புதுப்பிப்புப் பணிகள்: தேக்கா சந்தை மூடல்

சபிதா ஜெய­கு­மார்

லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் உள்ள தேக்கா நிலை­யம் மூன்று மாதங்­க­ளுக்கு மூடப்­ப­ட­வி­ருக்­கிறது. இவ்­வாண்டு ஜூலை 3ஆம் தேதி முதல் செப்­டம்­பர் 30ஆம் தேதி வரை மறு­சீ­ர­மைப்­புப் பணி­க­ளுக்­காக அது மூடப்­படும்.

வட்­டார மேம்­பாட்டு திட்டங்­களில் இந்த மறு­சீ­ர­மைப்­புத் திட்­ட­மும் ஒன்று என தஞ்­சோங் பகார் நகர மன்­றம் கூறி­யது.

இதன்­கீழ், தேக்கா நிலை­யத்­தின் முதல் தளத்­தில் சமைத்த உணவு விற்­கும் கடை­களும் சந்­தைப் பகு­தி­யும் ஜூலை 3 முதல் செப்­டம்­பர் 30ஆம் தேதி வரை மூடப்­படும். இரண்­டாம் தளக் கடை­கள் ஜூலை 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மூடப்­ப­ட­வுள்­ளன.

கேள்­விக்­கு­றி­யா­கும் வாழ்­வா­தா­ரம்

இத­னால் பல சிர­மங்­கள் ஏற்­படும் என்­கின்­ற­னர் கடைக்­கா­ரர்­களும் ஊழி­யர்­களும்.

தேக்கா நிலை­யத்­தில் வேலை பார்க்­கும் ஊழி­யர்­கள் பலர், வாழ்­வா­தா­ரம் தேடி வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். அவர்­களில் பெரும்­பா­லோர் மலே­சியா, இந்­தியா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

குடும்­பத்­தின் பொரு­ளா­தார நிலை மேம்­ப­டு­வ­தற்­காக, கல்­வி­யைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி ­ம­லே­சி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்து வேலை­பார்க்­கி­றார் 21 வயது ஷாமளா தேவி.

ஆடை விற்­பனை செய்­யும் கடை­யில் கடந்த 10 மாதங்­க­ளாக வேலை­செய்­­யும் இவர், இரண்டு மாதங்­க­ளுக்கு வேலை இல்­லா­விட்­டால் பின்­னா­ளில் கல்­விப் பய­ணத்­தைத் தொட­ரும் தனது திட்­டம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று அஞ்­சு­கி­றார்.

மலே­சி­யா­வி­லி­ருந்து வாழ்­வா­தா­ரம் தேடி வந்த மற்­றொ­ரு­வர் திரு­மதி லட்­சுமி. ஆடை விற்­ப­னை­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­கி­றார்.

இவ­ரின் கண­வர் பக்­க­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்டு படுத்த படுக்­கை­யாக உள்­ளார். அண்­மை­யில் மக­ளின் திரு­ம­ணத்­தால் கூடு­தல் செலவை எதிர்­கொண்ட இவ­ருக்கு இரு மகன்­கள். ஒரு­வ­ருக்கு இன்­னும் வேலை கிடைக்­க­வில்லை. மற்­றொ­ரு­வர் கல்வி பயில்­கி­றார்.

“இப்­போது வாங்­கும் சம்­ப­ளமே தேவை­களை ஈடு­கட்­டப் போதாது. இரண்டு மாதங்­க­ளுக்கு வேலை இல்லை என்­றால் எங்­கள் நிலையே கேள்­விக்­கு­றி­யா­கிறது.

“சிங்­கப்­பூ­ரை­விட மலே­சி­யா­வில் ஊதி­யம் குறைவே. இரண்டு மாதம் பட்­டி­னி­யாக இருப்­ப­தைத் தவிர்க்க அங்­கேயே ஒரு வேலை தேடிக்­கொள்ள வேண்­டும். இரண்டு மாதங்­கள்­தானே என்று சிலர் நினைக்­க­லாம். ஆனால், பாதிக்­கப்­படும் எங்­க­ளுக்­குத்­தான் அந்த வலி புரி­யும்,” என்று வருந்­து­கி­றார் திரு­மதி லட்­சுமி.

இவர்­க­ளைப்­போல வேலை அனு­ம­திச்­சீட்டு வைத்­தி­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ரில் வேறு வேலை தேட அனு­மதி இல்லை. எனவே இப்­பி­ரி­வி­னர் இக்­கட்­டான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

வாடிக்­கை­யா­ளர்­களை இழக்க நேரி­ட­லாம்

தேக்கா நிலை­யத்­தில் பல ஆண்­டு­க­ளாக ‘முஸ்­தஃபா ஆட்­டி­றைச்­சிக் கடை’, ‘முஸ்­தஃபா காய்­கறி, பழக்­கடை’ போன்ற வற்றை நடத்தி வரு­கி­றார் திரு முக­மது முஸ்­தஃபா.

நம்­பிக்­கை­யான வாடிக்­கை­யா­ளர்­க­ளைப் பெற்­றுள்ள இவர், வெவ்­வேறு உண­வ­கங்­க­ளுக்­கும் விநி­யோ­கம் செய்­வ­தால், தொழிலை மூன்று மாதங்­க­ளுக்கு நிறுத்­தி­வைக்க முடி­யாது என்­றார்.

“வாடிக்­கை­யா­ளர்­க­ளின் ஆத­ரவை இழந்­து­வி­டா­மல் இருக்க, வேறு சந்­தை­யில் கடையை வாட­கைக்கு எடுத்­தும் இணை­யம் வழி­யா­க­வும் விற்­ப­னை­யைத் தொடர முடி­வெ­டுத்­துள்­ளோம். தொழில் பாதித்து வரு­மா­னம் குறை­வ­து­டன் தற்­கா­லி­கக் கடைக்கு வாடகை செலுத்­து­வ­தால் லாப­மும் குறை­யக்­கூ­டும்,” என்று கூறி­னார் முஸ்­தபா.

பத்­தில் ஐந்து ஊழி­யர்­களை மட்­டுமே அந்த மூன்று மாத காலத்­தில் வேலைக்கு வைத்­தி­ருக்க முடி­யும் என்று கூறிய இவர், மற்­ற­வர்­களை விடுப்­பில் அனுப்­பு­வ­தைத் தவிர வேறு வழி­யில்லை என்­றும் குறிப்­பிட்­டார்.

கிட்­டத்­தட்ட 30 ஆண்­டு­க­ளாக கோழி இறைச்சி விற்­கும் திரு­மதி அபு பக்­கர் ஜனத்து கனி, 43, இந்த மூன்று மாத கடை அடைப்பு வாடிக்­கை­யா­ளர்­க­ளின் வரு­கை­யைக் குறைத்­து­வி­டும் என்று அச்­சம் தெரி­வித்­தார்.

தங்­க­ளின் சேவைத் தரத்­தால் ஈர்க்­கப்­படும் பலர், தங்­கள் கடை­யில் வாங்­கு­வது மனத் திருப்­தியை அளிப்­ப­தா­கச் சொல்­வதை இவர் நினை­வு­கூர்ந்­தார்.

“நிலை­யம் மூடு­வது தொடர்­பான அறி­விப்­புக்­குப் பிறகு, வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் தொலை­பே­சி­யில் அழைத்து அக்­க­றை­யாக விசா­ரித்­த­னர்.

“முன்பு தேக்கா நிலை­யம் மறு­சீ­ர­மைப்­பிற்கு மூடப்­பட்­ட­போது அரு­கில் இருந்த திறந்­த­வெ­ளி­யில் தற்­கா­லி­கச் சந்தை ஒன்று அமைத்­துத் தரப்­பட்­டது.

“அனைத்­துக் கடைக்­கா­ரர்­களும் அங்கு சென்­ற­தால் வாடிக்­கை­யா­ளர்­களும் அங்கு வந்­த­னர். எனவே, வியா­பா­ரம் அவ்­வ­ள­வாக பாதிப்­ப­டை­ய­வில்லை.

“கொவிட்-19 கிரு­மித்­தொற்று கால­கட்­டத்­திற்­குப் பிறகு இப்­போ­து­தான் வியா­பா­ரம் சற்று தலை­தூக்­கத் தொடங்­கி­யுள்­ளது. அதற்­குள் இது­போன்ற ஒரு நெருக்­கடி ஏற்­ப­டு­வது வருத்­த­ம­ளிக்­கிறது.

“சிங்­கப்­பூ­ரின் பல வட்­டா­ரங்­களி­லி­ருந்து இங்கு வந்து பொருள்­வாங்­கும் வாடிக்­கை­யா­ளர்­களை மெல்­ல­மெல்ல இழந்து வரு­கி­றோம். புதுப்­பிப்­புக்­குப் பிறகு நிலை­யத்­தைத் திறக்­கை­யில் இவர்­கள் திரும்பி வரு­வார்­களா என்­பது சந்­தே­கமே,” என்று குறிப்­பிட்­டார் திரு­மதி ஜனத்து கனி.

மூடப்­படும் காலம் மிக அதி­கம்

‘ஏஆர் ரஹ்­மான் கஃபே’, ‘ஏஆர் ரஹ்­மான் ராயல் பராட்டா’ ஆகிய கடை­க­ளின் உரி­மை­யா­ள­ரான திரு முஜி­புர் ரஹ்­மான், 50, மூன்று மாதங்­க­ளுக்கு தேக்கா நிலை­யத்தை மூடு­வது மிக அதி­கம் என்­றார்.

“கடை­க­ளைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளை­யும் குழாய்­கள், மின்­சா­ரக் கரு­வி­கள் ஆகி­ய­வற்­றை­யும் மேம்­ப­டுத்­து­கின்­ற­னர். இரண்டு மாதங்­கள் என்­றால் பர­வா­யில்லை. மூன்று மாத காலம் மூடு­வது சங்­க­டம் அளிக்­கிறது.

“ஊழி­யர்­கள் எங்­களை நம்­பியே இங்கு வேலைக்கு வந்­துள்­ள­னர். இவர்­களை மூன்று மாதம் விடு­மு­றைக்­குச் சென்று வரும்­படி கூறு­வ­தும் நியா­ய­மில்லை. ஊழி­யர்­கள் வேலை தேடிச் சென்­று­விட்­டால், நிலை­யம் மீண்­டும் திறந்­த­வு­டன் திரும்பி வரு­வது சந்­தே­கம்­தான். அப்­போது புதி­தாக ஊழி­யர்­க­ளைத் தேட வேண்­டி­யி­ருக்­கும்,” என்று வருத்­தம் தெரி­வித்­தார் திரு ரஹ்­மான்.

ஊழி­யர்­க­ளைத் தக்கவைத்துக்­கொள்ள கடை மூடி இருக்­கும் காலத்­தில் சிறி­த­ளவு பணம் வழங்க இவர் திட்­ட­மி­டு­கி­றார்.

“பொது­வாக தீபா­வ­ளிக்கு, பல மாதங்­கள் ஆயத்­தப் பணி­கள் நடை­பெ­றும். நான்கு, ஐந்து மாதங்­க­ளுக்கு முன்பே பண்­டி­கைக்­கால ஆடை­களை வாங்­கப் பல­ரும் வரு­வார்­கள்.

“இவ்­வாண்டு தீபா­வளி நவம்­பர் மாதம் வரு­கிறது. நிலை­யம் மீண்­டும் திறந்த பிறகு தீபா­வ­ளிக்­கு­முன் இரண்டு மாத காலமே உள்­ளது. ஆடை விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு இது பெரிய அள­வி­லான நெருக்­கு­தல்­தான்,” என்று ஆதங்­கத்­து­டன் கூறி­னார் துணிக்­க­டை­யில் பணி­பு­ரி­யும் திரு­மதி ஜெயா, 58.

வாடிக்­கை­யா­ளர்­கள் வருத்­தம்

திரு­மதி அபு பக்­கர் ஜனத்து கனி­யின் கோழி இறைச்சி கடைக்கு அடிக்­கடி வரும் வாடிக்­கை­யா­ளர் குமாரி ரினோஷா ஜஸ் ரீன்.

“இங்கு பொருள்­களை நம்பி வாங்­க­லாம். அத­னால்­தான் தொடர்ந்து இங்கு வரு­கி­றேன். என் வீட்­டுக்கு அரு­கில் உள்ள பேரங்­கா­டி­யும் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளது. தேக்கா நிலை­ய­மும் மூடப்­பட்­டால் மூன்று மாதங்­க­ளுக்கு வேறு கடையை நாட வேண்­டும்,” என்­றார் ரினோஷா.

பொருள்­கள் வாங்­கு­வ­தற்கு மட்­டு­மல்­லாது மக்­கள் கூடும் இட­மா­க­வும் அங்­குள்ள உண­வங்­காடி நிலை­யம் விளங்­கு­கிறது.

“வாரத்­தில் மூன்­று­முறை என் நண்­பர்­களை இந்த உண­வங்­காடி நிலை­யத்­தில் சந்­திப்­பேன். வெவ்­வேறு இடங்­களில் வெவ்­வேறு வேலை பார்க்­கும் எங்­க­ளுக்கு தேக்கா நிலை­யம் ஒன்­று­கூட வச­தி­யாக இருக்­கிறது.

“எங்­க­ளைப்­போல பல­ரும் இங்கு வந்து கிட்­டத்­தட்ட ஐந்து மணி நேரம் ­கூட நண்­பர்­க­ளு­டன் அரட்டை அடிப்­ப­துண்டு. குறிப்­பாக, இந்த இடம் இன்­னோர் இல்­லம் போன்ற உணர்­வைக் கொடுப்­பதே இதற்­குக் கார­ணம்.

“இங்கு விற்­கப்­படும் உணவு, வாகன நிறுத்த வசதி, கடைக்­கா­ரர்­க­ளு­ட­னான நட்பு போன்­ற­வற்றை மூன்று மாதங்­கள் அனு­ப­விக்க இய­லாது என்­பது கவலை தரு­கிறது. ஐந்து, ஆறு நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து அமர்ந்து நீண்ட நேரம் பேச­வும் முடி­யாது,” என்று தம் கவ­லை­யைப் பகிர்ந்து கொண்­டார் திரு லினஸ் ஜெரல்டு, 57.

நல்­லதை எண்ணி மகிழ்­ப­வர்­கள்

ஆட்­டி­றைச்­சிக் கடை­யில் பணி­பு­ரி­யும் 29 வயது ஷா, “இந்த மூன்று மாதங்­கள் எனக்கு விடு­முறை என்­ப­தால் மிக்க மகிழ்ச்சி,” என்று பூரிப்­பு­டன் கூறி­னார்.

‘ஸுசி­யாவ் சென்­டர்’ வணி­கச் சங்­கத்­திற்­கான தேக்கா நிலை­யப் பிர­தி­நிதி அஜித் குமார், 53, ‘பூஜா ஆடை­கள்’ எனும் கடையை தேக்கா நிலை­யத்­தில் நடத்தி வரு­கி­றார்.

நிலை­யத்தை மூடு­வ­தால் ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம், மத்­திய சேம­நிதி, வெளி­நாட்டு ஊழி­யர் தீர்வை போன்­ற­வற்றுக்கு என்ன செய்­வ­தென்று தெரி­யா­மல் கவ­லைப்­ப­டு­கி­றார் இவர்.

இருப்­பி­னும், “தேக்கா நிலை­யத்­தைப் புதுப்­பிப்­பது அவ­சி­யம்­தான். மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் எதிர்­கா­லத்­தில் பெரும் உத­வி­யாக அமை­யும்.

“தேக்கா நிலை­யம் இன்­னும் 10 ஆண்­டு­க­ளுக்­குத் தொடர்ந்து வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குச் சேவை வழங்­கும்.

“அர­சாங்­கம் இங்கு முத­லீடு செய்ய விரும்­பு­கிறது என்­றும் இந்த நிலை­யம் இடிக்­கப்­படும் நிலை இப்­போ­தைக்கு இல்லை என்­றும் தெரி­கிறது. இது உண்­மை­யில் இங்­குள்­ள­வர்­க­ளுக்கு ஒரு வரம் என்­ப­தைப் புரிந்­து­கொள்ள வேண்­டும்,” என்று கூறிய திரு அஜித் புதிய தேக்கா நிலை­யம் தயா­ரா­வ­தற்­கா­கக் காத்­தி­ருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!