வேற்றினத்தாரையும் ஈர்த்த 'சங்கமம்'

2 mins read
06548128-32dd-4259-b3da-7dfd272a8aa0
-

திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் சீன, மலாய் மாணவர்கள் பங்கேற்பு

ஆ. விஷ்ணு வர்­தினி

வேற்­றி­னத்­தா­ரை­யும் வர­வேற்று தமி­ழர்­க­ளு­டன் ஒன்­றி­ணைத்து தமிழ்­மொ­ழி­யை­யும் பண்­பாட்­டை­யும் கொண்­டா­டி­யது 'சங்­க­மம்' மேடை நிகழ்ச்சி. ராஃபிள்ஸ் கல்­விக்­ க­ழக இந்­தி­யப் பண்­பாட்டு மன்­றத்­தின் படைப்­பான இது, தமிழ்­மொழி மாதத்தை முன்­னிட்டு கிட்டத்தட்ட 300 பேரை இணைத்­தது.

கடந்த மாதம் 28ஆம் தேதி ராஃபிள்ஸ் கல்­விக் கழக வளா­கத்­தில் நடந்­தே­றிய 'சங்­க­மம்', மூன்­றாண்­டு­க­ளுக்­குப் பின்­னர் மக்­களை நேர­டி­யாக வர­வேற்­றது. ஏறத்­தாழ பத்­தாண்­டு­க­ளா­கத் தொடர்ந்து நடத்­தப்­பட்டு வரு­கிறது 'சங்­க­மம்' எனும் இந்­தச் சிறப்பு வரு­டாந்­திர படைப்பு. இவ்­வாண்டு புதி­ய­தொரு பரி­மா­ணத்­து­டன் அது அரங்­கே­றி­யது.

உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளுக்­காக கலப்பு நடன, சொல்­லி­யல் (ராப்) போட்­டி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன.

குறிப்­பாக, வேற்­று­மொ­ழி­யி­ன­ருக்­கான திருக்­கு­றள் ஒப்­பித்­தல் போட்­டி­யில் சீனர்­களும் மலாய் இனத்­த­வரும் பங்­கேற்­ற­னர்.

ஏறத்­தாழ 40 மாண­வர்­க­ளின் கூட்­டு­மு­யற்­சி­யான சங்­க­மம், வளர்ந்­து­வ­ரும் கலை­ஞர்­க­ளுக்­குத் தளம் அமைத்­துத் தந்தது. வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு விரு­து­களும் வழங்­கப்­பட்­டன.

மொத்­தம் பத்து உயர்­நி­லைப் பள்­ளி­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் இப்­போட்­டி­களில் பங்­கு­கொண்­ட­னர். இப்­போட்­டி­க­ளுக்கு வந்­து­சேர்ந்த படைப்­பு­களில் மிகச் சிறந்த சில, ராஃபிள்ஸ் கல்­விக்­க­ழக மாண­வர்­க­ளின் கலைப் படைப்­பு­க­ளு­டன் சங்­க­மம் நிகழ்­வின்­போது மேடை­யே­றின; பார்­வை­யா­ளர்­களை ஆர­வா­ரத்துடன் ரசிக்­க வைத்தன. உள்­ளூர்க் கலை­ஞர்­க­ளான பஹா­ரு­தினும் 'ஃபுலோ' பிர­சாத்தும் கலந்­து­கொண்டு சொல்­லி­யல் போட்­டி­யா­ளர்­களை ஊக்­கு­வித்­த­னர்.

தமி­ழரல்­லா­தோ­ரை­யும் மனத்­திற்கொண்டே சங்­க­மம் நிகழ்வு அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்தது என்றார் இந்­தியப் பண்­பாட்டு மன்­றத்­தின் தலை­வர் சுவிதா சபே­சன், 17. நிகழ்வு முழுக்க ஆங்­கி­லத்­தி­லும் தமி­ழி­லும் துணையுரை இருந்­ததே இதற்கு முக்­கி­யச் சான்று.

இந்­தி­யப் பண்­பாட்டு மன்­றம் தொடர்ந்து இது­போன்ற புது­மை­யான நிகழ்­வு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யும் முனைப்­பில் உள்­ள­தாக துணைத்­த­லை­வர் முகேஷ்­மித்­ரன் சாமித்­துரை கூறி­னார்.

சங்­க­மத்­தின் பெரிய வெற்­றி, வேற்­றின மாண­வர்­க­ளை­யும் தமிழ்­மொ­ழி­யில் ஈடு­ப­டுத்தி, அதன் அழ­கைப் பாராட்­டச் செய்­ததே என்­பது அவ­ரின் நம்­பிக்கை.

"வகுப்­ப­றை­யைத் தாண்டி தமி­ழு­டன் தொடர்­பில் இருக்க இது­போன்ற முயற்­சி­கள் மாண­வர்­களுக்­குக் கைகொ­டுக்­கின்­றன. மாண­வர்­க­ளின் ஆளுமை, தலை­மைத்­து­வத் திறன்­களை இந்­த நிகழ்வு பெரிதும் வெளிக்­கொ­ணர்ந்­துள்­ளது," என்­றார் அவர்.

நுழை­வுச்­சீட்டு விற்­ப­னைவழி ஈட்­டப்­பட்ட 3,000 வெள்ளி தேசிய சீறு­நீ­ரக அற­நி­று­வ­னத்­துக்கு நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்­டது.