பாவேந்தர் நூல்களை படிக்கத் தூண்டும் விருது

பாவேந்தர் நூல்களை படிக்கத் தூண்டும் விருது

2 mins read
26b05795-8c4b-4c8a-ae7a-7141a3a5f75b
-

முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் இந்து அறக்­கட்­டளை வாரி­ய துணைத் தலை­வரு­மான திரு இரா.தின­க­ரன், இவ்­வாண்­டின் சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கி­யக்­க­ளத்­தின் பாவேந்­தர் விருதைப் பெற்­றார்.

வணிக நிர்­வா­கத் துறை­யில் முது­கலைப் பட்­டம் பெற்­றுள்ள இவர், 10க்கும் மேற்­பட்ட தொழில்­முறைச் சங்­கங்­க­ளு­ட­னும் அர­சாங்­கத்­தின் பல்­வேறு குழு­க்க­ளு­ட­னும் இணைந்து பணி­யாற்றி வரு­கி­றார்.

சிங்­கப்­பூர் சில்­லறை விற்பனை­ யா­ளர்­ சங்­கத்­ தலை­வர், திறன்­வளர்ச்­சித் துறை­யின் சிங்­கப்­பூர் ஸ்கில்ஸ்­ஃபியூச்­சர் துணைத்­தலை­வர், தேசிய மொழி­பெயர்ப்புக் குழு­ உறுப்­பி­னர் உட்­பட பல்­வேறு பொறுப்­பு­களை வகிக்­கும் இவர், லாபநோக்­க­மற்ற நிறு­வ­னங்­களை நிர்­வ­கிப்­ப­தி­லும் சமூ­க­ந­லத் திட்­டங்­களை வழி­நடத்­து­வ­தி­லும் முனைப்புடன் செயல்படுகிறார். சிங்­கப்­பூர் அர­சாங்­கம் வழங்­கும் சமா­தான நீதி­பதி விருது உட்பட பல்­வேறு விரு­து­களை இவர் பெற்­றுள்­ளார்.

எழுச்­சி­மிகு சொற்­க­ளால் தமிழரின் திற­மை­க­ளை­யும் வீரத்­தை­யும் தட்டி எழுப்பிய பாவேந்­தர் பாரதிதாசன் பெயரிலான வி­ரு­தைப் பெற்­ற­தில் தாம் பெருமை கொள்­வ­தாகக் கூறிய திரு தின­கரன், பாவேந்­தர் நூல்­க­ளை அதிகம் படிக்க இந்த விருது தமக்கு ஊக்­க­ம­ளிப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

இம்மாதம் 23ஆம் தேதி தேசிய நூல­கக் கட்­ட­டத்­தில் நடை­பெற்ற 'சுழ­லும் சொற்­போர்' ­நி­கழ்­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர் டின் பெய் லிங், இந்த நிகழ்­வின் மூலம் தமிழ்­மொ­ழிக்கு மாபெ­ரும் தொண்­டாற்­றிய ஒரு மேதை­யைப் பற்றி தெரிந்­து­கொள்­ளும் வாய்ப்பு தமக்­குக் கிடைத்ததாகக் கூறி­னார்.

இந்நிகழ்வில், வழக்­க­றி­ஞ­ரும் கவி­ஞ­ரு­மான த. இரா­ம­லிங்­கம் தலை­மை­யில் நடைபெற்ற 'சிறப்­பு­ரை­யும் தீர்ப்­பும்' அங்­கம் பார்­வை­யா­ளர்­க­ளின் பாராட்­டைப் பெற்­றது. பாவேந்­த­ரின் கவி­தை­களை­யும் வாழ்க்கை வர­லாற்­றை­யும் சுவா­ர­சியத் தக­வல்­க­ளு­டன் உரை­யாற்­றி­னார் கவி­ஞர்.

'பாவேந்­தர் பார­தி­தா­சனை புரட்­சிக் கவி­ஞ­ராக்­கி­யது எது?' எனும் தலைப்­பின்கீழ் பேச்­சா­ளர்­கள் சுவர்­ண­லதா ஆவு­டை­யப்­பன், முனை­வர் மன்னை க.இரா­ஜ­கோபா­லன், இசக்கி செல்வி ஆகி­யோர் உரை­யாற்­றி­னர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த நக்ஷத்­தி­ராஸ் இசைப்­பள்­ளி­ நிறு­வனர் சுந்­தரி சாத்­தப்­பன், 41, "பாரதி­தா­ச­னின் தமிழ்ப்­பணி குறித்து அதி­கம் தெரிந்­து­கொண்­டேன். இது­போன்ற நிகழ்­வு­கள் தமி­ழு­ணர்வைத் தூண்­டு­கின்­றன," என்றார்.