'தொனிக்கு ஏற்ப சொற்களுக்கு வெவ்வேறு பொருள் கொடுக்கும் மொழி தமிழ்'

'தொனிக்கு ஏற்ப சொற்களுக்கு வெவ்வேறு பொருள் கொடுக்கும் மொழி தமிழ்'

2 mins read
71154bc3-fbbd-4845-87ee-3cd46532d104
-

ரச்­சனா வேலா­யு­தம்

'இன்­பத் தமி­ழும் இளைய தலை­மு­றை­யும் ஓர் அழ­கி­யல் பார்வை' என்ற தலைப்­பில் தமிழ் மீதான நாட்­டத்தை இளை­யர்­க­ளு­டன் பகிர்ந்­த­தோடு, மொழி­யின் சிறப்பு­களை­யும் எடுத்­து­ரைத்­தார் சிறப்புப் பேச்­சா­ளர் திரு­மதி கவிதா ஜவ­ஹர்.

தமி­ழ­கத்­தின் பிர­பல பட்­டி­மன்­றப் பேச்­சா­ள­ரான அவர், "தொனிக்கு ஏற்ப சொற்­களுக்கு வெவ்­வேறு பொருள் கொடுக்­கும் மொழி தமிழ்" என்று கூறி, தமி­ழின் நுணுக்­கங்­க­ளை­யும் அழ­கி­ய­லை­யும் போற்றி ஒரு மணி நேரத்­துக்­கும் மேலாக பேசி­னார்.

தமிழ்­மொழி விழாவை முன்­னிட்டு, வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வு­டன் இந்­திய முஸ்­லிம் பேரவை இந்த நிகழ்ச்­சியை ஏப்ரல் 28ஆம் தேதி உம­றுப்­புலவர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

போட்­டி­களில் வெற்­றி­பெற்ற மாண­வர்­களுக்கு நிகழ்ச்­சி­யில் பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன.

'செயற்கை நுண்­ண­றி­வும் தமிழும் இணைய முடி­யுமா?' என்ற கலந்­து­ரை­யா­ட­லு­டன், 'சேட்­ஜி­பிடி' செயற்கை நுண்­ண­றி­வைத் தமி­ழில் பயன்­படுத்த முடி­யுமா என்று நகைச்­சு­வை­யான முறை­யில் ஆராய்ந்­த­னர் இளை­யர்­கள் ரசீத், அ­ஃபிஃபா ஷாஃபானா ஆகியோர்.

'சேட்­ஜி­பிடி'யை கொண்டு தமிழில் கவிதை எழுத முயற்சி செய்த அவர்­கள், பல நகைச்­சு­வை­யான சவால்­களை எதிர்­கொண்­ட­னர். செயற்கை நுண்­ணறிவு, பொருள் இல்­லாத ஒரு கவி­தை எழு­திய நிலை­யில், தர­மான கவி­தையை எப்­படி எழு­து­வது என்று எடுத்துக்­காட்­டி­னார் அ­ஃபிஃபா.

'தமிழே! பேர­ழகே!' என்ற அங்­கத்­தில் அன்­றா­டம் புழங்­கும் தமிழ்ச் சொற்­களில் உள்ள வட­மொழிக் கலப்பை சுட்­டிக்­காட்டி அதற்­கான சரி­யான தமிழ் வார்த்­தைளை எடுத்­துக் கூறி­னர் பள்ளி மாண­வர்­கள் சிலர்.

சிங்­கப்­பூர் தேசிய மருத்­து­வ­மனை­யில் மருத்­து­வ­ராக இருக்­கும் டாக்­டர் முஹம்­மது ஷமீர், சித்த மருத்­து­வம் பற்றிப் பேசி­னார். அதன் நன்­மை­கள், முக்­கி­யத்­து­வம் பற்றி எடுத்­துக் கூறி­னார் டாக்­டர் ஷமீர்.

சிங்­கப்­பூர் தமிழ் இளை­யர்­களின் சாத­னை­களை­யும் முயற்சி­களை­யும் வர­வேற்­பு­ரை­யில் பாராட்­டிப் பேசி­னார் இந்­திய முஸ்­லிம் லீக் தலை­வர் புதிய நிலா மு.ஜஹாங்கீர்.

இது­போன்ற நிகழ்ச்­சி­களில் மாண­வர்­கள் அவர்­க­ளா­கவே முன்­வந்து தமிழ்­மொ­ழி­யின் சிறப்பைப் பற்­றிப் பேசு­வது சிறந்­தது என்று இந்­திய முஸ்­லிம் பேர­வைத் தலை­வர் அ.முஹம்­மது பிலால் கூறி­னார்.

"தமி­ழில் எழுதி, படித்து, வாசித்து, தொடர்ந்து உரை­யா­டி­னால்­தான் அது காலத்­திற்­கும் நிலைக்­கும். எண்­ணத்­துக்­கும் எழுத்­துக்­கும் இடையே இருக்­கும் தொடர்­பி­னால் சுய­மாக தமி­ழில் யோசித்து எழு­தும்­போது, சிந்­த­னையும் மேம்­படும் என்ற நம்­பிக்­கை­யால் இது­போன்ற நிகழ்ச்­சி­கள் இளை­யர்­களுக்கு தொடர்ந்து நடத்­தப்­படும்," என்று பிலால் குறிப்­பிட்­டார்.