அழகுப் பெண்ணாய் மிளிர வயது ஒரு தடையல்ல

கரு­ணா­நிதி துர்கா

‘மிஸ் சிங்­கப்­பூர்’, ‘மிஸஸ் சிங்­கப்­பூர்’ போன்ற போட்­டி­களில் இந்­திய அழ­கி­கள் தன்­னம்­பிக்­கை­யு­டன் பங்­கேற்று பட்­டங்­கள் வென்று வரு­கின்­ற­னர். இந்த அழ­கிப் பட்­டி­ய­லில் புதி­தாக இணைந்­துள்ள 40 வயது கோமதி ஜெயக்­கு­மார், ‘மிசஸ் சிங்­கப்­பூர் பிளே­னட்’ பட்­டத்தை வென்­றுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரி­லுள்ள இந்­திய வம்­சா­வளி மக்­க­ளுக்­கான அனைத்­து­லக அமைப்­பின் (GOPIO Singapore) முதல் பெண்­கள் பிரி­வுச் சம்­மே­ள­னத்தை முன்­னெ­டுத்­துச் சென்­ற­வர் கோமதி.

இந்த அமைப்­பின் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட செயற்­குழு உறுப்­பி­ன­ராக இவர் உள்­ளார்.

ஒற்­றைப் பெற்­றோ­ராக தம்­மு­டைய 11 வயது மகனை வளர்த்­து­வ­ரும் இவர், பல தடை­க­ளைக் கடந்­துள்­ளார்.

அழ­குக் கலை­யில் ஆர்­வ­மு­டைய கோமதி 20 வய­தாக இருந்­த­போது அத்­து­றைக்­குள் நுழை­வ­தற்­கான வாய்ப்­பு­கள் பல தேடி­வந்­தன. ஆயி­னும் படிப்­பி­லும் வேலை­யி­லும் கவ­னம் செலுத்­தி­ய­தால் அந்த வாய்ப்­பு­களை நழு­வ­விட்­டார் அவர்.

பின்­னர், தமது 29வது வய­தில் மண­வி­லக்கு ஆனதை அடுத்து குழந்தை வளர்ப்­பு­டன் பல பொறுப்­பு­க­ளை­யும் அவர் சுமக்­க­வேண்­டி­யி­ருந்­தது.

இடை­யில் தமக்கு நெருக்­க­மான சிலரை இழக்­க­வும் நேரிட்­டது. பல சவால்­க­ளைக் கடந்து இன்று தன்­னம்­பிக்­கை­யு­டன் நடை­போ­டு­கி­றார் கோமதி.

அழ­கிப் போட்­டி­யின் ஓர் அங்­க­மாக ஒவ்­வொரு போட்­டி­யா­ள­ரும் ‘365 புற்­று­நோய் தடுப்பு சங்­கத்­திற்கு’ நிதி திரட்­டி­னர்.

இச்­சங்­கத்­திற்­காக கோமதி கிட்­டத்­தட்ட $8,000 திரட்­டி­னார்.

சங்­கத்­தின் தொண்­டூ­ழி­ய­ரா­கச் சேர மேலும் அதி­க­மா­னோரை ஊக்­கு­விக்­க­வும் விரும்­பு­கி­றார் அவர். முதன்­மு­றை­யாக அழ­கிப் போட்­டி­யில் கலந்­து­கொண்ட அவர், வெற்­றி­யும் பெற்­றுள்­ளார்.

“வயதை ஒரு தடை­யா­கக் கரு­த­வேண்­டாம். வாழ்க்­கை­யில் சவால்­க­ளைச் சந்­தித்து வரும் பெண்­க­ளுக்கு நான் ஒரு முன்­னு­தா­ர­ண­மாக இருக்க விரும்­பு­கி­றேன். மன­தில் தன்­னம்­பிக்­கை­யும் உறு­தி­யும் இருந்­தால் நினைத்­த­தைச் சாதிக்­க­லாம்,” என்று கோமதி கூறி­னார்.

மெக்­சி­கோ­வில் நடக்­க­வி­ருக்­கும் ‘மிஸஸ் பிளே­னட்’ அழ­கிப் போட்­டி­யில் சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­தித்து கலந்­து­கொள்­ள­வி­ருக்­கி­றார் கோமதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!