தமிழவேள் விருது பெற்றார் தமிழாசிரியர் சாமிக்கண்ணு

3 mins read
1d3a9b18-bf3e-4fb2-9f0f-70dc8d3ab0ac
-

மோன­லிசா

தமி­ழா­சி­ரி­ய­ரும் சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்க முன்­னாள் தலை­வரு­மான சி. சாமிக்­கண்ணு, சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் வழங்­கும் இந்த ஆண்­டுக்­கான தமி­ழ­வேள் விரு­தைப் பெற்றுள்ளார்.

அரை நூற்­றாண்­டுக்கு மேலாக ஆசி­ரி­யப் பணி­யில் உள்ள இவர், ஏறத்­தாழ 26 ஆண்­டு­கள் உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் பணி­யாற்­றி­ய­வர்.

தமி­ழா­சி­ரி­யர் சங்­கத்­தின் தலை­வராக இருந்த 20 ஆண்­டுக் காலத்­தில் தமிழ்க் கல்வி, ஆசி­ரி­யர் பணி சார்ந்த பல்­வேறு முயற்­சி­களை முன்­னெ­டுத்த பெருமை இவ­ரைச் சாரும்.

இவர் சங்­கத்­தின் செய­லா­ள­ராக இருந்­த­போது, மாண­வர்­கள் மத்­தி­யில் தமிழ்­மொ­ழிப் புழக்­கம் குறைந்­து­வ­ரு­வது கண்­ட­றி­யப்­பட்­டது. எனவே, 1990களில் 'தமி­ழில் பேசு­வோம்' இயக்­கத்­தைத் தொடங்­கி­யது.

தற்­போது பிரம்­மாண்­ட­மா­கக் கொண்­டா­டப்­படும் தமிழ்­மொழி விழா­விற்கு வித்­திட்­டது அந்த இயக்­கம்.

உல­கத் தமி­ழா­சி­ரி­யர் பேர­வை­யில் 10 ஆண்­டு­க­ளுக்­கு­மேல் தலை­வ­ரா­கச் செய­லாற்­றி­வ­ரும் திரு சாமிக்­கண்ணு, உல­கத் தமி­ழா­சி­ரி­யர் மாநாட்­டுக்­குப் பெரும் பங்­காற்றி வரு­கி­றார்.

சிறு­வ­ய­தி­லும் பின்­னர் தமி­ழா­சி­ரி­யர் என்ற நிலை­யி­லும் இன்­றும்­கூட தாம் வியந்து போற்­றும் வர­லாற்று நாய­கன் தமி­ழ­வேள் கோ.சாரங்­க­பா­ணி­யின் பெய­ரில் வழங்­கப்­படும் விரு­தைப் பெறு­வ­தில் தாம் பெருமை கொள்­வ­தா­கக் கூறி­னார் திரு சாமிக்­கண்ணு.

அடுத்த தலை­மு­றை­யி­ன­ரைச் செம்­மைப்­ப­டுத்துவதற்கு அடித்­த­ள­மான கற்­றல், கற்­பித்­தல் துறை­யில் சிங்­கப்­பூர் தொடர்ந்து பல நாடு­களுக்கு முன்­மா­தி­ரி­யாக விளங்­கும் என்­றார் அவர்.

தமிழ்­மொழி விழா­வை­யொட்டி இம்­மா­தம் 16ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலைய அரங்­கில் நடை­பெற்ற 'முத்­த­மிழ் விழா' நிகழ்ச்­சி­யில் 300க்கு மேற்­பட்­டோர் கலந்­து­கொண்­ட­னர்.

நிகழ்வில் சிறப்­புப் பேச்­சா­ள­ராக எழுத்­தா­ள­ரும் மொழி­பெ­யர்ப்­பா­ள­ரும் நடி­க­ரு­மான பவா செல்ல­துரை கலந்து­கொண்­டார்.

"மானு­டத்­தின் அறத்­தை­யும் மேன்­மை­யை­யும் நாம் அன்­றாட வாழ்­வில் சந்­திக்­கும் சாமா­னிய மக்­கள் எளி­மை­யான முறை­யில் உணர்த்­தி­வி­டு­கி­றார்­கள்," என்று அவர் கூறி­னார்.

'மானு­டத்­தின் திறப்­பு­களில் கதை­க­ளின் அழகு' எனும் தலைப்­பில் சிறப்­பு­ரை­யாற்­றிய அவர், வாழ்க்­கைக்­குத் தேவை­யான பய­னுள்ள கருத்­து­கள் பல­வும் வகுப்­ப­றைக்கு வெளி­யி­லும் கொட்­டிக்­கி­டக்­கின்­றன என்­றும் அதனை எழுத்­தா­ளர்­கள் எளி­மை­யான முறை­யில் அடிக்­கோ­டிட்­டுக் காட்­டு­கி­றார்­கள் என்­றும் குறிப்­பிட்­டார்.

நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட நாடா­ளு­மன்ற முன்­னாள் நிய­மன உறுப்­பி­ன­ரும் இந்து அறக்­கட்­டளை வாரி­யத் துணைத் தலை­வ­ரு­மான இரா. தின­க­ரன், "இளை­யர்­கள் அதிக அள­வில் தமிழ் நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­பது எதிர்­கா­லத் தலை­முறை மீது மிகுந்த நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி உற்­சா­க­ம­ளிக்­கிறது," என்­றார்.

28ஆம் ஆண்டாக நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கும்மி நட­னம், மாண­வர்­க­ளின் மாறு­வே­டப்­போட்டி, பேச்­சுத் திறன் போட்டி போன்றவையும் இடம்­பெற்­றன.

மாண­வர்­கள், இளை­யர்­கள், பொது­மக்­கள் என அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­கும் முத்­த­மிழ் விழா­வை­யொட்­டிக் கடந்த மாதம் நடத்­தப்­பட்ட போட்­டி­க­ளுக்­கான பரிசு­கள் இந்த நிகழ்ச்­சி­யில் வழங்­கப்­பட்­டன.

இந்­நி­கழ்­வில் பங்­கேற்ற உயர்­நி­லைப்­பள்ளி மாணவி யாழிசை ராஜேந்­தி­ரன், 14 "பாலர்­பள்ளி மாண­வர்­க­ளின் மாறு­வே­டப்­போட்­டி­யில் கம்­பீ­ர­மான கதா­பாத்­தி­ரங்­க­ளைத் தங்­க­ளின் மழலை மொழி­யில் கண்­முன் கொண்­டு­வந்த சிறார்­க­ளின் படைப்­பு­கள் அரு­மை­யாக இருந்­தன," என்­று கூறினார்.

மாண­வர்­க­ளுக்­கும் பொது­மக்­க­ளுக்­கும் நடத்­தப்­படும் தமிழ்ப் போட்­டி­கள் வர­வேற்­கத்­தக்­கவை என்­றும் சிறப்­புப் பேச்­சா­ள­ரின் உரை நகைச்­சு­வை­யா­க­வும் சிந்­த­னை­யைத் தூண்­டும் வகையிலும் அமைந்­தி­ருந்­த­தா­க­வும் கூறி­னார் முத்தமிழ் விழா நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட 43 வயது குடும்­பத்­த­லைவி கமலா செல்­வ­சுந்­த­ரம்.