சிண்டா - இந்தியர் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிண்டா - இந்தியர் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

2 mins read
3e0164c5-efd4-449d-9961-9d2617933edc
-

கரு­ணா­நிதி துர்கா

நெருக்­க­மான பங்­கா­ளித்­துவ உறவை நிலை­நாட்­ட­வும் இந்­திய சமூ­கத்தை மேம்­ப­டுத்­த­வும் சிண்டாவும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கமும் இணைந்து புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ஒன்­றில் கையெ­ழுத்­திட்­ட­ன.

சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கத்­தின் கட்­ட­டத்­தில் இந்­நி­கழ்வு நேற்று முன்­தி­னம் நடந்­தே­றி­யது.

இந்­நி­கழ்ச்­சிக்கு சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ர­னும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கத் தலை­வர் திரு தமிழ் மாற­னும் வந்­த­தோடு சிறப்பு விருந்­தி­ன­ராக முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரான திரு எஸ் சந்­தி­ர­தாஸ் வருகை புரிந்­தார்.

இந்தப் பங்­கா­ளித்­து­வத்­தி­னால் எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய மக்­க­ளுக்­காக சிண்­டா­வால் இன்­னும் கூடு­த­லான ஆத­ரவு வழங்க முடி­யும்.

சிண்­டா­வின் திட்­டங்­க­ளி­லும் நிகழ்ச்­சி­க­ளி­லும் பங்­கு­பெ­றும் இளை­யர்­கள் சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கத்­தின் விளை­யாட்டு வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்­தும் வாய்ப்­பும் கிட்­டும்.

இரு அமைப்­பு­களும் சமூக நல­னை­யும் ஒற்­று­மை­யை­யும் கரு­தித் திட்­டங்­களை வகுத்­துள்­ளன. அதோடு சமூ­கத்­தின் மீது அவை கொண்­டுள்ள அர்ப்­ப­ணிப்­பா­லும் இந்தப் பங்­கா­ளித்­து­வம் சாத்­தி­ய­மா­னது.

இந்தப் பங்­கா­ளித்­து­வத்­தி­லி­ருந்து புதி­தா­கப் பல­வற்­றைக் கற்­றுக்­கொண்டு மேன்­மே­லும் முன்­னே­று­வ­தில் தமிழ் சமூ­கத்­தி­னர் கவ­னம் செலுத்த வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார் திரு தமிழ் மாறன்.

"அமைப்­பு­கள் ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வ­தற்கு இது ஒரு நல்ல முன்­னு­தா­ர­ண­மாக இருக்­கும் என நம்­பு­கி­றேன். ஒன்­றி­ணைந்து வலு­வான ஓர் இந்­திய சமூ­கத்தை உரு­வாக்­கும்­போது தத்­தம் வளங்­கள் அனை­வ­ருக்­கும் பய­ன­ளிக்­கும்," என்று திரு அன்­ப­ரசு கூறி­னார்.

"வச­தி­கு­றைந்த இளை­யர்­களுக்­கும் காற்­பந்து, கிரிக்­கெட் போன்ற விளை­யாட்­டு­க­ளுக்­கான வச­தி­களை அமைத்­துக் கொடுக்­கும் வாய்ப்பு இந்­திய அமைப்­பு­க­ளுக்­குக் கிடைத்­துள்­ளது.

"இவ்­வா­றான விளை­யாட்­டு­ க­ளின் மூலம் இளை­யர்­கள் ஒன்­றி­ணைந்து பண்­பு­டைய சமூ­கம் ஒன்றை உரு­வாக்க முடி­யும்," என்று திரு எஸ் சந்­தி­ர­தாஸ் கூறி­னார்.