திரைப்பாடலுக்கு மெருகூட்டும் திருக்குறள்

திரைப்பாடலுக்கு மெருகூட்டும் திருக்குறள்

4 mins read
f6d8cb81-ef98-43c2-a2cb-b2a76fb71bfb
-

மோன­லிசா

தமிழ்­மொழி சார்ந்த படைப்­பு­கள் புதிய கண்­டு­பி­டிப்­பு­கள் அல்ல; அவை தொன்­று­தொட்டு வாழ்ந்­தோங்­கும் இம்­மொ­ழி­யின் புதிய பரி­மாண மெரு­கேற்­றம் மட்­டுமே என்று கூறி­னார் கவிஞரும் திரைப்­ப­டப் பாட­லா­சி­ரி­ய­ரு­மான யுக­பா­ரதி.

தமிழ்­மொழி விழா­வை­யொட்டி அண்­மை­யில் ஜமால் முஹம்­மது கல்­லூரி முன்­னாள் மாண­வர்­கள் சங்­கத்­தின் (சிங்­கப்­பூர் கிளை) ஏற்­பாட்­டில் நடை­பெற்ற 'தமி­ழுக்­கும் அழ­கென்று பேர்' நிகழ்­வில் சிறப்­பு­ரை­யாற்­றிய இவர், "நம்­மு­டைய மொழி­யின் வர­லாற்­றை­யும் பின்­பு­லத்­தை­யும் ஆளு­மை­யை­யும் அறி­தல் அவ­சி­யம்.

"இந்த விழிப்­பு­ணர்வே நம்­மு­டைய மர­பு­களை அடுத்த தலை­மு­றைக்கு எடுத்­துச்­செல்­லும் கருவி," என்று கூறி­னார்.

மேலும் தாம் எழு­திய பல திரைப்­ப­டப் பாடல்­க­ளுக்கு திருக்­கு­ற­ளின் சொற்­களும் பொருள்­களும் எவ்­வாறு அடித்­த­ள­மா­க­வும் அர­ணா­க­வும் மெருகூட்டின என்­பதைப் பல சுவா­ர­சிய அனு­ப­வங்­களையும் கோடிகாட்டி பகிர்ந்­து­கொண்­டார்.

எந்­த­வொரு கலை­ஞ­ரும் கலை­யின் களத்­தை­யும் சமூக நல­னை­யும் உள்­வாங்­கிக்கொண்டே படைப்­பு­களை உரு­வாக்கவேண்­டும்.

அவ்­வ­கை­யில் திருக்­கு­றள் பல­வித படைப்­பு­க­ளுக்கு அடி­நா­த­மாக உள்­ள­து எனக் குறிப்பிட்ட கவிஞர் யுகபாரதி, அதனை பல எடுத்­துக்­காட்டுகளு­ட­னும் எடுத்­து­ரைத்­தார்.

கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளு மன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஆண்டுதோறும் இச்சங்கத்தினரால் வழங்கப்படும் 'ஜமாலியன் விருது' சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது.

தமிழாசிரியரான இவர் தமிழ் மொழிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் ஆற்றிய தொண்டுகளை அங்கீகரிக்கும் வகையில் இவ் விருதினை அவருக்கு வழங்கிய தாக கூறினார் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் மு.அ. காதர்.

மேலும் கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இச்சங்கத்தின் 126வது நிகழ்வு இதுவென்றும் தமிழ் மொழிக்காகவும் இளையர் சமூகத்தின் கல்வி நலனுக்காகவும் ஒன்றிணைந்த சமூக வளர்ச்சிக்காகவும் இச்சங்கம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர் தெரிவித்தார்.

இத்துடன் இந்நிகழ்வில் 2022ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றதைப் பாராட்டும் வண்ணம் கிரசெண்ட் பெண்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவி அமீரா ஃபர் ஹானாவிற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பங்குகொண்ட மென்பொருள் பொறியாளரான ஷர்மிளா சாமிநாதன், 34, "கும்கி திரைப்படத்தின் உச்சக்கட்ட இறுதிக்காட்சி எவ்வாறு ஒரு திருக்குறளிலிருந்து பிறந்தது என்பதை கவிஞர் விளக்கியது ஆச்சரியமளித்தது.

"அதேபோல் பல தமிழ்மொழி படைப்பிற்கும் பின்னால் திருக் குறள் இருக்கிறது என்று கவிஞர் கூறியது அந்நூல் மேல் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருமுறையேனும் முழுவதுமாக படித்துமுடிக்க எண்ணுகிறேன்," என்று கூறினார்.

பாடலாசிரியர் யுகபாரதியுடன் மாணவர்கள், பெற்றோர் சந்திப்பு

ரச்­சனா வேலா­யு­தம்

திரைப்­ப­டப் பாடல்­கள் மூலம் தமிழ்மொழியை மாண­வர்­க­ளி­டையே வளர்க்­கும் நோக்­கில் திரைப்­ப­டப் பாடலாசி­ரி­யர் யுக­பா­ர­தி­யு­டன் சந்­திப்பு ஒன்றுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. 'மாண­வர்­க­ளு­டன் கவி­ஞர் யுக­பா­ரதி' என்ற நிகழ்ச்­சிக்கு ஜமால் முஹம்­மது கல்­லூரி முன்­னாள் மாண­வர்­கள் சங்­கம் இம்மாதம் 23ஆம் தேதியன்று ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

தேசிய நூல­கத்­தின் 'தி போட்' வளா­கத்­தில் நடந்­தே­றிய இந்­நி­கழ்ச்­சி­யில் மாண­வர்­கள் உட்பட பெற்­றோ­ரும் பொது மக்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

தமிழ் திரைப்­ப­டப் பாடல் களின் மூலம் தமிழ்ச் சொற்­களின் பொருளை எடுத்­து உரைத்த­து­டன் கவி­ஞர் யுக­பாரதி தமது திரை இசை அனு­ப­வங்­களை­யும் வந்தவர்­களு­டன் பகிர்ந்­து­கொண்­டார். அவர் எழு­திய பாடல்­க­ளைச் சுட்டிக்காட்டி, குறிப்­பாக ஒரு­சில சொற்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­தற்­கான தமது நோக்­கத்­தை­யும் விளக்­கி­னார் அவர்.

கிட்டத்தட்ட 1,000 திரைப்படப் பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ள யுகபாரதி, தமது அனுபவங்கள் பற்றியும் எழுத்து மீதான நாட்டம் பற்றியும் பேசினார்.

'சந்­தி­ர­முகி' திரைப்­ப­டத்­தில் இருந்து "கொஞ்ச நேரம்", 'குருவி' திரைப்­ப­டத்­தி­லி­ருந்து "தேன், தேன், தேன்", 'கத்தி' திரைப்­ப­டத்­தி­லி­ருந்து "ஆத்தி என நீ" போன்ற புகழ்­பெற்ற பாடல்­க­ளுக்கு வரி­களை இயற்றி­யுள்ள யுக­பா­ரதி, தமிழ் மீதான நாட்­டம் பற்றி வருகை யாளர்களுடன் பகிர்ந்து கொண்டு, கேள்வி பதில் அங்­கம் வழி கலந்­து­ரை­யா­டி­னார்.

"மாண­வர்­க­ளுக்­காக முன்­னாள் மாண­வர்­கள் ஏற்­பாடு செய்த இந்த நிகழ்ச்சி தமி­ழை­யும் அதன் அழ­கை­யும் அடுத்த தலை­மு­றைக்­குக் கொண்டு செல்­லும் நோக்­கத்தை நிறை­வேற்­றி­யது," என சங்­கத்­தைச் சேர்ந்த டாக்­டர் எம். ஏ. காதர் கூறி­னார்.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் திரு சு. மனோ­க­ரன் கவி­ஞர் யுக­பா­ர­திக்­குப் பொன்­னாடை அணி­வித்­தார்.

தேசிய நூலக வாரி­யம், வளர்­த­மிழ் இயக்­கத்தின் ஆத­ர­வு­டன் இந்­நிகழ்ச்சி நடை­பெற்­றது.

தமது திரையிசை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட யுக­பா­ர­தி­.

படம்: ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்