தமிழகத்தில் பள்ளிக்கூடம் நடத்தும் சிங்கப்பூரர்

பெண்பிள்ளைகள் அடிப்படைக் கல்வியைப் பெறவேண்டும் என்ற மறைந்த தமது தாயாரின் எண்ணத்தை ஈடேற்றும் நோக்கில் இந்தியாவில்

தான் பிறந்த கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி ஒன்றை நடத்துகிறார் சிங்கப்பூரரான கே.எம். நூர்தீன், 63.

மோன­லிசா

“எங்­க­ளு­டைய கிரா­மத்­தில் 1990களில் பெரும்­பா­லான பெண்­பிள்­ளை­களை பள்­ளிக்கு அனுப்­ப பெற்­றோர் தயங்­கி­னர். அதி­லும் வய­துக்கு வந்த பெண்­ பிள்­ளை­களை பாது­காப்பு உள்­ளிட்ட கார­ணங்­களுக்காக தொலை­வில் உள்ள பள்­ளிக்கு அனுப்ப மறுத்த னர்­,” என்கிறார் திரு நூர்­தீன்.

இப்­பிள்­ளை­க­ளுக்­காக பரிந்து பேசி, அவர்­கள் பள்­ளி ­செல்ல ஊக்­கு­ வித்­தும் அதற்கு தம்­மால் இயன்ற பொரு­ளா­தார உத­வி­யும் செய்து வந்த இவ­ரின் தாயார் ஹஜ்ஜா சாரா அம்­மாள் 1991ஆம் ஆண்டு எதிர்­பா­ராத விபத்­தில் கால­மா­னார்.

இத்­து­ய­ரத்­தி­லி­ருந்து மீள­மு­டி­யா­மல் தவித்த சாரா அம்­மா­ளின் கண­வர் இ.ஏ. முக­மது கமாலுதீன், அவர்களது மகன், இரண்டு மகள்­கள் சாரா அம்­மா­ளின் கனவை நன­வாக்க விரும்­பி­னர்.

தனது மனைவி பிரிந்த இரண்டே ஆண்­டு­களில் தமிழ்­நாட்­டில் மயி­லா­டு ­துறை மாவட்­டத்­தில் தங்­க­ளு­டைய சொந்த ஊரான வட­கரை கிரா­மத்­தில் 1993ஆம் ஆண்டு அவ­ரது பெய­ரி­லேயே ‘ஹஜ்ஜா சாரா அம்­மாள் மெட்­ரிக் மேல்­நி­லைப் ­பள்ளி’ எனும் பள்­ளிக் ­கூ­டத்­தை கமாலுதீன் ஆரம்பித்தார்.

ரத்­தி­னக் கல் வர்த்­த­க­மும் நாணய மாற்று வணி­க­மும் ‘கோல்­டன் சிட்டி’ எனும் பெய­ரில் அவர் சிங்­கப்­பூ­ரில் தொடங்கினார்.

இன்­றும் அந்­தப் பெய­ரில் அவரது மகனாகிய நூர்தீன் சிங்கப்பூரில் வணி­கத்தைத் தொடர்ந்து செய்­து ­வ­ரு­கி­றார்.

“தொடக்­கப்பள்­ளி­யாக தொடங்கப் பட்டு இரண்­டாண்டுகளில் அர­சாங்­கத்­தின் அனு­மதியோடு மேல்­நி­லைப் பள்ளி தரத்­திற்கு உயர்ந்­தது. குறைந்­த­பட்­சம் கிரா­மத்­தில் உள்ள பெண் பிள்­ளை­கள் பள்ளிப்படிப்­பை­யா­வது முடிக்க வேண்­டும் என்­பதே என்­னு­டைய தந்­தை­யின் கனவு,” என்­றார் நூர்­தீன்.

ஒரு கட்­டத்­தில், வய­துக்கு வந்த பெண் பிள்ளைகளைப் பள்­ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்த சூழ­லில் அவர்­க­ளுக்­கா­கவே 2005ஆம் ஆண்டு முதல் தொடக்­கநிலைக்குப் பிறகு ஆண் பிள்­ளை­கள் பள்­ளி­யில் தொடர்ந்து படிக்க அனு­மதிக்கப்பட வில்லை.

வெளி­யூர் சென்று படிக்­கும் வச­தி­யில்­லாத ஓன்றிரண்டு ஆண் ­பிள்­ளை­களுக்கு மட்டும் சக பெண்­ பிள்­ளை­களுடன் அவர்களது பெற்­றோ­ர் அனு­ம­தி­யோடு உயர்நிலை வகுப்­பு­களில் படிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இத­னால் பள்­ளி­யில் மாண­வர் களின் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை பாதி­யா­கக் குறைந்­த­தால் ஆசி­ரி­யர் களுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் ஊதி­யம் கொடுப்­ப­தற்கு திண­றிய சூழ்­நி­லை­யி­லும் பெண் பிள்­ளை­க­ளின் கல்­வியை ஊக்­கு­விப்­பதை பிர­தா­ன­மா­கக் கொண்டு இப்­பள்­ளியை தம்­மு­டைய தந்தை தொடர்ந்து வழி­ந­டத்­தி­யதை திரு நூர்­தீன் நினை­வு­கூர்ந்­தார்.

2010ஆம் ஆண்­டில் தந்­தை­யின் மறை­வுக்­குப் பிறகு பள்­ளி­யின் தாளா­ளர் பொறுப்பு திரு நூர்­தீ­னுக்கு வந்­தது.

வரு­மா­னமோ கவ­னித்­துக்­கொள்ள போது­மான ஆட்­களோ இல்­லாத நிலை­யில், பள்­ளியை மூட­லாம் என்றும் உயர்­நிலை 11, 12ஆம் வகுப்பு களை­யா­வது நிறுத்­த­லாம் என்­றும் திரு நூர்­தீன் கூறி­ய­போது கிராம மக்­கள் வருத்­த­ம­டைந்­த­னர்.

பள்­ளியை மூடி­னால் பிள்­ளை­களை தொலை­வில் வேறு ஊர்­களில் உள்ள பள்­ளிக்கு அனுப்ப மாட்­டோம் என்­றும் பிள்ளைகளை பள்ளியிலிருந்து நிறுத்தி வி­டு­வோம் என்றும் அவர்­கள் கூறி­னர்.

இந்­நி­லை­யில் கிராம மக்­க­ளுக்­காக­வும் பெண்­பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லத்­திற்­கா­க­வும் தன்­னு­டைய பெற்­றோ­ரின் கன­விற்­கா­க­வும் ஒரு வகுப்­பில் பத்து பிள்­ளை­கள் இருந்­தா­லும்­கூட தொடர்ந்து பள்­ளியை நடத்த துணிச்­ச­லு­டன் முடி­வெ­டுத்­தார் திரு நூர்­தீன்.

“பள்­ளியை நடத்த பல­முறை பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­பட்ட சூழ­லில் எங்­க­ளு­டைய சொந்த வரு­மா­னத்தை வைத்­தும் உற­வி­னர்­கள், நண்­பர்­க­ளின் உத­வி­யு­ட­னும் தொடர்ந்து பள்­ளியை சேவை நோக்­கு­டன் நடத்தி வரு­கி­றோம்,” என்று திரு நூர்­தீன் மேலும் கூறி­னார்.

இவருக்கு ஒரு மக­னும் இரு மகள்­களும் ஆறு பேரப்­பிள்­ளை­களும் உள்­ள­னர்.

இதர தனி­யார் பள்­ளி­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இப்­பள்­ளி­யில் மிகக் குறைந்த கட்­ட­ணமே வசூ­லிக்­கப்படு­கிறது.

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பங்­க­ளின் பிள்­ளை­க­ளுக்கு ஊக்­கத்­தொ­கை­யும் பள்­ளிக் கட்­ட­ணத்­தில் சலு­கை­யும் அளிக்­கப்­ப­டு­வ­தாக இப்­பள்­ளி­யில் 13 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக தலை­மை­யா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றும் குண­சே­க­ரன் வைத்­தி­ய ­நாதன், 63, தெரி­வித்­தார்.

கடந்த முப்­பது ஆண்­டு­க­ளாக இயங்­கி­வ­ரும் இப்­பள்­ளி­யில், தற்­ச­ம­யம் 383 மாண­வர்­களும் 23 ஆசி­ரி­யர்­களும் 5 ஊழி­யர்­களும் உள்­ள­னர்.

அண்மையில் இப்­பள்ளி தனது 30ஆம் ஆண்டு நிறை­வு­வி­ழாவை கோலா­க­ல­மா­கக் கொண்­டா­டி­யது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!