இளையர் மொழித்திறன் வளர்ப்புப் பயிற்சி

இளையர் மொழித்திறன் வளர்ப்புப் பயிற்சி

3 mins read
05d27c33-87ed-455e-84cb-122441ce3e51
-
multi-img1 of 3

செய்தியாளர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டிய முக்கிய மொழிபெயர்ப்புத் திறன்களை, மனப்பக்குவத்தை, செய்தி அணுகுமுறையை இளையர்களுக்கு அறிமுகப்படுத்தியது

தமிழ் முரசின் 'முரசு மொழிபெயர்ப்பு' பயிலரங்கு.

தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடந்தேறிய முழுநாள் பயிலரங்கு ஏறத்தாழ 40 இளையர்களை ஈர்த்தது.

செய்தி குறித்து கருத்து பரி­மா­றிக்­கொண்டு, நேரடிப் பயிற்­சி­பெறும் தள­மாக இப்­ப­யி­ல­ரங்கு உரு­வெ­டுத்­தது.

தமிழ் முரசு ஆசி­ரி­யர் குழு­வின் வழி­ந­டத்­த­லில் ஆங்­கிலம்-தமிழ் மொழி­பெ­யர்ப்பை வெவ்­வேறு சூழல்­க­ளுக்­குப் பொருத்திப் பயன்­ப­டுத்­து­வ­தி­லும் செய்தி எழு­து­வ­தி­லும் பங்­கேற்­பா­ளர்­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

தொடர்பு, தகவல் அமைச்­சின் தேசிய மொழி­பெ­யர்ப்­புக் குழு மற்­றும் வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வில் இந்­நி­கழ்வு எஸ்பிஎச் வளா­கத்­தில் நேற்று இடம்­பெற்­றது. மொழி­பெ­யர்ப்­புக்கு அறி­மு­கப்­ப­டுத்­து­வது, செய்தி எழு­து­வது என இரு அங்­கங்­க­ளாக பயி­ல­ரங்கு பிரிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஒவ்­வோர் அங்­கத்­தி­லும் குழு நட­வடிக்­கை­க­ளின்­மூ­லம் கற்­றதை செயல்­ப­டுத்­திப் பல­ன­டைந்­த­னர் இளை­யர்­கள்.

உள்­ளூர் நடப்­பு­க­ளை­யும் உலக விவ­கா­ரங்­க­ளை­யும் ஆழ­மாக ஆரா­ய­, அவற்­றுள் பொதிந்­தி­ருக்­கும் கருத்­து­களை வெளிக்­கொ­ண­ரும் புரிந்­து­ணர்வை மேம்­ப­டுத்­த­ பயி­ல­ரங்கு வாய்ப்பு தந்­த­தா­கக் கூறி­னார், 19 வயது சாய்பாலாஜி லக்­‌ஷ்­ம­ணன்.

இரு அங்­கங்­க­ளை­யும் வழி­நடத்­திய முர­சின் உதவி ஆசி­ரி­யர்­க­ளின் அனு­ப­வங்­க­ளைக் கேட்­ட­றிந்­தது தம்­மைக் கவர்ந்­த­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

"கலைச்­சொற்­கள், வேற்­று­மொழி கலா­சா­ரங்­க­ளைப் பறை­சாற்­று­வது முத­லிய தங்­க­ளின் அன்­றா­டப் பணி­யில் எதிர்­நோக்­கும் சவால்­களை உதவி ஆசி­ரி­யர்­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர். துல்­லி­ய­மாக மொழி­பெ­யர்ப்­பது சாதா­ரண மனி­த­ருக்­கும் பொருந்­தும் என்­பதை உணர்ந்­து­கொண்­டேன்," என்­றார் அவர்.

இதற்­கி­ணங்க, பயி­ல­ரங்­கில் பங்­கு­கொண்ட சித்­தார்த் நரேந்­தி­ரன் பிள்ளை, 17, பல இன சமு­தா­ய­மான சிங்­கப்­பூ­ரில் மொழி­பெ­யர்ப்பு ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் பொருத்­த­மா­னது என்று தாம் உணர்­வ­தா­கக் கூறி­னார்.

தினமும் எதிர்­நோக்­கும் வழக்­க­மான தொடர்­களில், உரை­யா­டல்­களில், வர்த்­தக முழக்­க­வ­ரி­களில், செயல்­பா­டு­க­ளில்­கூட மொழி­பெயர்ப்­புக்கு இட­முண்டு என்­பதைத் தாமும் நண்­பர்­களும் இணைந்து அறிந்­து­கொண்­டதை அவர் விவ­ரித்­தார்.

திரு­மதி சத்­யப்­பி­ரியா, 35, மொழி­பெ­யர்ப்­புத் துறை­யில் 9 ஆண்­டு­க­ளாக பணி­யாற்றி வரு­பவர். எளிய முறை­யில் மொழி­பெயர்ப்­பதை இந்­நி­கழ்வு ஆழ­மாக பதித்­துள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

"இந்­நி­கழ்வு என் கண்­க­ளைத் திறந்து வைத்­துள்­ளது. ஒரே விவ­ரத்தை இளை­யர்­கள், மாண­வர்­கள் எத்­த­கைய புது­மை­யான கோணங்­களில் பார்க்­கின்­ற­னர் என தெரிந்­து­கொண்­டது வியப்­பூட்­டி­யது; ஆக்­க­பூர்­வ­மான உரை­யா­டல்­க­ளுக்கு இட்­டுச்­சென்­றது," என்­றார் திரு­மதி சத்­யப்­பி­ரியா.

இவ­ரைப்­போல, மொழி­பெ­யர்ப்­பில் அடிக்­கடி ஈடு­படும் கட்­டா­யம், ஆரம்­பக்­கல்வி ஆசி­ரி­யர் 41 வயது திரு­மதி லீலா ராணிக்கு உண்டு.

மக­ளு­டன் பயி­ல­ரங்­கில் கலந்­து­கொண்ட அவர், "தமிழ்ச் சிறு­வர் நூல்­க­ளின் பற்­றாக்­கு­றை­யி­னால் ஆங்­கில நூல்­களை மொழி­பெ­யர்ப்­ப­தையே நம்பி உள்­ளேன். இப்­ப­யி­ல­ரங்கு அதற்­கான தன்­னம்­பிக்­கையை ஊட்­டி­யுள்­ளது," என்­றார்.

இளம் வய­தி­ன­ருக்­கும் எட்டு­ம­ள­வில் இத்­த­கைய கருத்­து­களை முன்­வைத்த இப்­ப­யி­ல­ரங்கு 13 வயது அதிதி முரு­கேஷ்­வர் ராவிற்கு தமிழ்­மொழி பயன்­பாட்டை அதி­க­ரிக்க ஊக்­க­ம­ளித்­துள்­ளது.

மராத்­தி­யைத் தாய்­மொ­ழி­யாகக் கொண்­ட இவர், தமி­ழின் அழ­கை­யும் நுட்­பங்­க­ளை­யும் பாராட்ட பயி­ல­ரங்கு வகை­செய்­த­தா­கக் கூறி­னார்.

தமிழ் முரசு அலு­வ­ல­கத்­தில் செய்­திக் குழு­வி­னரை நேர­டி­யாக சந்­திக்­கும் வாய்ப்­பி­னை­யும் பங்­கேற்­பா­ளர்­கள் பெற்­ற­னர். பயி­ல­ரங்­கில் கற்­றுக்­கொண்ட கூறு­களைத் தொடர்­புப்­ப­டுத்­திக் கொண்­ட­தோடு, செய்­திக் குழு­வி­ன­ரின் அனு­ப­வங்­கள் தம்மை பிர­மிக்க வைத்­த­தா­கக் கூறி­னார் 16 வயது மாண­வர் சத்­தி­ய­வா­கீஸ்­வ­ரன் சாதனா.

'முரசு மொழிபெயர்ப்பு' பயிலரங்கு, தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு தமிழ் முரசு ஏற்பாடு செய்த முதல் நிகழ்வு. தமிழார்வத்தையும் செய்தித்துறை நாட்டத்தையும் விதைக்கும் நோக்கில் இந்நிகழ்வு அமைந்தது.