கலைஞர்களுக்கான புதுமேடை

கலைஞர்களுக்கான புதுமேடை

2 mins read
d3a4f61b-672a-4c0e-b75b-f78542708176
-

அனுஷா செல்­வ­மணி

உள்­ளூர், வெளி­நாட்­டுக் கலை­ஞர்­கள் தங்­க­ளின் கலைத்­தி­ற­மை­களை வெளிப்­ப­டுத்த வாய்ப்­பும் இட­மும் அளிக்­கிறது புதி­தாக வலம்­வ­ரும் 'அர்ப்­ப­ணம் எக்ஸ்­பீரி­யன்­சஸ்' என்ற சமூ­கவெளி.

கலை­ஞர்­களும் கலை­மேல் மிகுந்த ஆர்­வம் கொண்­ட­வர்­களும் இவ்­வி­டத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக விண்­ணப்­பிக்­க­லாம். பன்­மு­கத்­தன்­மை­யும் தனிச்­சி­றப்­பும் மிக்க நம் தமி­ழர் கலை­களில் ஆடல், பாடல், இசை எனப் பல­வற்­றை­யும் மேடை­யேற்­றும் வாய்ப்பை இவ்­வி­டம் வழங்­கும்.

பிரம்­மாஸ்த்ரா இசைக் குழு­வின் புல்­லாங்­கு­ழல் கலை­ஞர், புத்­தாக்­கத் தயா­ரிப்­பா­ளர், இசை­ அமைப்­பா­ளர் எனப் பல பரி­மா­ணங்­கள் கொண்ட திரு நிரஞ்சன் பாண்­டி­யன், அர்ப்­ப­ணம் எக்ஸ்­பீரி­யன்­ச­சு­டன் கைகோத்து 'அப் கிளோஸ் வித் பிரம்­மாஸ்த்ரா' என்ற இசை நிகழ்ச்­சியை அண்­மை­யில் மேடை­யேற்­றி­னார்.

நிகழ்ச்­சிக்கு மேலும் வலு­சேர்க்­கும் வித­மாக நவீன யுகத்­தி­னர் ரசிக்­கும் திரைப்­ப­டப் பின்­ன­ணிப் பாட­க­ரும் எட்­டா­வது முறை­யாக நடத்­தப்­பட்ட 'சூப்­பர் சிங்­கர்' இசை நிகழ்ச்­சி­யின் வெற்­றி­யா­ள­ரு­மான ஸ்ரீதர் சேனா வர­வ­ழைக்­கப்­பட்­டார்.

'பொடி அண்ட் பொரி­யல்' உண­வ­கத்­தின் மேல்­த­ளத்­தில் அமைந்­துள்ள புதிய அரங்­கில் நிகழ்ச்­சி­யைக் காண மாலை வேளை­யில் கிட்­டத்­தட்ட 30 பேர் கூடி­னர். நிகழ்ச்­சி­யில் தமது இனி­மை­யான குர­லில் பார்­வை­யா­ளர்­களை இசை மழை­யில் நனைய வைத்­தார் திரு ஸ்ரீதர்.

இதற்­கு­முன் மூன்று முறை சிங்­கப்­பூ­ருக்கு வருகைபுரிந்­தி­ருந்­தா­லும் உன்­னத நோக்­கத்­திற்­காக இம்­முறை வந்­துள்­ளதை எண்ணி நெகிழ்­வ­தா­க அவர் குறிப்­பிட்­டார்.

கலை­ஞர்­க­ளுக்கு அமைக்­கப்­பட்ட ஒரு மேடை­யாக மட்­டு­மல்­லாது, உண­வ­கத்­திற்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­கள் கலை­ஞர்­களின் திற­மை­க­ளைக் கண்டு, கேட்டு இன்­புறவும் உத­வும் என்று அர்ப்­பணத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி கிரண் ராக­வன் உறு­தி­யா­கக் கூறி­னார்.

உள்­ளூர்க் கலை­ஞர்­க­ளான சாய் விக்­னேஷ், மீனாட்சி ஜோதிஷ், அழ­க­னந்தா கிரி­தர் ஆகி­யோ­ரும் பிற இனத்­தைச் சேர்ந்த உள்­ளூர் இசைக் கலை­ஞர்­களும் நிகழ்ச்­சி­யில் தங்­க­ளது ஆற்­றலை வெளிப்­ப­டுத்­தி­னர்.

ஒன்­றரை மணி­நேர நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­வர்­கள் கலை­ஞர்­க­ளின் இசை விருந்­தைக் கேட்டு மகிழ்ந்­த­து­டன் நிகழ்ச்­சி­யின் இறு­தி­யில் வழங்­கப்­பட்ட விருந்­தைச் சுவைத்­து­விட்டு கலை­ஞர்­க­ளு­டன் உரை­யா­டு­வ­தற்­கான அரிய வாய்ப்­பை­யும் பெற்­ற­னர்.

"கலை­கள்­வழி நம் பண்­பாட்­டைக் கட்­டிக்­காப்­பது ஒரு­பு­றம் இருந்­தா­லும் இந்­தி­யா­வை­யும் சிங்­கப்­பூ­ரை­யும் இணைக்­கும் பால­மாக இந்­தக் கலை மேடை அமைய வேண்­டும் என்­பது அர்ப்­ப­ணத்­தின் முக்­கிய இலக்கு," என்று திரு கிரண் ராக­வன் கூறி­னார்.