தமிழர் வரலாறு போற்றும் சமூக ஊடகக் காணொளித்தொடர்

தமிழர் வரலாறு போற்றும் சமூக ஊடகக் காணொளித்தொடர்

1 mins read

தமிழர் மர­பு குறித்து அறி­யப்­படாத, ஆர்வமூட்டும் பல வர­லாற்­றுத் தக­வல்­களை எளிய முறை­யில் இளை­யர்­க­ளி­டம் கொண்­டு­செல்­லும் முயற்­சி­யா­கக் காணொ­ளிக் குறுந்­தொ­டர் ஒன்­றைத் தமி­ழர் பேர­வை­யின் இளை­ய­ரணி உரு­வாக்­கி­யுள்­ளது.

அக்­கா­ணொ­ளி­களில் இளை­ய­ரணி உறுப்­பி­னர்­கள் உரை­யா­டல்­வழி தமிழர் மரபைப் பற்­றிய பல முக்­கி­யத் தக­வல்­களை எடுத்­து­ரைத்­துள்­ள­னர். அக்­கா­ணொ­ளி­களை தமி­ழர் பேரவை இளை­ய­ர் அ­ணி­யின் இன்ஸ்­ட­கி­ராம், டிக்­டாக் பக்­கங்­களில் காண­லாம்.

இது­கு­றித்­துக் கருத்­து­ரைத்த சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மைய இளை­யர் பிரி­வின் தலை­வர் செம்­பி­யன் சோம­சுந்­த­ரம், 30, "சமூக ஊட­க­மும் தொழில்­நுட்­ப­மும் இளை­யர்­க­ளி­டம் தமிழ்­மொ­ழி­யை­யும் தமிழ் மர­பை­யும் கொண்டு சேர்ப்­ப­தற்­கான கரு­வி­கள். அவற்­றைப் பயன்­ப­டுத்தி இளை­யர்­களே இளை­யர்­க­ளுக்­காக நம் வர­லாற்றை முன்­னெ­டுத்­துச் செல்­லும் முயற்­சியே இது," என்று கூறி­னார்.

காணொ­ளி­க­ளுக்­கான தர­வு­களை சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையம் வழங்கி உத­வி­யுள்­ளது.

"இக்­கால இளை­யர்­க­ளின் பர­ப­ரப்­பான வாழ்க்­கை­மு­றை­யில் எங்­க­ளு­டைய கவ­னத்­தைச் சித­ற­டிக்­கா­வண்­ணம் குறைந்த நேரத்­திற்­குள் கருத்­து­க­ளைக் காணொளி வாயி­லாக எடுத்­துச்­செல்­கி­றோம். இம்­மு­யற்­சிக்­குக் கிடைத்த வர­வேற்பு பேரூக்கம் அளிக்கிறது," என்று தமி­ழர் பேரவை இளை­ய­ர­ணி­யின் திட்­டத் தலை­வர் அர­விந்த் ஜெயக்­கு­மார், 21, கூறி­னார்.

காணொளி தயா­ரிப்­புக் குழு­வி­ல் இடம்பெற்றுள்ள ஸ்ரீசக்தி நெடுஞ்­செ­ழி­யன், 21, "இளை­யர்­க­ளுக்குப் பய­னுள்ள கருத்­து­களை எளிய முறை­யில் விளக்­கும் இம்­மு­யற்­சி­யில் ஈடு­ப­டு­வது சிறந்­த­தோர் அனு­ப­வ­ம். நம் வர­லாறு பற்றி மேலும் தெரிந்­து­கொள்ள வேண்­டும் என ஊக்­கம் அளிக்­கிறது," என்றார்.

செய்தி: மோனலிசா