வந்து சேரும் அதி­ச­யம் நிக­ழாதா என்று தான் ஏங்­கு­வ­தா­கக் கூறி­னார் தற்­போது பாது­கா­வ­ல­ரா­கப் பணி­பு­ரி­யும் சுப்­பி­ர­ம­ணி­யன்.

என்­றுமே மகன் உறு­துணை...

மகன் இருந்­த­போ­தும் சரி, இல்­லாத இன்­றைய நிலை­யி­லும் சரி, தொடர்ந்து அவரே தங்­க­ளின் தேவை­க­ளைக் கவ­னித்து வரு­கி­றார் என்­றார் சுப்­பி­ர­ம­ணி­யன். விமா­னம் மாய­மா­னதை அடுத்து மலே­சிய அர­சாங்­கம் முதற்­கட்­ட­மாக ஒரு தொகையை நிவா­ர­ண­மாக அளித்­துள்­ளது. சமூக நலத்­து­றை­யின் சார்­பில் மாதந்­தோ­றும் வழங்­கப்­படும் உத­வித்­தொ­கை­யை­யும் வைத்து வாழ்ந்­து­வ­ரு­வ­தா­கக் கூறி­னார் அவர்.

ஒரு தந்­தை­யின் கோரிக்கை...

தங்­க­ளு­டைய இழப்­பை­யும் துய­ரை­யும் மதிக்­கும்­வி­த­மாக தாங்­கள் சென்று மனக்­கு­மு­ற­லைக் கொட்­ட­வும் இப்­படி ஒரு துய­ரச்­சம்­ப­வம் இவ்­வு­ல­கில் நிகழ்ந்­தது என்­ப­தற்கு ஆதா­ர­மா­க­வும் மலே­சிய அர­சாங்­கம் எம்­எச்370 பய­ணி­க­ளுக்­காக நினை­வி­டம் ஒன்று அமைக்க வேண்­டும் என்ற கோரிக்­கை­யை­யும் விடுத்­துள்­ளார் இப்­பெ­ரி­ய­வர்.

பொது­வாக ஒரு­வர் இறந்­த­பின் குடும்­பத்­தி­னர், உற­வி­னர்­கள், நண்­பர்­கள் ஒன்­று­கூடி தங்­கள் சமய வழக்­கப்­படி இறு­திச் சடங்­கு­க­ளைச் செய்­வர். இவ்­வி­மா­னத் தேடு­தல் குறித்து உறு­தி­யான நிலைப்­பாடு ஏற்­படும் வரை தன் மக­னுக்கு எவ்­வித இறு­திச்­ச­டங்கோ வழி­பாடோ செய்­வ­தாக இல்லை சுப்­பி­ர­ம­ணி­யன்-அமிர்­தம் தம்­பதி.

“எங்­க­ளைப் பொறுத்­த­வரை மகன் எங்கோ மகிழ்ச்­சி­யாக வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றார். மாதா­மா­தம் எங்­க­ளுக்­குத் தேவை­யான பணத்தை அனுப்­பு­கி­றார். என்­றா­வது ஒரு­நாள் நிச்­ச­யம் வரு­வார்,” என்று ஏக்­கம் குறை­யாத குர­லில் கூறி­னார் சுப்­பி­ர­ம­ணி­யன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!