'தாய்மொழி போற்றும் தலைமுறை வேண்டும்'

'தாய்மொழி போற்றும் தலைமுறை வேண்டும்'

2 mins read
3d627149-9ad5-471c-9d27-9954cf52dd1e
-

மோன­லிசா

தமிழ்­மொ­ழி­யினை உல­க­ள­வில் முன்­னி­றுத்­தி­ய­தில் அய­ல­கத் தமிழர்­க­ளின் பங்கு இன்­றி­ய­மை­யா­தது என்று அண்­மை­யில் நடை­பெற்ற 'தமி­ழின் அழகே அழகு' நிகழ்­வில் சிங்­கப்­பூர்த் தமி­ழர்­களின் தமிழ்­மொழி ஆர்­வத்­திற்கு புக­ழா­ரம் சூட்­டி­னார் எழுத்­தா­ள­ரும் பேச்­சா­ள­ரும் திரைப்­பட நடி­கரு­மான திரு ஜோ மல்­லூரி.

தமி­ழர் வாழ்­வின் அனைத்துப் படி­நி­லை­க­ளி­லும் இணைந்து பயணிக்­கும் இம்­மொ­ழி­யி­னைப் பாது­காப்­பது உல­கில் வாழும் ஒவ்­வொரு தமி­ழ­ரின் கடமை என்­று அண்­ணா­ம­லைப் பல்­கலைக்­க­ழக முன்­னாள் மாண­வர்­கள் சங்­கத்தின் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட திரு ஜோ கூறி­னார்.

மேலும், இன்­றைய தலை­முறை தமி­ழில் பேசா­தி­ருந்­தால் அடுத்த தலை­மு­றை­யைத் தாண்டி தமிழ்­மொழி நீடிப்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­வி­டும் என்று தமது வருத்­தத்­தைப் பதி­வு­செய்த திரு ஜோ, தாய்­மொ­ழி­யைத் தவிர்க்­காத தலை­மு­றையை நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து உரு­வாக்க வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொண்­டார்.

தமிழ்­மொழி விழா­வை­யொட்டி இம்­மா­தம் 9ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலைய உள்­ள­ரங்­கில் நடை­பெற்ற இந்­நி­கழ்­வில், உயர்­நி­லைப் பள்ளி, தொடக்­கக் கல்­லூரி மாண­வர்­கள் பங்­கேற்ற கலந்­து­ரை­யா­டல் அங்­கம் பார்­வை­யா­ளர்­க­ளின் பாராட்­டைப் பெற்­றது.

தமிழ்­மொ­ழி­யின் தனித்­து­வ­மான சிறப்­பம்­சங்­கள், இளை­யர்­களி­டம் தமிழ்­மொ­ழி­யி­னைக் கொண்டு செல்­வ­தற்­கான எளிய வழி­மு­றை­கள், தமி­ழில் பிற மொழி­க­ளின் கலப்பு உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­கள் இக்­க­லந்­து­ரை­யா­டல் அங்­கத்­தில் அலசி ஆரா­யப்­பட்­டன.

இக்­க­லந்­து­ரை­யா­ட­லைத் தமிழ்­மொழி பண்­பாட்­டுப் பிரிவு தேசி­யக் கல்­விக்­க­ழக முள்ளாள் தலை­வரான முனை­வர் ஆ.ரா. சிவ­குமா­ரன் வழி­ந­டத்­தி­னார்.

இந்­நி­கழ்­விற்­குப் பல வாரங்­கள் முன்­ன­தாக 'சிலப்­ப­தி­கா­ரம் வழி தமி­ழின் அழகே அழகு' எனும் தலைப்­பி­லான ஆய்­வுக்­கட்­டு­ரைப் போட்டிக்காக தலை­சிறந்த ஆய்­வுக்­கட்­டு­ரை­களை எழு­திய மாண­வர்­கள், இக்­க­லந்­து­ரை­யா­டல் நிகழ்­வில் பங்­கு­கொண்­ட­னர். வெற்­றி­யா­ளர்­க­ளுக்­கும் கலந்­து­கொண்ட மாண­வர்­களுக்­கும் பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன.

இந்­நி­கழ்­வில் பங்­கு­கொண்ட உயர்­நி­லைப்­பள்ளி மாண­வி­யான 12 வயது மேதினி கபி­லன், "மாண­வர்­க­ளின் கலந்­து­ரை­ யாடல் அங்­கம் சுவா­ர­சி­ய­மாக இருந்­தது. தமிழ்மொழி பற்­றிய பல புதிய தக­வல்­க­ளை­யும் கற்­றுக்­கொண்­டேன்," என்­றார்.

"சிறப்பு விருந்­தி­ன­ரு­டைய தங்­கு­த­டை­யற்ற தமிழ்மொழி பேச்சு மெய்­சி­லிர்க்க வைத்­தது. நாம் அன்­றா­டம் பேசும் எளிய வாக்­கி­யங்­க­ளி­லா­வது பிற­மொழி கலக்­கா­மல் இனி பேச வேண்­டும்," என்று கூறி­னார் மென்­பொருள் பொறி­யா­ள­ரான சந்­தியா தன­சே­க­ரன், 23.

"இது­போன்ற நிகழ்­வு­களில் தமிழைப் பற்றி அதிகமாக அறி வது மொழி­மீதுள்ள ஈடு­பாட்டை அதி­க­ரிக்­கிறது," என்று கூறி­னார் ஆய்­வுத் துறை­யில் உள்ள முனை­வர் இரா. அருள்­ராஜ், 40.