கலைத்துறையில் இளையர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் 'அகம்' கல்வி உதவி நிதி

கலைத்துறையில் இளையர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் 'அகம்' கல்வி உதவி நிதி

2 mins read
89b36638-3280-4f0c-8fc6-f635e8ed8701
-

சபிதா ஜெய­கு­மார்

'அகம் தியேட்­டர் லேப்' எனும் லாப நோக்­க­மற்ற நாடக அமைப்பு, சிங்­கப்­பூர் இந்­தி­யர் கல்வி அறக்­கட்­ட­ளை­யு­டன் இணைந்து தகு­தி­பெற்ற கலைத்துறை மாண­வர்­களுக்கு கல்வி உத­வி நிதி வழங்­கி ­உள்­ளது.

அகம்-சிங்­கப்­பூர் இந்­தி­யர் கல்வி அறக்­கட்­டளை கல்வி உதவி நிதி, இம்மாதம் 20ஆம் தேதி 'குட்­மன் ஆர்ட்ஸ்' நிலை­யத்­தில் நடைபெற்ற 'அகம் கிவ்ஸ்' நிகழ்ச்­சி­யில் வழங்­கப்­பட்­டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­ட கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங், ­'அகம் கிவ்ஸ்' திட்­டத்­தைத் தொடங்கி வைத்து கல்வி உதவி நிதியை வழங்­கினார்.

லாப நோக்­க­மற்ற பொது­நல அமைப்பாக விளங்கும் சிங்­கப்­பூ­ரின் ஒரே தமிழ் நாடக அமைப்பு 'அகம் தியேட்­டர் லேப்'. வளர்ந்­து­வ­ரும் கலை­ஞர்­களுக்கு ஆத­ர­வும் உத­வி­யும் வழங்­கு­வது அதன் குறிக்­கோ­ள்.

சிங்­கப்­பூ­ரின் கலைச் சமூ­கத்­திற்­குப் பங்­காற்­றி­வ­ரும் ஐந்து கலைத்­துறை ஆர்­வ­லர்­கள் இந்த ஆண்­டுக்கான அகம்-சிங்­கப்­பூர் இந்­தி­யர் கல்வி அறக்­கட்­டளை கல்வி உத­வி நிதியைப் பெற்றுக்கொண்டனர்.

நன்­யாங் நுண்­க­லைக் கழ­கத்­தில் பயி­லும் ஷானிகா ஷிவானி, ஹன்னா சோனியா, லசெல் கலைக் கல்­லூ­ரி­யின் மும்­தாஸ் மரைக்காயர், முக­மது மிர்சா, ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பயிலும் ஷாலோம் அலிஸ் ஆகியோர் அவர்கள்.

அற­நி­தி­யாக $8,000 திரட்­டப்­பட்­டதை அடுத்து நாட­கம், கலை நிர்­வா­கம் போன்ற துறை­களில் ஈடுபடுவோருக்கும் மேல்­படிப்­பை­த் தொடர்வோருக்கும் இந்த கல்வி உதவி நிதி வழங்­கப்­பட்­டது.

"இந்த நிதி கல்­விச் செல­வு­க­ளுக்கு உத­வு­வ­தோடு என்­னைப் போன்று கலைத்­து­றை­யை வாழ்க்­கைத்­தொ­ழி­லா­கத் தேர்ந்­தெ­டுப்­போ­ருக்கு ஓர் அங்­கீ­கா­ர­மாக அமை­கிறது.

"சிங்­கப்­பூர் சமு­தா­யத்­திற்கு முக்­கி­யப் பங்கு அளிக்­கி­றோம் என்ற அடை­யா­ளத்­து­டன் கலை­ வளர்ச்சி முக்­கி­யம் என்று அமைப்­பு­கள் நம்­பு­வதை எடுத்துக்கூறும் விதமாக வழங்கப்படும் இந்த நிதி ஊக்கம் அளிக்கிறது," என்றார் கலை கற்­பித்­தல், பயிற்­சி­ தொடர்பில் பட்­டக்கல்வி பயி­லும் திரு­மதி மும்­தாஸ் மரைக்காயர்.

நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய அகம் நிறு­வ­னத்­தலை­வர் அழ­கிய பாண்­டி­யன், "சிங்­கப்­பூ­ர் இளை­யர்­கள் நாட­கத்­து­றை­யி­லும் கலைத் துறை­களி­லும் ஈடு­படு­வதை ஊக்­கு­வித்­து, கலை­ வளர்ச்­சிக்­குப் பங்­காற்­று­வது எங்­க­ள் விருப்­பம்," என்று கூறி­னார்.

நிகழ்ச்சியின் இறு­தி­யில் 'விதை' எனும் நாட­கம் படைக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர்க் கவி­ஞர்­கள் இயற்­றிய கவிதை­களை மைய­மா­கக் கொண்ட இப்­ப­டைப்­புக்கு, அப்­ச­ரஸ் ஆர்ட்­ஸின் முதன்மை நட­னக் கலை­ஞர் மோக­னப்­பிரி­யன் தவ­ராஜா, திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ளர் டான் அர­விந்த், இசைக்­க­லை­ஞர் ராக­வேந்­தி­ரன் ராஜ­சே­க­ரன், நடி­கர்­கள் இந்து இளங்­கோ­வன், வினித் குமார் ஆகி­யோர் உயி­ரூட்­டி­னர்.

"தமிழ் நாட­கத் துறை­யி­லும் கலைத்­து­றை­யி­லும் ஒத்­து­ழைப்பைத் தூண்டும் விதமாக நாங்­கள் விதைக்­கும் விதை­களை இந்நாட­கம் காட்­சிப்­ப­டுத்­து­கிறது. தொடக்­கக் கல்­லூ­ரி­யில் தமிழ்­மொழி, இலக்­கி­யம் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு இந்தக் ­க­வி­தை­கள் மீதான புரி­த­லை அதிகரிக்க உதவுவது எங்கள் நோக்கம்," என்று கூறியது அகம் நாடக அமைப்பு. "வள­ரும் கலை­ஞர்­க­ளுக்குத் தொடர்ந்து வாய்ப்­பு­ வழங்கி துணை­நிற்போம்," என்றார் 'அகம் தியேட்­டர் லேப்' நிறு­வ­னர் சுப்­ர­ம­ணி­யன் கணேஷ்.