இளையர்களை ஈர்க்கும் ‘மயக்கம்’

ஆ. விஷ்ணு வர்­தினி

ஷாஃபிக் சையது மலாய் மொழி­யைத் தாய்­மொ­ழி­யா­கக் கொண்­டி­ருந்­தா­லும் சிறு­வ­ய­தி­லி­ருந்தே தமி­ழின்­பால்­தான் அவ­ருக்கு ஆர்­வம் அதி­கம். இசைக் கலை­ஞ­ராக வலம்­வ­ரும் அவர், ‘மயக்­கம்’ எனும் தமிழ்த் தனிப்­பா­டலை அண்­மை­யில் வெளி­யிட்­டார்.

இசைத்­து­றை­யில் தன்னிச்சைக் கலை­ஞர்­க­ளாக ஷாஃபிக் சையது, பிர­வின் சிவ­ரா­மன் ஆகிய இரு­வ­ரும் காலடி எடுத்­து­வைத்­துள்­ள­னர். ஷாஃபிக் இசை அமைத்­தும் குரல் கொடுத்­தும் உள்ள ‘மயக்­கம்’ பாடலை, பிர­வின் தயா­ரித்­துள்­ளார்.

கடந்த மாதம் இப்­பா­டல் இணை­யத்­தில் வெளி­யானது. ‘ராப்’ இசை இணைக்­கப்­பட்டு, இளை­யர்­களை ஈர்க்­கும் நவீ­ன­ம­ய­மான முயற்­சி­யாக இப்­பா­டல் அமைந்­துள்­ளது. காதல் பாடலான இது, தமி­ழ­கக் கலை­ஞர் எம்சி செந்­த­மி­ழன், மலே­சி­யக் கலை­ஞர் ஷீசே ஆகி­யோ­ரின் பாடல் வரி­களைக் கொண்­டுள்­ளது.

ஆங்­கில ராப் இசை­யில்­தான் ஷாஃபிக்­கின் இசைப்பய­ணம் தொடங்­கி­யது. அதன் பின்­னர் ‘சங்­கீ­தம்’ எனும் அவ­ரின் முதல் தமிழ்த் தனிப்­பா­டல் வெளி­யானது. ‘மயக்­கம்’ இன்­னும் கூடு­த­லான தமிழ் பாடல் வரி­களைக் கொண்டதாக அமை­ய­திட்­ட­மிட்­ட­தாக ஷாஃபிக் கூறி­னார்.

“தமி­ழில் பல சொற்­களைச் சரி­யாக உச்­ச­ரிக்­கா­விட்­டால் அவை தவ­றான பொருள் தரும். உச்­ச­ரிப்­பைத் திருத்­திக்­கொள்ள இந்த அனு­பவம் உத­வி­யது,” என்­றார் 26 வயது ஷாஃபிக்.

அதில் தொடங்­கி பின்­னர் தமி­ழி­சை­யில் கால்­பா­திக்க எண்­ணிய அவ­ருக்கு, பிர­வி­னு­டன் கைகோர்க்­கும் வாய்ப்பு கிட்­டி­யது. இசைத் தயா­ரிப்­பா­ள­ரான 25 வயது பிர­வின், கடந்த ஒன்­றரை ஆண்­டு­கா­ல­மாய் அப்­ப­ணி­யில் முழு­நே­ர­மாக உள்­ளார்.

ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் இசை தொடர்­பான ‘சானிக் ஆர்ட்ஸ்’ பட்­ட­யப்­ப­டிப்பை மேற்­கொண்­டி­ருந்த அவர், இப்­பா­ட­ல் குறித்து கூறு­கை­யில், “சிங்­கப்­பூ­ரில் தமிழ் தன்­னிச்­சைப் பாடல்­கள் கொவிட்-19 காலத்­துக்­குப்­பின் சற்றே தலை­தூக்கி உள்­ளன. ஆனா­லும் இப்­பா­டல்­களுக்கு ஆத­ரவு குறைவு,” என்­றார்.

தன்­னைச் சுற்றி இருந்த பல­ரின் அவ­நம்­பிக்­கை­யும் ஷாஃபிக்­கிற்­குச் சவா­லாக அமைந்­தது.

“இதில் நிலைத்­தி­ருக்க முடி­யுமா என்று என் பெற்­றோ­ரும் நான் சந்­தித்த சில­ரும் கேள்வி எழுப்­பி­னர். ஆனால், இசை­யில் யார் வேண்­டு­மா­னா­லும் தடம் பதிக்­க­லாம் எனும் நிலை சிங்­கப்­பூ­ரில் நில­வு­வது ஆறு­தல் அளிக்­கிறது,” என்­றார் அவர்.

இசைத்­து­றை­யில் நீண்­ட­நாள் பய­ணிக்­கும் ஆர்­வம் கொண்­டிருக்­கும் இரு­வ­ரும் தொடர்ந்து தமி­ழில் தர­மான படைப்­பு­களை முன்­னெ­டுக்­கும் முனைப்­பில் உள்­ள­னர்.

பாட­லைக் கேட்க: https://youtu.be/y-G6A33X6u4

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!