சிறைவாசிகளுக்கு நல்வழி காட்டும் தொண்டூழியர்கள்

சிறை­வா­சி­க­ளின் வாழ்­வில் புதிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கும் சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யான பின்­னர் அவர்­கள் திருந்தி வாழ்­வ­தற்­கும் கடந்த 20 ஆண்­டு­க­ளாக ஊன்­று­கோ­லாக இருக்­கி­றார், தொண்­டூ­ழி­ய­ரான திரு பாரி பெரு­மாள், 53. கைதி­க­ளு­டன் உரை­யாடுவ­தால் பொறு­மை­யாக இருக்­கக் கற்­றுக்­கொண்­ட­தா­கக் கூறிய இவர், இதை வாழ்­நாள் முழு­வ­தும் தொட­ர­வுள்­ளார்.

குவீன்ஸ்­ட­வுன் ஸ்ரீ முனீஸ்வரன் ஆல­யத்­தின் தொண்­டூழியக் குழு­வில் சேவை­யாற்றி வரும் இவர், 21 ஆண்­டு­ க­ளுக்கு முன்பு பழைய சாங்கி சிறைச்­சா­லை­யில் கைதி­க­ளு­டன் தீபா­வ­ளிப் பண்­டி­கை­யைக் கொண்­டா­டச் சென்­ற­போது, சிறை­வா­சி­க­ளுக்கு உதவி செய்ய போதிய தொண்­டூ­ழி­யர்­கள் இல்­லா­ததை அறிந்­தார்.

இவ­ருக்கு முன்­னர் தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட்டு வந்த ஒரு­வ­ரின் வழி­காட்­டு­த­லைப் பின்­பற்றி தொண்­டூ­ழி­யத்தை தமது வாழ்­வின் ஓர் அங்­க­மாக ஆக்­கிக்­கொண்­டார் திரு பாரி.

சிறைச்­சா­லை­க­ளுக்­குச் சென்று கைதி­க­ளுக்கு சேவை­யாற்­று­வது ஒரு வித்­தி­யா­ச­மான அனு­ப­வம் என்­றார் அவர். பழைய குவீன்ஸ்­ட­வுன் சிறைச்­சா­லை­யில் இருக்­கும் கைதி களுக்கு ஆன்­மிக ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு கோரிக்கை விடுத்­த­போது, தனது முதல் நாள் தொண்­டூ­ழி­யத்தை பாரி தொடங்­கி­னார்.

எவ்­வித அனு­ப­வத்­தை­யும் பெறாத இவர், சிறை­யில் தொண்­டூ­ழிய பய­ணத்­தைத் துவங்க பயந்­த­தா­க­வும் நம்­பிக்கை இல்­லா­மல் இருந்­த­தா­க­வும் கூறி­னார்.

எட்­டி­லி­ருந்து இரு­பது கைதிகளைக் கொண்ட ஒரு குழு அமர்­வில், பஜ­னை­கள் பாடு­வது, இந்­திய இசைக் கரு­வி­களை வாசிப்­பது, ஆன்­மி­கத்­தைப் பற்றி விளக்­கு­வது போன்­ற­வற்­றில் ஈடு­படும் பாரி, திரு­ம­ணத்­திற்கு முன்பு வாரத்­திற்கு இரண்டு வார நாள்­க­ளை­யும் இவ்­வாறு பயன்­ப­டுத்­திக் கொண்­டார்.

கைதி­க­ளு­டன் உரை­யா­டு­வது சில தரு­ணங்­களில் கடி­ன­மாக இருந்­தா­லும் இதில் அவர் மன நிம்­ம­தி­யைக் கண்ட தால், கிட்­டத்­தட்ட 2 மணி­நேர பய­ணம் மேற்­கொண்டு ஒவ்­வொரு வார­மும் சாங்கி சிறைச் சாலைக்­குச் சென்று வரு­கி­றார்.

ஆன்­மிக ஆலோ­ச­னை­க­ளோடு, அவர்­க­ளுக்கு வாழ்­வில் ஒரு வழி­காட்­டி­யா­க­வும் பாரி இருக்­கி­றார். இதற்கு முன் அவர்­க­ளி­டம் இருந்த தீய பழக்­கங்­களை விட்டு, விடு­த­லைக்­குப்­பின், எவ்­வாறு ஒரு மறு­வாழ்வை வாழ­லாம் என்­ப­தற்­கான ஆலோ­ச­னை­க­ளை­யும் அவர் வழங்­கு­கி­றார்.

ஒரு சம­யம் 21 வய­துக்கு கீழுள்ள சிறை­வா­சி­க­ளு­டன் தீபா­வளி கொண்­டாடச் சென்­ற­போது, அவர்­களில் சிலர் பல­கா­ரங்­க­ளைப் பார்த்­த­வு­டன் கண்­ க­லங்­கிய தரு­ணத்தை நினை­வு­கூர்ந்த பாரி, அச்­சம்­ப­வம் தன் மனதை உலுக்­கி­ய­தா­கச் சொன்­னார்.

எண்­ணெய் எரி­வா­யுத் துறையில் பணி­பு­ரி­யும் 38 வயது கோபால கிருஷ்­ணன், பாரி­யைப் போலவே சிறை­வா­சி­ க­ளுக்கு சேவை­யாற்றி வரு­கி­றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இதில் ஈடு­பட்டு வரும் இவர், ஆல­யத்­தின் தொண்­டூ­ழி­யக் குழு மூலம் பாரி­யின் அறி­மு­கம் கிடைத்த பிறகு, தானும் அவ­ரைப் போல சேவை­யாற்ற வேண்­டும் என்று விரும்­பி­னார்.

இரு மகன்­கள் இருந்­தா­லும் கோபால கிருஷ்­ணன், ஒவ்­வொரு வார­யி­று­தி­யி­லும் இரண்டு மணி நேரத்தை தொண்­டூ­ழி­யத்­துக்கு ஒதுக்­கி­வி­டு­கி­றார்.

நம் இந்­திய கலா­சா­ரத்­தின் பெரு­மை­க­ளை­யும் சிறை­வாசிகளுக்­குக் கொண்டு சேர்க்க வேண்­டு­மென, இவர் தமி­ழ­கத்­தின் தஞ்­சைப் பெரிய கோவில் வர­லாற்­றைப் பகிர்ந்து கொள்ள முடி­வெ­டுத்­துள்­ளார்.

கைதி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கு­வதை சிறை­யில் இருக்­கும் வரை மட்­டும் அல்லாமல், அவர்­கள் வெளியே வந்­த­பி­ற­கும் பாதை தவ­றி­வி­டா­மல் இருக்க பாரி­யும், கோபா­ல­கி­ருஷ்­ண­னும் அவர்­க­ளு­டன் நட்­பு­றவுன் பழகி வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!