ஊடகக் கலைஞரின் ‘ஃ’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

அனுஷா செல்­வ­மணி

உள்­ளூர் தமிழ் ஊடக உல­கில் ‘சவுண்ட்’ என்று அழைக்­கப்­படும் ஜீ வே சௌந்­த­ர­ரா­ஜன் (படம்), தமிழ்­மொழி மீது தாம் கொண்­டுள்ள ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­தும் வித­மாக, ‘ஃ’ என்ற பெய­ரில் எட்டு கதை­கள் அடங்­கிய சிறு­கதைத் தொகுப்பை வெளி­யிட்­டுள்­ளார்.

தொடக்­கத்­தில் ‘எழில்’ என்று தலைப்­பி­டப்­பட்ட இப்­புத்­த­கம், பின்­னர் தம்­மு­டைய நண்­ப­ரும் மறைந்த கலை­ஞ­ரு­மான ஆனந்தக்­கண்­ணனை நினை­வு­கூ­ரும் வகை­யில் ‘ஃ’ என்­றா­னது.

தமது வாழ்க்­கைப் பய­ணத்­தைப் புத்­த­க­மாக்கி அனைத்து வய­தி­ன­ரும் படித்­துப் புரிந்­து­கொள்­ளும் வண்­ணம் உணர்­வு­பூர்­வ­மாக எழு­தப்­பட்­டுள்­ள­தாக திரு சௌந்­த­ர­ரா­ஜன் கூறி­னார்.

ஒரு கலை­ஞன் வாசித்­து­விட்டு தன்­னை­யும் அத­னு­டன் தொடர்­புப்­ப­டுத்­திக்­கொள்­ளும் வித­மாக எளிய பாணி­யில் கற்­பனை கலந்த தொகுப்­பாக இந்­தப் புத்­த­கம் அமைந்­துள்­ளது என்­றும் தமிழ் மொழிக்கு இந்தப் புத்தகம் சமர்ப்­ப­ணம் என்­றும் அவர் கூறி­னார்.

திரு சௌந்­த­ர­ரா­ஜ­னின் கதை எழு­தும் கன­வுப்­ப­ய­ணம் 12 ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே தொடங்­கி­விட்­டது.

இம்­மா­தம் மே 7ஆம் தேதி தமது 50வது பிறந்­த­நாளை முன்­னிட்டு புத்­த­கத்தை இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தின் வளா­கத்­தில் வெளி­யிட்­டார் அவர்.

2014ல் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பெர்த் நக­ரத்­திற்கு மனை­வி­யு­டன் குடி­பெ­யர்ந்த திரு சௌந்­த­ர­ரா­ஜன், அவ்­வப்­போது சிங்­கப்­பூ­ருக்கு வந்து தமிழ்­மொழி சார்ந்த நட­வ­டிக்­கை­களில் தம்மை ஈடு­ப­டுத்­திக்­கொள்­வதை வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார்.

சிறு­க­தை­களை எழுதி முடிக்க அவ­ருக்கு நான்கு ஆண்­டு­கள் ஆன­போ­தும் தற்­போது தமக்கு சிறப்­பான ஒரு நாளில் தமது படைப்பை வாச­கர் உல­கத்­திற்கு அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தில் பெருமை கொள்­வ­தாக திரு சௌந்­த­ர­ரா­ஜன் குறிப்­பிட்­டார்.

புத்­தக வெளி­யீட்டு விழா வின் சிறப்பு விருந்­தி­ன­ராக இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தின் தலைமை நிர்­வாகி பவானி தாஸ் கலந்து கொண்­டார்.

திரு சௌந்­த­ர­ரா­ஜ­னின் குடும்ப உறுப்­பி­னர்­களும் நெருங்­கிய நண்­பர்­களும் நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்­த­னர்.

“கவி­தை­போல சுருக்­க­மான வாக்­கி­யங்­க­ளால் அனை­வ­ரும் எளிதில் புரிந்து உண­ரும்­படி சௌந்­த­ர­ரா­ஜன் கதை­களை எழு­தி­யுள்­ளார். மூன்று கதை­களைப் படித்­து­விட்­டேன். மற்ற கதை­க­ளை­யும் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்,” என்று கூறி­னார் ஊட­கத்­து­றை­யைச் சேரந்த நடிகை சக்தி.

புத்­த­கத்­தின் விலை $15.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!