கேலாங் சிராயில் ரமலான் குதூகலம்

ரச்­சனா வேலா­யு­தம் /

ஆ. விஷ்ணு வர்­தினி

கேலாங் சிரா­யில் புனித ரம­லான் மாதத்தை முன்­னிட்டு இடம்­பெ­றும் சந்தை அதன் முதல் வாரத்­தில் 200,000க்கும் மேற்­பட்­டோரை ஈர்த்­துள்­ள­தாக விஸ்மா கேலாங் சிராய் தெரி­வித்­துள்­ளது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்­குப் பிறகு இரண்­டாம் முறை­யாக நடை­பெ­றும் சந்­தை­யில் இவ்­வாண்டு 700க்கு மேற்­பட்ட கடை­க­ளுக்­கான இடம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்­டைப்­போல இது பத்து மடங்கு.

மார்ச் 17ஆம் தேதி திறக்­கப்­பட்ட இச்­சந்தை இம்­மா­தம் 22ஆம் தேதி வரை செயல்­படும். அன்­றா­டம் காலை 10 மணி முதல் இரவு 11.59 மணி வரை சந்தை திறந்­தி­ருக்­கும்.

கட்­டுப்­பா­டு­கள் முழு­மை­யாக தளர்த்­தப்­பட்­டுள்ள நிலை­யில் இவ்­வாண்டு நண்­பர்­க­ளு­டன் சந்­தைக்கு வந்­தது உற்­சா­கம் அளிப்­ப­தா­கக் கூறி­னார் 22 வயது தி. நுவந்­தி­ரன்.

“இதற்­கு­முன் ‘ரம்லி பர்­கர்’, குளிர் தேநீர், இனிப்­புத் தின்­பண்­டங்­கள் போன்­ற­வற்றை சேர்ந்து உண்­போம். இம்­முறை, ‘ரோஜாக்’, ‘பரோட்டா வாஃபல்ஸ்’ உட்­பட புதிய வகை தின்­பண்­டங்­க­ளை­யும் சுவைத்­துப் பார்த்­தோம்,” என்­றார் நுவந்­தி­ரன்.

தாய்­லாந்து, வியட்­நாம் உண­வு­வ­கை­கள் சந்­தைக்­குச் சிறப்பு கூட்­டு­வ­தாக அவர் கூறி­னார். ‘பரோட்டா வாஃபல்ஸ்’, ‘தோசை வாஃபல்ஸ்’ ஆகி­யன இளை­யர்­களை ஈர்த்­தன.

இதற்­கி­டையே, கடை வாடகை உயர்வு குறித்­துக் கடை உரி­மை­யா­ளர்­கள் கவலை தெரி­வித்­த­னர். அதி­க­பட்ச வாடகை $19,000 ஆக இருக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­ட­போ­தும் சில கடை­க­ளின் வாடகை $24,000வரை உயர்ந்­து உள்­ளது. போட்ட முதலை மீட்க சந்­தை­யின் கடைசி இரண்டு வாரங்­களை மலை­போல நம்பி இருப்­பதா­கச் சில கடைக்­கா­ரர்­கள் தெரி­வித்­த­னர்.

உய­ரும் விலை­வாசி, வாடகை, பொருள், சேவை வரி ஆகி­யன கருதி பல கடை­கள் பொருள்­களின் விலையை அதி­க­ரித்­துள்­ளன. உண­வின் அளவு குறைந்­தும் விலை அதி­க­மா­க­வும் இருப்­பதாகக் கூறினார் தஸ்­லிமா, 27.

“$3ஆக இருந்த ‘ரம்லி பர்­கர்’ இப்­போது $5. உணவு அள­வும் குறைந்­து­விட்­டது. விலை­வாசி இப்­போது ஏறி­யுள்­ள­து­தான். ஆனால், காலங்­கா­ல­மாக மலி­வாக விற்­கப்­படும் இவற்­றின் விலை மிக­வும் கூடி­யுள்­ளது அதிர்ச்சி அளிக்­கின்­றது,” என்று தஸ்­லிமா கூறி­னார்.

இர­வுச்­சந்­தை­களில் 2002ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ‘மிஸ்­டர் வடை’ எனும் கடை, இறால் வடை­களை $1க்கு விற்­கிறது.

“2000களில் $2,000ஆக இருந்த கடை வாடகை, இப்­போது $16,000ஐத் தொட்­டுள்­ளது,” என்று வருந்­தி­னார் கடை உரி­மை­யா­ளர் ராஜ் கோவின், 65. இருப்­பி­னும், சேவை மனப்­பான்­மை­யு­டன் சந்­தை­யில் ஆக மலி­வான விலை­யில் வடை விற்­ப­தாக தெரி­வித்­த­னர் அவ­ரும் அவ­ரின் இரு பிள்­ளை­களும்.

இதற்­குக் கார­ணம் ஆறு மாதங்­க­ளுக்கு முன்­னர் மறைந்த திரு ராஜின் மனைவி திரு­வாட்டி மனோன்­ம­ணி­யின் வேண்­டு­கோள். ‘மிஸ்­டர் வடை’ வர்த்­தக யோச­னைக்கு வித்­திட்ட அவர், ரம­லான் சந்­தை­யில் மட்­டும் லாபம் ஈட்­டு­வதை நோக்­க­மா­கக் கொள்­ளக்கூடாது என்று கூறு­வ­துண்டு. “அவர் நினை­வாக, தொடர்ந்து லாபத்­தை­விட ரம­லான் சந்தை வாடிக்­கை­யா­ளர்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி வரு­கி­றோம்,” என்­றார் திரு ராஜ்.

இந்த ஆண்டு வடை விற்­கும் கடை­கள் ஏரா­ளம். இத­னால் போட்­டித்­தன்மை அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார், ‘ஃபேமஸ் வடை அங்­கல்’ கடை­யின் உரி­மை­யா­ளர் ரஹ்­மத் நிஷா, 54.

கொவிட்-19 சூழ­லுக்­குப் பின்­னர் இர­வுச்­சந்­தை­க­ளின் எண்­ணிக்கை கூடி­விட்­ட­தால் ரம­லான் சந்­தை­யின் தனித்­து­வம் குன்­றி­விட்­ட­தாக அவர் கூறி­னார். இத­னால், மக்­க­ளின் வர­வேற்­பைத் துல்­லி­ய­மாக எடை­போட முடி­ய­வில்லை என்­கி­றார் இவர்.

உணவு மட்­டு­மின்றி பாரம்­பரிய ஆடை ஆப­ர­ணங்­கள், அலங்­கா­ரப் பொருள்­கள் போன்­ற­வை­யும் இங்கு விற்­கப்­ப­டு­கின்­றன.

முதன்­மு­த­லாக இர­வுச்­சந்­தை­யில் இடம்­பெற்­றுள்ள ‘பீ வாவ்ட்’ ஆடை வர்த்­தக நிறு­வ­னர் காயத்ரி ராம­சாமி, இது பெரிய வாய்ப்பு என்று குறிப்­பிட்­டார். இந்­திய ஆடை, அணி­க­லன்­களை பல இனத்­தோ­ரி­டம் கொண்டு சேர்க்க முடி­கிறது என்­றா­ர­வர்.

இவ்­வாண்­டின் சந்­தை­யில் ஆர்க்­கேட் விளை­யாட்­டு­க­ளி­லும் மக்­கள் ஈடு­பட இய­லும். வரு­கை­யா­ளர்­கள், அலங்­க­ரிக்­கப்­பட்ட மட்­டக்­கு­தி­ரை­கள், கிளி­கள் போன்­ற­வற்­று­டன் படம் எடுக்­க­வும் குதி­ரைச் சவாரி செய்­ய­வும் வாய்ப்பு உண்டு.

நீண்ட நேரம் ஓய்­வில்­லா­மல் காட்­சிக்கு வைக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் இந்த விலங்­கு­க­ளின் நல­ன் குறித்து அதிகாரிகள் தற்­போது விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

விழாக்­கால உணர்­வுக்கு இது­போன்ற சந்­தை­கள் முக்­கி­யப் பங்­க­ளிப்­ப­தால் உய­ரும் விலை­வா­சி­யைப் பொருட்­ப­டுத்­தா­மல் மக்­கள் திரண்டு வரு­வதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!