பங்ளாதேஷில் எளியோருக்கு பள்ளிக்கூடம் எழுப்பும் வினிதா

மோன­லிசா

கல்வி அனை­வ­ருக்­கும் எளி­தில் கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கு­டன் புது­மை­யான பள்­ளிக்­கூ­டம் ஒன்றை பங்­ளா­தே­ஷின் பாரு­ளியா பாரா கிரா­மத்­தில் கட்டி வரு­கி­றார் சிங்­கப்­பூ­ர­ரான வினிதா செல்­வம், 27.

“பெரும்­பா­லான பள்­ளி­கள் போல் பாடத்­திட்­டங்­களும் தேர்­வு­மு­றை­களும் இந்­தப் பள்­ளிக்­கூ­டத்­தில் இருக்­காது. வயது பேத­மின்றி பள்­ளிக்கு வரு­வோர் தாமும் கற்று, தமக்­குத் தெரிந்­த­வற்­றைப் பிற­ருக்­கும் கற்­பிக்­கும் ஒரு தள­மாக இப்­பள்­ளியை அமைக்க முயல்­கி­றோம்,” என்று கூறி­னார் வினிதா.

தற்­ச­ம­யம் சிங்­கப்­பூ­ரில் அர­சாங்க ஊழி­ய­ரா­கப் பணி­யாற்­றி­வ­ரும் அவர், இளம் வய­தி­லி­ருந்தே பொரு­ளா­தார ரீதி­யா­க­வும் மன­த­ள­வி­லும் பல நெருக்­க­டி­களை அன்­றா­டம் சந்­தித்து வளர்ந்­தார்.

வினி­தா­வின் தாயார் தம் வாழ்­நா­ளின் பெரும்­ப­கு­தி­யைத் துப்­பு­ர­வுத் தொழி­லா­ளி­யா­கவே உழைத்­துக் கழித்­து­விட்­டார். கல்­வி­தான் ஒவ்­வொரு மனி­த­ரும் தன்­னு­டைய வாழ்­வில் சம்­பா­திக்க வேண்­டிய மிகப்­பெ­ரிய சொத்து எனத் தாயார் போதித்­தது, பதின்ம வய­தி­லி­ருந்த வினி­தா­வின் மன­தில் ஆழப் பதிந்­து­விட்­டது. வறி­ய­வ­ரின் கல்­விக்­காக தம்­மால் இயன்­ற­தைச் செய்­திட வேண்­டும் என்ற கனவு அவ­ரின் மன­தில் வேரூன்­றி­யது.

குடும்­பச் சூழல் கார­ண­மாக 17 வய­தி­ல் வேலைக்­குச் சென்ற வினிதா, தம்­மு­டைய வரு­மா­னத்­தின் ஒரு பகு­தி­யைத் தமது கன­விற்­காக சேமித்து வந்­தார். ஓய்வு நேரத்­தைத் தொண்­டூ­ழி­யத்­தில் செல­விட்டு வந்த வினிதா, சக தொண்­டூ­ழி­ய­ராக இருந்த ஃபாருக் இஷாக்­கின் நட்­பைப் பெற்­றார். அந்த நட்பு தமது கனவு நன­வாக அடித்­த­ள­மாக அமைந்­தது என்று பகிர்ந்­தார்.

அச்­ச­ம­யம் சிங்­கப்­பூர்த் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மருத்­து­வப் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்­டிருந்து வினி­தா­வின் நண்­பர் ஃபாருக், பங்­ளா­தேஷ் நாட்­ட­வர். மாண­வர் அனு­ம­தி­யில் சிங்­கப்­பூ­ரில் படித்­து­வந்த ஃபாருக், தமது ஊரில் விழிப்­பு­ணர்­வற்ற நிலை­யில் அடிப்­படை கல்­வி­ய­றி­வு­கூட கிடைக்­கா­மல் வாடும் பிள்­ளை­களின் நிலையை வினி­தா­வி­டம் எடுத்­துக்­கூ­றி­னார்.

பள்­ளிக் கட்­ட­ணத்­தைச் செலுத்த முடி­யா­மல் பிள்­ளை­களின் கல்­வி­யைத் தொடக்க நிலை­யி­லேயே பெற்­றோர் பலர் நிறுத்­தி­வி­டு­வ­தும் பெண் பிள்­ளை­க­ளுக்கு இளம் வய­தி­லேயே திரு­ம­ணம் முடித்­து­வி­டு­வ­தும் அவ்­வூ­ரின் வழக்­கம் என்­றார் ஃபாருக்.

அந்தப் பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லம் கேள்­விக்­கு­றி­யா­கி­வி­டக் கூடாது என்ற எண்­ணம் வினி­தா­விற்கு மேலோங்­கவே தொடர்ந்து பல ஆண்­டு­கள் பல்­வே­று­வித பணி­களை மேற்­கொண்டு பணத்­தைச் சேமித்து வந்­தார். இதற்­குள் ஃபாருக் தமது கல்­வியை முடித்து மருத்­து­வச் சேவை­யைத் தொடர சொந்த ஊருக்குத் திரும்­பி­னார்.

2022ஆம் ஆண்டு தம்­மு­டைய நண்­பர் உத­வி­யு­டன் பாரு­ளியா பாரா கிரா­மத்­தில் ஏறத்­தாழ 6,500 சது­ரடி பரப்­ப­ள­வில் நிலம் ஒன்றை வாங்­கி­னார் வினிதா. தற்­போது ஈர­டுக்கு மாடிப் பள்­ளிக்­கூ­டம் ஒன்று அங்கு கட்­டப்­பட்டு வரு­கிறது. அடுத்த ஆண்டு இறு­திக்­குள் கட்­டி­மு­டிக்­கப்­படும் இப்­பள்­ளியை, கிராம மக்­கள் வெகு­வாக வர­வேற்­ப­தாகக் கூறி­னார் நரம்­பி­யல் நிபு­ண­ரான ஃபாருக் இஷாக், 33. இவர் தம் குடும்­பத்­து­டன் இணைந்து இப்­பள்­ளி­யின் கட்­டு­மா­னப் பணி­களை மேற்­பார்­வை­யி­டு­கி­றார்.

எதிர்­கா­லத்­தில் தொண்­டூ­ழிய ஆசி­ரி­யர்­க­ளின் உத­வி­யு­டன் கட்­ட­ணம் பெறா­மல் இப்­பள்­ளியை இயக்கத் திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­ வினிதா தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!